வக்கா

வக்கா என்பது ஒரு பறவையினமாகும். இந்தப் பறவைகள் பகல் முழுவதும் மரங்களில் தங்கி, மாலை மயங்கும் வேளையில் தூக்கத்திலிருந்து விழித்து இரை தேட "வக்" "வாக்" என்று கத்திக்கொண்டே போகும். இரவு முழுவதும் இரை பொறுக்கிக் காலையில் முன்அடங்கிய அதே மரங்களுக்குத் திரும்பும், மக்களும் அவை மரங்களில் தங்குவது அதிர்ஷ்டமென்று எண்ணி அவைகளைத் துரத்தமாட்டார்கள். பருவமடைந்த பறவைக்கு உச்சந்தல், பிடரி, முதுகின் மேல்பாகம், தோள்கள் கறுத்த, பச்சை நிறமாகவும், மற்ற மேற்பாகங்களும் கழுத்தின் பக்கங்களும் சாம்பல் நிறமாகவும், அடிப்பக்கங்கள் வெளுப்பான வைக்கோல் நிறமாகவும் இருக்கும். மூன்று வெள்ளை இறகுகள் கொண்டையாக வளரும்.

உலக முழுவதும் பரவியிருக்கும் ஒரு பறவை. வைக்கோலால் மரங்களில் பெருங்கூடுகள் கட்டி, 3 அல்லது 5 வெளுத்த நீலப்பச்சை முட்டைகளிடும். குஞ்சுகள் பொரித்த பிறகு மாலை மயங்கும் சமயத்தில் தாய் தந்தைப் பறவைகள் காதடைக்கக்கூடிய பெருஞ்சத்தமிடும். ஆர்டியா இனத்தைச் சேர்ந்த நாரை இனமும் "வக்கா" எனப்படுகிறது.[1]

சான்றுகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வக்கா&oldid=3600890" இலிருந்து மீள்விக்கப்பட்டது