விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கவர்


இது தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் வருகின்றது. இந்தக் கொள்கைக்குப் பயனர்களின் பரவலான ஒப்புதல் உண்டு. இந்தக் கொள்கையையும் வழிகாட்டல்களையும் அனைவரும் மதித்து செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. புதுக் கருத்துக்களையும், மாற்றுக் கருத்துகளையும் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கலாம். குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவதாக இருந்தால், அந்த மாற்றங்களை நோக்கி இணக்க முடிவை எட்டிய பின்னர் ஏற்படுத்தவும்.


விக்கிப்பீடியாவில், விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை என்பதானது அதன் ஆசிரியர்களால் ஒரு தலைப்பில் அமைந்த கட்டுரையானது அத்தகைய தகுதிக்குரியதா என்று முடிவு செய்ய மேற்கொள்ளப்படுகின்ற ஒரு சோதனை முயற்சி எனலாம். உதாரணமாக, தனி நபர் ஒருவருடைய வாழ்க்கை வரலாறு தொடர்பான கட்டுரை குறிப்பிடத்தக்க கவனம் பெறுகிறதா என்பதற்கு[1][2]—அதாவது, "குறிப்பிடத்தக்க"[2] அல்லது "முக்கியத்துவம் வாய்ந்த, ஆர்வம் தருகின்ற, அல்லது கவனம் கொள்ளப்படுகிற அல்லது பதியப்படவேண்டிய"[1] விக்கிப்பீடியாவில் எழுதப்படுகிற ஒரு நபரின் வாழ்க்கையைப் பற்றிய ஆவணமாகும். இங்கு "குறிப்பிடத்தக்கமை" என்பதானது புகழ் பெற்ற அல்லது பிரபலமான—பொருத்தமற்று இல்லாதிருப்பினும்—என்ற வகையில் இரண்டாம் நிலையில் அமையும்.

வாழ்க்கை வரலாற்றுக்குறிப்பிற்கான இந்த குறிப்பிடத்தன்மை என்ற வழிகாட்டியானது [3] வளமான உரையாடல்கள் மூலமாகவும், நற்பழக்க அடிப்படையில் பின்பற்றுவதன் மூலமாகவும் விக்கிப்பீடியா:இணக்க முடிவு மூலமாகவும் ஒருமித்த கருத்தினை அடையவும், ஒரு நபரைப் பற்றிய கட்டுரையை எழுதுவதற்கான, இணைப்பதற்கான, நீக்குவதற்கான விக்கிப்பீடியா:நீக்கல் கொள்கை முடிவெடுக்கவும், தொடர்ந்து மேம்படுத்தவும் முடியும். வாழும் மனிதர்களைப் பற்றி எப்படி கட்டுரை எழுதவேண்டும் என்பதற்கு en:Wikipedia:Manual of Style/Biography மற்றும் விக்கிப்பீடியா:வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு என்பனவற்றைக் காணவும்.

ஒரு கட்டுரை எதனைக் குறிக்கிறது என்பதை விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு விளக்கும். ஒரு நபரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுவதற்கு சரியான பொருளடக்கம் இருந்தால், அந்நபரின் பெயரே (அதாவது "சுப்பிரமணியன்" அல்லது "சுப்பிரமணியம்") பொருத்தமான தலைப்பாக அமையும். இருப்பினும், ஒரு நபரைப் பற்றி தொடர்புடைய ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வினைப் பற்றிய செய்தியே கிடைக்கும் நிலையில் நிகழ்வின் அடிப்படையில், உதாரணமாக இராமன் விளைவு, என்ற வகையில் தலைப்பினை அமைத்துக்கொள்ளலாம். சில நேரங்களில், புகழ் பெற்ற நபர் இறக்கும்போது, அவருடைய இறப்பைப் பற்றி போதுமான செய்திகள் கட்டுரை எழுதும் அளவிற்கு இருந்தால் அதனையே, பெனிட்டோ முசோலினியின் இறப்பு, தலைப்பாகக் கொள்ளலாம். குறிப்பிடத்தக்க ஒரு நபரின் முதன்மைக் கட்டுரை, அவரைப் பற்றிய அனைத்துச் செய்திகளையும் கொண்டு பெரிதாக அமையும் நிலையில், அது தொடர்பான தகவலுக்காகத் தனியாக ஒரு பக்கத்தை, en:George Orwell bibliography, என்பது போல உருவாக்கலாம். அந்த நபர் குறிப்பிட்ட கொலையால் பாதிக்கப்பட்டவராக இருப்பின் அதற்கு en:Murder of Kitty Genovese என்பது போன்ற தலைப்பு பொருத்தமாக அமையும்.

