விக்கிப்பீடியா:நடுநிலை நோக்கு
தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள் |
---|
ஐந்து தூண்கள் |
தமிழ் விக்கிபீடியாவின் உள்ளடக்கம் |
நடுநிலை நோக்கு |
தமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல் |
கண்ணியம் |
தமிழ் விக்கிபீடியாவின் கட்டுரைகள் நடுநிலை நோக்கோடு எழுதப்படவேண்டும். அதாவது அனைத்து முக்கிய பார்வைகளுக்கும் தகுந்த, நியாயமான இடம் தரப்பட வேண்டும். அந்தப் பார்வைகள் பக்கச்சார்பை வலியுறுத்தாமல் ஆதாரபூர்வமான தகவல்களை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும்.
நடுநிலைமை விக்கிப்பீடியாவினதும், தமிழ் விக்கிப்பீடியாவினதும் ஆணிவேர்க் கொள்கைகளில் ஒன்று. இந்தக் கொள்கை, பல்வேறு பயனர்களின் பங்களிப்பை உள்வாங்கி் உள்வாங்கித் தமிழ் விக்கிப்பீடியாவின் குறிக்கோளான எளிய தமிழில், தரமான கலைக்களஞ்சியத்தை ஆக்குவதை ஏதுவாக்குகின்றது.
நடுநிலைமைக் கொள்கையை விளங்கிக் கொள்ளல்
[தொகு]சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி. - திருக்குறள் 118
முரண்பாடுகளும் நடுநிலைமையும்
[தொகு]நடுநிலைமை என்பது, ஒரு விடயம் நோக்கி முரண்படும் கருத்துடைய பார்வைகளை, ஒரே கட்டுரையில் பகிர வசதிசெய்யும் ஒரு வழிமுறை ஆகும். ஆனால் இது அனைத்துப் பார்வைகளுக்கும் சமஉரிமை, சமமுக்கியத்துவம் தருவதென்று பொருள்படாது. நடுநிலை நோக்கு என்பது, அனைத்து முக்கியப் பார்வைகளுக்கும் தகுந்த நியாயமான இடம் தரப்படவேண்டும் என்றே வேண்டுகின்றது.
கருத்து வேறுபாடுகள் விவரிக்கப்படலாம், பகிரப்படலாம்; ஆனால், கருத்துவேறுபாடானது, இழுபறியில் ஈடுபடக்கூடாது. துல்லியமான கட்டுரைகள், கருத்துக்களை நோக்கிய மதிப்பீடுகளை முன்வைக்கலாம்; ஆனால், தீர்க்கமான பக்கச் சார்பான முடிவுகளை முன்வைக்கக்கூடாது.
உண்மையும் நடுநிலைமையும்
[தொகு]'உண்மைக்கு முன், நடுநிலைமை என்பது இல்லை' என்பது சரியே. உண்மையான நோக்கில் தகவல்களைத் தரும்பொழுது "நடுநிலைமை கலைவதில்லை"[1]. ஆனால், ஒரு பக்கப் பார்வையே உண்மையானது; மற்றவருடைய பார்வை பொய்யானது என்ற கருத்து இழுபறியில் ஈடுபடுவதைத் தமிழ் விக்கிப்பீடியா அனுமதிக்காது. பார்வைகளை ஆதாரப்பூர்வமாக நிலைநிறுத்திப் பயனர்கள் முடிவுசெய்வதற்கு வசதிசெய்வதே, தமிழ் விக்கிப்பீடியாவின் நடுநிலை நோக்கின் தன்மையாகும்.
பக்கச்சார்பும் நடுநிலைமையும்
[தொகு]இயன்றவரை விடயநோக்காகவும், ஆதாரபூர்வமான தகவல்களின் அடிப்படையிலும், ஒரு பக்கச்சார்பின்றியும் தமிழ் விக்கிப்பீடியாவின் கட்டுரைகள் எழுதப்பட வேண்டும் என்பதையே நடுநிலைமை நோக்கு வேண்டுகின்றது. எனினும், `மனிதர்களுக்குப் பக்கச்சார்பு எதோ ஒருவகையில் இயல்பாகவே அமையும்` என்ற கூற்றில் உண்மையுண்டு. அவற்றை அவதானித்துத் தவிர்ப்பது நன்று. ஒருவருடைய எழுத்தில் பின்வரும் பக்கசார்புகள் இருக்கலாம்:
- வர்க்கம் அல்லது சாதிச் சார்பு
- குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது கோட்பாட்டுச் சார்பு
- சமயச் சார்பு
- ஆண் ஆதிக்கச் சார்பு
- பால் நிலைச் சார்பு
- இனச் சார்பு
- தேசியச் சார்பு
Templates
[தொகு]இப்பக்கம் தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
- General NPOV templates:
- {{POV}}—message used to attract other editors to assess and fix neutrality problems
- {{POV-check}}—message used to request that an article be checked for neutrality
- {{POV-section}}—message that tags only a single section as disputed
- {{POV-lead}}—message when the article's introduction is questionable
- {{POV-title}}—message when the article's title is questionable
- {{POV-statement}}—message when only one sentence is questionable
- {{NPOV language}}—message used when the neutrality of the style of writing is questioned
- {{ASF}}—message when a sentence may or may not require in-text attribution (e.g., "Jimmy Wales says")
- {{Attribution needed}} — when on-text attribution should be added
- Undue-weight templates:
- {{Undue}}—message used to warn that a part of an article lends undue weight to certain ideas relative to the article as a whole
- {{Undue-section}}—same as above but to tag a section only
- {{Undue-inline}}—same as above but to tag a sentence or paragraph only
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "உன்மையின் பக்கம் சாய்வதில் நடுநிலைமை கலைவதில்லை." சுஜாதா http://www.ambalam.com/sujatha/2002/april/sujatha14_01.html
வெளி இணைப்புகள்
[தொகு]- சிறந்த பத்திரிகை நடைமுறைக்கான பகுப்பாய்வும் வழிகாட்டலும் -
- http://video.google.ca/videoplay?docid=-8662215365427258604&q=neutral+point+of+view Jimmy Wales - Keeping Wikipedia Politically Neutral