1270
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1270 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1270 MCCLXX |
திருவள்ளுவர் ஆண்டு | 1301 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2023 |
அர்மீனிய நாட்காட்டி | 719 ԹՎ ՉԺԹ |
சீன நாட்காட்டி | 3966-3967 |
எபிரேய நாட்காட்டி | 5029-5030 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 1325-1326 1192-1193 4371-4372 |
இரானிய நாட்காட்டி | 648-649 |
இசுலாமிய நாட்காட்டி | 668 – 669 |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1520 |
யூலியன் நாட்காட்டி | 1270 MCCLXX |
கொரிய நாட்காட்டி | 3603 |
1270 (MCCLXX) பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]ஆப்பிரிக்கா
[தொகு]- எட்டாவது சிலுவைப் போர்: பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் மம்லூக் சுல்தானிடம் இருந்து சிலுவை நாடுகளைக் கைப்பற்ற எட்டாவது சிலுவைப் போரை தூனிசில் ஆரம்பித்தார்.
- ஆகத்து 10 – யெக்கூனோ அம்லாக் [[எத்தியோப்பியா]வின் சாக்வி வம்சத்தைத் தோற்கடித்து, ஆட்சிக்கு உரிமை கோரி, சொலமனிய வம்சத்தை உருவாக்கினான். இது 1974 வரை நீடித்தது.
- ஆகத்து 25 – பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் தூனிசில் சிலுவைப் போரில் இறந்தார். குடிநீர் மாசடைந்ததால் இவர் இறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
- அக்டோபர் 30 – தூனிசு கைப்பற்றப்பட்டதை அடுத்து எட்டாவது சிலுவைப் போர் முடிவுற்றது. ஒன்பதாம் லூயியின் சகோதரன் சிசிலியின் முதலாம் சார்லசுக்கும், தூனிசின் கால்பா முகம்மது அல்-முஸ்தான்சிருக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
ஆசியா
[தொகு]- ஆசுக்கெலன் என்ற பண்டைய நகரத்தை மம்லூக் சுல்தான் பைபார் சிலுவை நாடுகளிடம் இருந்து கைப்பற்றினான். இந்நகரம் பின்னர் மீளமைக்கப்படவில்லை.
- தப்ரீசு நகரம் (இன்றைய ஈரானில்) மங்கோலியரின் தலைநகராக்கப்பட்டது.
- இலங்கையில் நான்காம் விஜயபாகுவின் ஆட்சிக் காலம்
- சாவகன் மைந்தன் இலங்கையின் தெற்குப்பகுதியை படையெடுக்க முயல முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் தலைமையில் பாண்டியர் படை ஈழத்தின் மீது படையெடுத்து சாவகன் மைந்தனை தோற்கடித்தது.
ஐரோப்பா
[தொகு]- பெப்ரவரி 16 – லித்துவேனியா லிவோனியரை உறைந்த பால்டிக் கடல் சமரில் வென்றது.
- திசெம்பர் – அரிசுட்டாட்டிலின் ஆக்கங்களில் இருந்து உருவான அவ்ரோவிசம் மெய்யியலின் சர்ச்சைக்குரிய கருத்துகள் கத்தோலிக்க திருச்சபையால் தடை செய்யப்பட்டன.
- இபின் அல் அய்தமின் ஒளியியல் தொடர்பான 200-ஆண்டுகள் பழமையான ஆய்வுக்கட்டுரைகள் அரபு மொழியில் இருந்து இலத்தீனுக்கு மொழிபெயர்க்கப்பட்டன.
- சமக்கிருதத்தில் கிமு 200களில் எழுதப்பட்ட பஞ்சதந்திரம் நூல் இலத்தீனுக்கு எபிரேயம் மூலமாக மொழிபெயர்க்கப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]- நாம்தேவ், மராத்திய புனிதர், புலவர் (இ. 1350)
- வில்லியம் வேலசு, இசுக்கொட்டிய நாட்டுப்பற்றாளர்
இறப்புகள்
[தொகு]- சந்திரபானு, தாய்லாந்து மன்னர்