அடிப்படைத் தகுதிகள்

[தொகு]

போதுமான அளவில் செய்திகள் வந்திருப்பின் அவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாகக் கருதப்படுகிறார்கள். அவை அதிக எண்ணிக்கையில் வெளியாகியிருக்க வேண்டும்.[4] அவை நம்பக்கூடிய இரண்டாம் நிலைத் தரவாக இருக்கவேண்டும். ஒன்றையொன்று சார்ந்திராத வகையிலும், தனித்த நிலையிலும் அமைந்திருக்கவேண்டும்.[5][6]

  • குறிப்பிட்ட ஆதாரங்களுக்கான செய்தி போதுமான அளவு கிடைக்காவிட்டால், பல வகையான தனித்த நிலையிலான ஆதாரங்களை ஒன்றிணைத்து குறிப்பிடத்தக்கமையை நிறுவலாம்; இரண்டாம் நிலைத் தரவாக அமைந்த, சிறிய அளவிலான செய்திகள் குறிப்பிடத்தன்மையை நிறுவுவதற்குப் போதுமானதாகக் கருதப்படாது.[7]
  • முதன்மை ஆதாரங்களாக உள்ளனவற்றை கட்டுரைக்குத் துணையாகப் பயன்படுத்திக்கொள்ளலாமேயொழிய அவற்றை பொருண்மையின் நம்பகத்தன்மையை நிலைநிறுத்த பயன்படுத்தக்கூடாது.

அடிப்படைத் தகுதிகளைக் கொண்ட நபர்கள், கீழ்க்கண்ட கூடுதல் தகுதிகளைக் கொண்டிராவிட்டாலும், குறிப்பிடத்தன்மை வாய்ந்தவராகக் கருதப்படுவர். குறிப்பிட்ட நிகழ்வின் அடிப்படையிலோ விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று என்பதில் பட்டியலிட்டோருக்கோ கட்டுரைகள் ஆரம்பிக்கப்படக்கூடாது.

கூடுதல் தகுதிகள்

[தொகு]

கீழ்க்கண்ட நிலையில் எந்தத் தகுதியைக் கொண்டிருந்தாலும் அவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாகக் கருதப்படுவர். இவ்வாறான தகுதிகள் இல்லாத பட்சத்தில் அவர்களைச் சேர்த்துக்கொள்ளக்கூடாது; மாறாக, ஒன்றோ அதற்கு மேலோ தகுதிகள் இருப்பின் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று அறுதியிட்டுக் கூறமுடியாது.

இக்கூடுதல் தகுதிகளை ஒரு நபர் கொண்டிருக்காவிட்டால்கூட அவர்கள் விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை என்பதன் அடிப்படையில் குறிப்பிடத்தக்கவராகக் கருதப்படுவார். இத்தகுதிகள் விக்கிப்பீடியருக்கு, கூடுதல் மேற்கோள்கள் தேவைப்படுகிறது {{BLP sources}} என்ற குறிப்பினை அமைக்கவோ, விக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு நடத்தவோ பெரிதும் உதவும்.

  1. ஒரு நபர் புகழ் பெற்ற மற்றும் குறிப்பிடத்தக்க விருதினையோ சிறப்பினையோ பெற்றிருக்க வேண்டும், அல்லது அவ்வாறான ஒரு விருதிற்குப் பல முறை நியமிக்கப்பெற்றிருக்கவேண்டும்.
  2. ஒரு நபர் பரந்துபட்ட அளவில் குறிப்பிட்ட ஒரு துறையில் வரலாற்று சிறப்புமிக்க சாதனை படைத்து பெரும் பங்கு அளித்திருக்கவேண்டும்.[8]
  3. ஒரு நபரைப் பற்றிய பதிவு தேசிய அளவிலான சுயவரலாறு பற்றிய அகரமுதலியிலோ அதையொத்த நூலிலோ இடம் பெற்றிருக்கவேண்டும்.

கல்வியாளர்கள்

[தொகு]

பெரும்பாலான அறிவியலாளர்கள், ஆய்வாளர்கள், தத்துவவாதிகள் மற்றும் பிற அறிஞர்கள் ஆகியோர் "கல்வியாளர்கள்" என்றழைக்கப்படுகின்றனர். அவர்கள் சிந்தனையளவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தினை, வாழ்க்கை வரலாற்றில் இரண்டாம் நிலைத் தரவிற்கான பொருண்மைக்குரியவர்கள் என்ற பாகுபாடின்றி, உண்டாக்கியவர் ஆவர்.

