வ. நல்லையா
வி. நல்லையா V. Nalliah | |
---|---|
அஞ்சல், தொடர்புத்துறை அமைச்சர் | |
பதவியில் 19 சூன் 1952 – 12 சூலை 1952 | |
இலங்கை அரசாங்க சபை உறுப்பினர் திருகோணமலை-மட்டக்களப்பு | |
பதவியில் 1943–1947 | |
இலங்கை நாடாளுமன்றம் கல்குடா | |
பதவியில் 1947–1956 | |
பின்னவர் | ஏ. எச். மாக்கான் மாக்கார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 9 அக்டோபர் 1909 |
இறப்பு | திசம்பர் 27, 1976 | (அகவை 67)
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கிழக்கு மாகாண மக்கள் கட்சி |
தொழில் | ஆசிரியர் |
இனம் | இலங்கைத் தமிழர் |
வல்லிபுரம் நல்லையா (Vallipuram Nalliah, 10 செப்டம்பர் 1909 - 27 டிசம்பர் 1976) இலங்கைத் தமிழ் ஆசிரியரும், அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சரும் ஆவார்.
ஆரம்ப வாழ்க்கை
[தொகு]நல்லையா 1909 அக்டோபர் 9 இல்[1] மட்டக்களப்பு, புளியந்தீவு என்ற கிராமத்தில் பிறந்தவர். புனித மிக்கேல் கல்லூரியில் படித்து, லண்டன் மெற்ரிக்குலேசன் கலைப் பட்டதாரி ஆனார். மகரகமை ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் பயின்று பயிற்சி பெற்ற ஆசிரியரானார்.[2] 1929இல் சிவானந்தா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்த நல்லையா,1937இல் அப்பாடசாலையின் பிரதி அதிபரானார்.[3] பின்னர் அட்டாளச்சேனை ஆண்கள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தலைமை ஆசிரியரானார். தங்கரத்தினம் முத்தையா என்பவரைத் திருமணம் புரிந்தார்.[2] மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.[2]
அரசியலில்
[தொகு]நல்லையா 1943 ஆம் ஆண்டில் திருகோணமலை-மட்டக்களப்புத் தொகுதிக்கு இடம்பெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அரசாங்க சபைக்குத் தெரிவானார்.[2] 1947 நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக கல்குடா தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[4] பின்னர் டொன் ஸ்டீபன் சேனாநாயக்கவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். இதனை அடுத்து அவர் சுகாதாரம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டார்.[2] 1952 தேர்தலில் ஐதேக வேட்பாளராகப் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[5] இவர் சிறிது காலம் டட்லி சேனாநாயக்கவின் அமைச்சரவையில் அஞ்சல், தொடர்புத்துறை அமைச்சராகப் பதவியில் இருந்தார்.[6]
1956 தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[7] 1960 மார்ச் தேர்தலிலும் தோல்வியடைந்தார்.[8] பின்னர் இவர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக 1965 தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் தோல்வியடைந்தார்.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nalliah, Vallipuram". இலங்கைப் பாராளுமன்றம்.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. pp. 116–117.
- ↑ கவிக்கோ வெல்லவூர்க் கோபால், "வாழும் மனிதம்", பக். 44, அமரர். வி.நல்லையா, அமரர் நல்லையா நினைவுப் பணி மன்றம், 2015 மட்டக்களப்பு
- ↑ "Result of Parliamentary General Election 1947" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-08-18.
- ↑ "Result of Parliamentary General Election 1952" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-08-18.
- ↑ Rajasingham, K. T. "Chapter 14: Post-colonial realignment of political forces". Sri Lanka: The Untold Story. Archived from the original on 2013-06-14. பார்க்கப்பட்ட நாள் 2013-08-18.
- ↑ "Result of Parliamentary General Election 1956" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-08-18.
- ↑ "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2013-08-18.
- ↑ "Result of Parliamentary General Election 1965" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-13. பார்க்கப்பட்ட நாள் 2013-08-18.