படைப்பாளிகள்

[தொகு]

எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், இதழாளர்கள், திரைப்படம் தயாரிப்பவர்கள், ஒளிப்படக்கலைஞர்கள், கலைஞர்கள், கட்டடக்கலைஞர்கள், மற்றும் பிற படைப்பாற்றல் கொண்டவர்கள்:

  1. உடன் இருப்போராலும், அவருக்குப் பின் வருபவர்களாலும் முக்கியமான நபராக மேற்கோள் காட்டப்படும் நபர்.
  2. ஒரு முக்கியத்துவம் வாய்ந்த புதிய உத்தி, கோட்பாடு, நுட்பத்தை ஆரம்பித்து வைக்கின்ற நபர்.
  3. உடன் இணைந்து ஒரு முக்கியமான அல்லது புகழ்பெற்ற பணியையோ, கூட்டு முயற்சியிலான பணியையோ மேற்கொண்ட அல்லது அத்தகைய பணியில் பெரும் பங்கு வகித்த ஒரு நபர்.மேலும் அத்தகு பணியானது (உதாரணமாக, ஒரு நூல், திரைப்படம், அல்லது தொலைக்காட்சி தொடர், ஆனால் தொலைக்காட்சித் தொடரின் ஒரு அத்தியாயம் அல்ல) ஒரு குறிப்பிடத்தக்க அல்லது சுதந்திரமான முதன்மைப் பொருண்மையாக அமையவேண்டும். அல்லது மேலும், அப்பணியானது ஒரு சுதந்திரமான, குறிப்பிடத்தக்க பணியின் முதன்மைப் பொருண்மையாகவோ பலதரப்பட்ட பருவ இதழ்களின் கட்டுரைகளை அல்லது மதிப்புரைகளாகவோ இருக்கலாம்.
  4. ஒரு நபரின் பணி (அல்லது பணிகள்) பின்வரும் கூறுகளைக் கொண்டிருக்கவேண்டும்: (அ) குறிப்பிடத்தக்க நினைவுச்சின்னமாக இருக்கவேண்டும், (ஆ) குறிப்பிடத்தக்க கண்காட்சியின் போதுமான ஒரு பகுதியாக அமையவேண்டும், (அ) திறனாய்வு அடிப்படையிலான கவனத்தைப் பெற்றிருக்கவேண்டும், அல்லது (ஈ) அருங்காட்சியகங்கள் அல்லது பல குறிப்பிடத்தக்கக் காட்சிக்கூடங்களில் நிலையான சேகரிப்புகளாக இடம் பெற்றிருக்க வேண்டும்.

குற்றத்தால் பாதிக்கப்பட்டோர் மற்றும் குற்றமிழைத்தோர்

[தொகு]

ஒரு குற்ற நிகழ்வுடனோ விசாரணையுடனோ தொடர்புடைய ஒரு நபருக்கு தனியாக ஒரு கட்டுரை தேவையில்லை.

ஒரு வேளை தனியாக ஒரு கட்டுரை முன்னரே இருக்கும் நிலையில், கட்டுரையின் அளவினைப் பொறுத்து தேவைப்பட்டால் மட்டுமே ஒரு துணைக்கட்டுரையை உருவாக்கலாம்.

பொருத்தமான உரிய கட்டுரைகள் இல்லாத நிலையில், குற்றத்தால் பாதிக்கப்பட்டவருக்காகவோ, குற்றமிழைத்தவருக்காகவோ கட்டுரைகள் எழுதும்போது கீழ்க்கண்டவற்றில் ஏதாவது ஒன்று இருக்கவேண்டியது அவசியமாகும்:

பாதிக்கப்பட்டோர், மற்றும் தவறாகக் குற்றம் சாற்றப்பட்டோர் அல்லது குற்றம் புரிந்தவராக தவறாகக் கருதப்படுபவர்,

  1. சக மனிதரோடு கருதப்படுகின்ற பாதிக்கப்பட்டோர் அல்லது குற்றம் புரிந்தவராக தவறாகக் கருதப்படுபவர் சக மனிதரைப்போல ஒரு பெரும் பங்கினை வகிக்கிறார். வரலாற்று முக்கியத்துவம் என்பதானது போதிய நம்பக்கூடிய இரண்டாம் நிலைத்தரவாகப் பகிரப்பட்டு அவருடைய பங்களிப்பானது போதிய கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கவேண்டும்.[9]

குற்றமிழைத்தோர்,

  1. குற்றத்தால் பாதிக்கப்பட்டவர் அரசியல்வாதியாகவோ அனைவருக்கும் தெரிந்த நபராகவோ மட்டுமன்றி, பலரும் அறிந்த தேசிய அல்லது உலகளாவிய நபர்.[10]
  2. குற்றத்திற்கான நோக்கம் அல்லது செயல்பாடானது வழக்கத்திற்கு மாறாக இருத்தல்—அல்லது பிற வகையில் முக்கியமானதாகக் கருதப்படுதல்—அதாவது ஒரு வரலாற்று நிகழ்வாக ஆவணப்படுத்தப்பட்டிருத்தல். பொதுவாக, வரலாற்று முக்கியத்துவம் என்பதானது இயல்பான நாளிதழ் செய்திகளுக்கு அப்பாற்பட்டு அதிக அளவில் செய்திகள் வெளியான அளவில் இரண்டாம் நிலைத்தரவாகக் கொள்ளுமளவிற்கு அமைவதோடு, அந்த நபரின் பங்களிப்பிற்கு முக்கியத்துவம் தரப்பட்டிருத்தல்.[11]
    • குறிப்பு: குற்றம் சாற்றப்பட்ட நபர், நீதிமன்றத்தில் மாறுபட்ட நிலையில் தீர்ப்பளிக்கப்படும் வரை, குற்றம் புரிந்தவர் எனக் கருதப்படமாட்டார். இவ்வாறாக குற்றம் சாற்றப்பட்டவராக கருதப்படும் ஒரு நபர் மீது, அவர்மீது அவ்வாறு முடிவெடுக்கப்படும் வரையிலும், விக்கிப்பீடியர்கள் கட்டுரை எழுதாமலிருப்பது சிறந்தது.

பொழுதுபோக்குக்கலைஞர்கள்

[தொகு]

நடிகர்கள், குரல் தரும் நடிகர்கள், நகைச்சுவை நடிகர்கள், கருத்தியரலாளர்கள், மாடல்கள், மற்றும் பிரபலமானவர்கள்:

  1. பல குறிப்பிடத்தக்க திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும், நாடகங்களிலும் பிறவற்றிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றியிருக்கவேண்டும். முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கவேண்டும்.
  2. அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களையோ, குறிப்பிடத்தக்க அளவில் தனக்கென ஒரு "ரசிகர் கூட்டத்தையோ" கொண்டிருக்கவேண்டும்.
  3. ஒரு பொழுதுபோக்குத் துறையில் தனித்தன்மை வாய்ந்த, வளமை சார்ந்த அல்லது புதுமையான பங்களிப்பினை அளித்திருக்கவேண்டும்.

இராணுவ வீரர்கள்

[தொகு]

அரசியல்வாதிகள் மற்றும் நீதிபதிகள்

[தொகு]

கீழ்க்கண்டவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாகக் கருதப்படுகிறார்கள்:

  • உலகளாவிய, தேசிய, அல்லது (for countries with federal or similar systems of government) மாநில/பிராந்திய அளவிலான பொறுப்புகள் வகித்த அரசியல்வாதிகள் மற்றும் நீதிபதிகள், அல்லது அவ்வகையில் சட்டமன்ற அமைப்புகள் என்ற நிலையில் பொறுப்பு வகித்தவர்கள்.[12] இத்தகுதியானது அவ்வாறான பொறுப்பிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவி ஏற்காதவர்களுக்கும் பொருந்தும்.
  • போதிய அளவில் ஊடகங்களில் பேசப்படுகின்ற, பெரும் அளவிலான அரசியல் தலைவர்கள்.[8]

உள்ளூர் நிலையில் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்வரோ, Just being an elected local official, or குறிப்பிட்ட அரசியல் பதவிக்காக தேர்ந்தெடுக்கப்படாத an unelected உறுப்பினரோ குறிப்பிடத்தக்கவராகக் கருதப்படுவதற்கு உத்திரவாதம் தர முடியாது. இருந்தபோதிலும் விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமையில் உள்ள தகுதிகளைப் பெற்றிருந்தால்கூட அவ்வாறானவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாகக் கருதப்படுவர்.

விளையாட்டு வீரர்கள்

[தொகு]

A sportsperson is presumed to be notable if the person has actively participated in a major amateur or professional competition or won a significant honor and so is likely to have received significant coverage in reliable secondary sources that are independent of the subject.

செல்லாத தகுதிகள்

[தொகு]
  • நபர் புகழ்பெற்ற நபரான வின் உறவினர் என வைத்துக்கொள்வோம். துணை அல்லது குழந்தை என்ற நிலையில், (நபர்வைப் பற்றி போதுமான செய்திகள் கிடைக்காத நிலையில்) நபர் வுக்குத் தனியாக ஒரு கட்டுரை இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. இருப்பினும், நபர் வினை நபர் தொடர்புடைய கட்டுரையோடு இணைக்கலாம். அவ்வாறாக இருப்பின் நபர் பற்றிய கட்டுரையோடு நபர் தொடர்பான கட்டுரையை இணைத்துவிடலாம்.
  • தேடுபொறிகளான கூகிள் தேடல் or Alexa போன்ற அடிப்படையிலோ, இணையத்தில் வெளியாகியுள்ள ஒளிப்படங்களின் எண்ணிக்கை அளவிலோ அமையும் தகுதிகளைத் தவிர்க்கலாம். உதாரணமாக, தரத்தில் பாதிப்பை உண்டாக்குவதற்காக அடல்ட் திரைப்படத் தொழில்முகமை (The adult film industry) Googlebombingஐப் பயன்படுத்துகிறது.[13] மேலும், பெரும்பாலான தலைப்புகளுக்கு தேடுபொறிகளால் பயனுள்ள மேற்கோள்களுக்கும் சாதாரண உரைக்கும் இடையே காணலாகும் வேறுபாடுகளை வேறுபடுத்திக் காணமுடியாது. உதாரணமாக, Alexa Toolbar பயனுள்ளதாக இருக்கும்போது, அதன் பயன்பாடு என்பதானது பயன்படுத்துவோர் நிலையில் (எண்ணிக்கை மற்றும் விருப்பம்) மிகவும் குறைந்த அளவே உள்ளது. தரவு பற்றாக்குறையானது குறைந்த அளவிலான தரவு error marginsகளை உண்டாக்குகிறது. ஒரு தலைப்பின் குறிப்பிடத்தன்மையை நிறுவுவதற்காக, இணைப்புகளின் தரத்தை மதிப்பீடு செய்வதே சாலச்சிறந்தது, எண்ணிக்கையை அல்ல. ஒரு தேடுபொறியைப் பயன்படுத்தும்போது

அனைத்துத் தகுதிகளிலும் தோற்றல்

[தொகு]

If no criterion can be met for either ஒரு குறிப்பிட்ட தனிக்கட்டுரை அல்லது பெரும்பாலும் பொதுவான ஒரு கட்டுரைக்கான தகுதிகள் இல்லாத நிலையிலோ, மேலும் மேம்படுத்த இயலா நிலையிலோ அல்லது முயற்சி மேற்கொள்ளப்படக்கூடிய முடியாத நிலையிலோ மூன்று வகையானம நீக்கல் நடவடிக்கைகளைப் பற்றிச் சிந்திக்கலாம்.:[14]

சிறப்பு நிகழ்வுகள்

[தொகு]

அடிப்படைத் தகுதிகள் இல்லாமை, ஆனால் கூடுதல் தகுதிகள் உள்ளமை

[தொகு]

ஒரு கட்டுரைக்கு திருப்திதரும் வகையிலான விளக்கமும், பொருத்தமான ஆதாரங்களும் இல்லாத நிலையிலும்கூட, அந்த நபர் கீழ்க்கண்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூடுதல் தகுதிகளைப் பெற்றிருந்தால்:

  • ஒரு பெரிய கட்டுரையுடன், போதிய செய்திகளைத் தந்து இணைக்கலாம்.
  • உரிய பக்கத்தில் {{Mergeto}} இட்டு, அக்கட்டுரையை எவ்விடத்தில் இணைக்கலாம் என்பதைச் சுட்டலாம்.
  • எக்கட்டுரையோடு இணைக்கப்படவேண்டுமோ அந்நபரைப் பற்றிய கட்டுரை எதுவும் தற்போது இல்லாத நிலையில், நீங்களே அக்கட்டுரையை எழுத முயற்சிக்கலாம். அல்லது கட்டுரை எழுத வேண்டுகோள் வைக்கலாம்.

ஒரு பொருண்மையின் குறிப்பிடத்தக்கமையை விளக்க இயலா நிலை

[தொகு]

ஒரு கட்டுரை அதன் பொருண்மையின் குறிப்பிடத்தக்கமையை விளக்கா நிலையில்,[15] அதனை கீழ்க்கண்ட வகையில் மேம்படுத்த முயற்சிக்கலாம்:

போதிய ஆதாரங்கள் இல்லாமை

[தொகு]

xரு கட்டுரை போதிய ஆதாரங்களை சுட்டத் தவறும் நிலையில்:

  • ஆதாரங்களை நீங்களே தேடலாம்.
  • ஆதாரங்களை எங்கு காணலாம் என்று கட்டுரை ஆசிரியர் (ஆசிரியர்களைக்) கேட்கலாம்.
  • {{notability|biographies}} இட்டு பிற சக விக்கிபீடியர்களுக்குத் தெரிவிக்கலாம்.
  • கட்டுரையானது குறிப்பிட்ட ஒரு துறையைச் சார்ந்ததாக இருந்தால், {{expert needed}} என்பதைப் பயன்படுத்தி விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் என்பதோடு இணைத்து, bதாடர்புடைய துறையில் புலமை பெற்ற விக்கிப்பீடியர்களின் கவனத்தை ஈர்க்கலாம். அவர்கள் இணையத்தில் கிடைக்காத. நம்பத்தகுந்த ஆதாரங்களை, எளிதாகப் பெற வாய்ப்புண்டு.

குறிப்பிட்ட ஒரு நிகழ்விற்காகக் குறிப்பிடத்தக்கவர்கள்

[தொகு]

குறிப்பிட்ட ஒரு நிகழ்வில் ஓர் ஆணோ அல்லது பெண்ணோ முக்கியத்துவம் பெற்ற நிலையில் அந்த குறிப்பிட்ட நபரைப் பற்றியோ, நிகழ்வினைப் பற்றியோ அல்லது இரண்டையும் பற்றியோ ஒரு கட்டுரை எழுத வேண்டுமா என்ற தெளிவு இல்லாத நிலை ஏற்படும். தனியாக கட்டுரைகள் எழுதவேண்டும் என்று கருதும்போது நிகழ்வின் முக்கியத்துவத்தின் நிலை மற்றும் அதில் அந்த நபரின் பங்கு ஆகிய இரண்டும் கருதப்படவேண்டும். இங்கு பொதுவான விதி நிகழ்வினை நோக்கியேயன்றி, அந்த நபரை நோக்கியல்ல. இருப்பினும், ஊடகங்களில் அதிகமான செய்தியானது நிகழ்வினைப் பற்றியும், நபரைப் பற்றியும் அதிகமாக இருக்கும் நிலையில் தனித்தனியாகக் கட்டுரைகள் எழுதுவதே நியாயமாகும்.[16]

நிகழ்வானது அதிக முக்கியத்துவம் பெற்ற நிலையிலும், அதில் அந்த நபரின் பங்கானது அதிக முக்கியத்துவம் பெற்ற நிலையிலும், பொதுவாக தனி கட்டுரை எழுதுவதே பொருத்தமானதாக அமையும். பெரிய அரசியல் தலைவர்களைத் திட்டமிட்டு கொலை செய்வது இவ்வகையில் அடங்கும். உதாரணமாக, விக்கிப்பீடியா:நம்பகமான மூலங்கள் என்பதில் தனி நபரின் பங்களிப்பு என்ற நிலையில் நிகழ்வானது அதிகமாகப் பேசப்பட்ட நிலையில், காவ்ரீலோ பிரின்சிப் என்ற கட்டுரையானது இதற்குப் பொருத்தமாக அமையும்.

அந்நிகழ்வில் ஒரு நபரின் பங்கானது குறைந்த முக்கியத்துவம் பெறும்போது, தனி கட்டுரை எழுதவேண்டிய அவசியம் இல்லை. மேலும் ஒரு வழிமாற்று என்பதானது பொருத்தமாக அமையும். உதாரணமாக, who videotaped , ரோட்னி கிங் Rodney King அடிக்கப்படுவதை ஜார்ஜ் ஹாலிடே George Holliday வீடியோ எடுத்தார். அச்சூழலீல் கட்டுரையானது ரோட்னி கிங் என்ற தலைப்பிலான கட்டுரைக்கு வழிமாற்றம் செய்யப்பட்டது. மாறாக, போதுமான அளவில் முக்கியத்துவம் பெற்றிருந்தால், குறைந்த அளவிலான நபர்கள் இருந்தால்கூட தனிக்கட்டுரைக்கான முக்கியத்துவத்தைப் பெறுகிறது. உதாரணமாக ஜான் எஃப். கென்னடி கொலையின் முக்கிய சாட்சியான ஹோவர்ட் ப்ரீனன் Howard Brennan கட்டுரையினைக் கூறலாம்.

ஒரு சிறிய நிகழ்வில் ஒரு நபர் பெரிய பங்கினை ஆற்றும்போது பிறிதொரு சிக்கல் எழுகிறது. இச்சூழலில், அந்த நபரைப் பற்றியோ, நிகழ்வினைப் பற்றியோ தனித்தனியாகக் கட்டுரைகளை எழுதுவது பொருத்தமாகாது. பொதுவாக இதனைப் பொறுத்தவரை, அந்த நபர் அந்நிகழ்வினைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானவராகக் கருதப்பட்டாலோ, அந்த நபரைப் பற்றி போதுமான அளவில் செய்திகள் வெளிவந்திருந்தாலோ, நபரின் பெயரானது தொடர்பான நிகழ்விற்கு வழிமாற்று செய்யப்படவேண்டும். உதாரணமாக, Steve Bartman கட்டுரையானது Steve Bartman incident கட்டுரைக்கு வழிமாற்று செய்யப்படுகிறது. இருப்பினும், சில குறிப்பிடத்தக்க இனங்களில், ஒரு நபர் ஒரு நிகழ்விற்காக மட்டுமே அறியப்பட்டிருப்பின், நிகழ்வினைக் காட்டிலும் அதிகமாக அறியப்பட்டவராக இருப்பின் பீரங்கி வண்டி மனிதன் என்ற வகையில் கட்டுரையினை அமைக்கலாம். அதுபோன்ற இனங்களில், அந்த நபரைக் காட்டிலும் தொடர்புடைய நிகழ்வின் அடிப்படையில் பொருத்தமான தலைப்பினை அமைக்கலாம்.

விக்கிப்பீடியர்கள் விக்கிப்பீடியா:நடுநிலை நோக்கு என்பதன் அடிப்படையில் மிகவும் தெளிவாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். இதன்மூலமாக அனாவசியமாக கட்டுரை pseudo-biographies உருவாக்கப்படுவது, குறிப்பாக விக்கிப்பீடியா:வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு எழுதுவது, தவிர்க்கப்படும்.

"குறிப்பிடத்தக்க" என்பதை "புகழ் பெற்ற" என்ற அளவில் பொருள் கொள்ளக்கூடாது. இதனை மனதில் நிறுத்திக்கொள்வது மிகவும் அவசியமாகும். ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்வின் அடிப்படையிலன்றி, ஒரு குறிப்பிட்ட நிகழ்வின் காரணமாக சிலர் புகழ் பெற்றிருக்கலாம். ஆனால் significant coverage என்பதானது தொடர்புடைய நபரின் நிகழ்வினை நோக்கியே அதன் இலக்கு அமைந்திருக்கும்.

நபர்களின் பட்டியல்கள்

[தொகு]

பெரும்பாலான கட்டுரைகள் (அல்லது தனித்த கட்டுரைகள்) நபர்களின் பட்டியல்களைக் கொண்டு அமைந்துள்ளன. அவற்றை தனித்த கட்டுரைகள் stand-alone lists என்பதோடு இணைக்கும் முன்பாக அப் பக்கத்திற்கான உரிய தகுதிகளைப் பெற்றுள்ளதா the normal criteria established for that page என்பதை கருத்தில்கொள்ள வேண்டும். கட்டுரைகளுக்கிடையேயான பட்டியல்களில் சேர்ப்பதானது Inclusion in lists contained within articles WP:SOURCELIST என்ற அடிப்படையில் அமையவேண்டும். அவ்வாறான நிகழ்வுகளில் பதிவுகளும், ஒரேவகையிலான பொருண்மையிலான முக்கியத்துவத்தினைப் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அது விக்கிப்பீடியா நெறிமுறைகளின்படி அமைகிறதா என்பதையும் மனதில் கொள்ளவேண்டும். (including Wikipedia:Trivia sections).

குடும்பம்

[தொகு]

ஒரு குறிப்பிடத்தக்க நபருடன் தொடர்புடையவராக இருப்பது, அந்த நபருக்கு எந்த அளவிலான குறிப்பிடத்தக்க தன்மையையும் வழங்காது. குறிப்பிடத்தகுந்த நபர்களைப் பற்றிய கட்டுரைகள், தங்கள் குடும்ப உறுப்பினர்களைக் குறிப்பிடும் போது, ​​ஒரு குடும்ப உறுப்பினர் குறிப்பிடத்தக்கவர் என்பதைக் காட்டுவதில்லை.

விக்கிப்பீடியர் குறித்த கட்டுரைகள்

[தொகு]

சில விக்கிப்பீடியர்கள் விக்கிப்பீடியா:விக்கிப்பீடியர்கள் குறித்து கட்டுரைகள் உருவாக்கப்பட்டிருக்கலாம். எவ்வாறாயினும், விக்கிபீடியாவில் கட்டுரை உருவாக்குவதற்கு முன்னரோ அல்லது அதற்குப் பின்னரோ இவர்கள் விக்கிப்பீடியர்களாக ஆனார்கள இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், விக்கிப்பீடிர்களின் தகுதியின் குறிப்பிடத்தக்க தன்மையில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.[17] (The conflict of interest guideline still has bearing on their editing of articles about themselves.) அனைத்து கட்டுரைகளையும் பொருந்தக்கூடிய உள்ளடக்கம் மற்றும் உள்ளடக்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் வழிகாட்டுதல் கொள்கைகளால் மட்டுமே மதிப்பிடப்பட வேண்டும். விக்கிப்பீடியா:வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு, விக்கிப்பீடியா:புத்தாக்க ஆய்வு கூடாது, and விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை.

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Notable". Encarta. 
  2. 2.0 2.1 "Notable". American Heritage Dictionary. 
  3. மிகவும் நெருக்கமான தொடர்பு கொண்ட நபர்களைக் கொண்ட சிறிய குழுக்களான குடும்பங்கள், இணை ஆசிரியர்கள், இணை கண்டுபிடிப்போருக்குப் பொருந்தும். நெருக்கமான தொடர்பில்லாத நபர்களைக் கொண்ட குழுவினருக்கு இது பொருந்தாது. notability guideline for organizations and companies.
  4. What constitutes a "published work" is deliberately broad.
  5. Sources that are pure derivatives of an original source can be used as references, but do not contribute toward establishing the notability of a subject. "Intellectual independence" requires not only that the content of sources be non-identical, but also that the entirety of content in a published work not be derived from (or based in) another work (partial derivations are acceptable). For example, a speech by a politician about a particular person contributes toward establishing the notability of that person, but multiple reproductions of the transcript of that speech by different news outlets do not. A biography written about a person contributes toward establishing their notability, but a summary of that biography lacking an original intellectual contribution does not.
  6. Autobiography and self-promotion are not the routes to having an encyclopedia article. The barometer of notability is whether people independent of the subject itself have actually considered the subject notable enough that they have written and published non-trivial works that focus upon it. Thus, entries in biographical dictionaries that accept self-nominations (such as the Marquis Who's Who) do not contribute toward notability, nor do web pages about an organization's own staff or members.
  7. Non-triviality is a measure of the depth of content of a published work, and how far removed that content is from a simple directory entry or a mention in passing ("John Smith at Big Company said..." or "Mary Jones was hired by My University") that does not discuss the subject in detail. A credible 200-page independent biography of a person that covers that person's life in detail is non-trivial, whereas a birth certificate or a 1-line listing on an election ballot form is not. Database sources such as Notable Names Database, ஐ. எம். டி. பி இணையத்தளம் and Internet Adult Film Database are not considered credible since they are, like many விக்கிs, mass-edited with little oversight. Additionally, these databases have low, wide-sweeping generic standards of inclusion. In addition, in cases like the Internet Movie Database, inclusion is routine for people in the associated domain and can therefore especially not be taken as evidence of notability.
  8. 8.0 8.1 Generally, a person who is "part of the enduring historical record" will have been written about, in depth, independently in multiple history books on that field, by historians. A politician who has received "significant press coverage" has been written about, in depth, independently in multiple news feature articles, by journalists. An actor who has been featured in magazines has been written about, in depth, independently in multiple magazine feature articles, by magazine article writers. An actor or TV personality who has "an independent biography" has been written about, in depth, in a book, by an independent biographer.
  9. Example: Matthew Shepard.
  10. Example: நாத்தூராம் கோட்சே
  11. Example: Seung-Hui Cho.
  12. This is a secondary criterion. People who satisfy this criterion will almost always satisfy the primary criterion. Biographers and historians will usually have already written about the past and present holders of major political offices. However, this criterion ensures that our coverage of major political offices, incorporating all of the present and past holders of that office, will be complete regardless.
  13. Adrian Degus (2014-02-19). "SEO: Linking Up in 2014". XBIZ. பார்க்கப்பட்ட நாள் 26 February 2014. Since the early days of our industry we have relied on a standard set of methods to rank our sites for popular keywords, specifically buying and trading links. These two methods have always gone against Google's guidelines, they just didn't have a reliable way to detect it until now.
  14. Wikipedia editors have been known to reject nominations for deletion that have been inadequately researched. Research should include attempts to find sources which might demonstrate notability, and/or information which would demonstrate notability in another manner.
  15. The text of an article should include enough information to explain why the person is notable. External arguments via a talk page or AFD debate page are not part of the article itself, and promises on those pages to provide information are not as valid as the existence of the information on the article page itself.
  16. It is important for editors to understand two clear differentiations of விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கவர் when compared to விக்கிப்பீடியா:வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு. Firstly, விக்கிப்பீடியா:வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு should be applied only to biographies of living people, or those who have recently died. Secondly, விக்கிப்பீடியா:வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு should be applied only to biographies of low profile individuals.
  17. While actions on Wikipedia can lead to notable topics, such as the Wikipedia Seigenthaler biography incident and the Essjay controversy, the information in those articles is based on independent, third-party sources talking about Wikipedia, rather than Wikipedia itself.