2014 உலகக்கோப்பை காற்பந்து

2014 உலகக்கோப்பை கால்பந்து
Copa do Mundo da FIFA
பிரேசில் 2014
2014 பீஃபா உலகக் கிண்ண அதிகாரபூர்வச் சின்னம்:
Juntos num só ritmo
(All in one rhythm)
(எல்லோரும் ஒரே தாளத்தில்)
சுற்றுப்போட்டி விவரங்கள்
இடம்பெறும் நாடுபிரேசில்
நாட்கள்12 சூன் – 13 சூலை
அணிகள்32 (5 கூட்டமைப்புகளில் இருந்து)
அரங்கு(கள்)12 (12 நகரங்களில்)
இறுதி நிலைகள்
வாகையாளர் செருமனி (4-ஆம் தடவை)
இரண்டாம் இடம் அர்கெந்தீனா
மூன்றாம் இடம் நெதர்லாந்து
நான்காம் இடம் பிரேசில்
போட்டித் தரவுகள்
விளையாடிய ஆட்டங்கள்64
எடுக்கப்பட்ட கோல்கள்171 (2.67 /ஆட்டம்)
பார்வையாளர்கள்34,29,873 (53,592/ஆட்டம்)
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்)கொலம்பியா ஜேம்சு ரொட்ரீகசு
(6 கோல்கள்)[1]
சிறந்த ஆட்டக்காரர்அர்கெந்தீனா லியோனல் மெசி[2]
சிறந்த இளம் ஆட்டக்காரர்பிரான்சு பவுல் பொக்பா[3]
சிறந்த கோல்காப்பாளர்செருமனி மானுவல் நொயார்[4]
2010
2018

2014 உலகக்கோப்பை காற்பந்து (2014 FIFA World Cup) அல்லது 20 ஆவது ஃபீஃபா உலகக்கிண்ணக் கால்பந்து போட்டித்தொடரின் இறுதிப்போட்டிகள் பிரேசிலில் 2014 ஜூன் 12 முதல் ஜூலை 13 வரை நடைபெற்றன.

இரண்டாவது தடவையாக பிரேசிலில் இறுதிப் போட்டிகள் இடம்பெற்றன. முதற்தடவை 1950 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகள் இங்கு நடைபெற்றன. தென் அமெரிக்காவில் இடம்பெறும் இரண்டாவது உலகக்கோப்பை போட்டி இதுவாகும். முன்னதாக 1978 ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவில் இடம்பெற்றது. 2007 இல் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு இந்தப் போட்டிகளை ஏற்று நடத்தும் நாடாக பிரேசிலைத் தேர்ந்தெடுத்தது.

சூன் 2011இல் துவங்கிய 2014 உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்று 31 நாடுகள் இப்போட்டியில் நுழைந்தன. ஏற்று நடத்தும் நாடான பிரேசிலையும் சேர்த்து 32 அணிகள் மோதின. மொத்தம் 64 ஆட்டங்கள் பிரேசிலின் 12 நகரங்களில் நடைபெற்றன. இந்த 12 நகரங்களிலிலும் விளையாட்டரங்கங்கள் புதியதாகவோ புதுப்பிக்கப்பட்டதாகவோ கட்டமைக்கப்பட்டன. இம்முறையே முதன்முதலாகப் புதிய கோல்-கோடு தொழினுட்பம் பயன்படுத்தப்பட்டது.[5]

1930 இலிருந்து உலகக்கோப்பையை வென்ற உலக வாகையாளர்களான உருகுவை, பிரேசில், இத்தாலி, செருமனி, இங்கிலாந்து, அர்கெந்தீனா, பிரான்சு மற்றும் எசுப்பானியா ஆகியன 2014 போட்டிகளில் பங்கேற்றன. 2010 உலகக்கோப்பை வாகையாளரான எசுப்பானியா அணி, மற்றும் இங்கிலாந்து, இத்தாலி ஆகியன குழுநிலை ஆட்டங்களில் தோல்வியுற்று வெளியேறின. உருகுவாய் 16 அணிகளின் சுற்றிலும், பிரான்சு காலிறுதியிலும் தோல்வியுற்று வெளியேறின. பிரேசில் அணி அரையிறுதியில் தோல்வியடைந்ததை அடுத்து இறுதிப் போட்டியில் அர்கெந்தீனாவும், செருமனியும் போட்டியிட்டன. இதுவரை அமெரிக்கக் கண்டங்களில் இடம்பெற்ற ஏழு உலகக்கிண்ணப் போட்டிகளிலும் தென் அமெரிக்க அணிகளே வென்றுள்ளன.[6] இறுதியாட்டத்தில் செருமனி அர்கெந்தீனாவை கூடுதல் நேரத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று அமெரிக்கக் கண்டங்களில் உலகக்கோப்பையை வென்ற முதல் ஐரோப்பிய அணி என்ற பெருமையைப் பெற்றது.[7]

போட்டி நடத்தும் நாடு தேர்வு

[தொகு]
செப் பிளாட்டர் 2014 உலகக்கோப்பையை நடத்தும் நாடாக பிரேசிலை அறிவித்தல்

மார்ச்சு 7, 2003இல் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு ஒவ்வொரு கண்டத்திலும் போட்டிகளை சுழற்றுவது என்ற கொள்கைக்கேற்ப 2014ஆம் ஆண்டுக்கான போட்டிகள் தென் அமெரிக்காவில் நடைபெறும் என அறிவித்தது.[8][9] இந்த முடிவு முதன்முறையாக அடுத்தடுத்த இரு உலகக்கோப்பைகள் ஐரோப்பாவிற்கு வெளியே நடத்தப்பட வாய்ப்பளித்தது.

சூன் 3, 2003இல் தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு அர்கெந்தீனா, பிரேசில்,கொலாம்பியா இந்தப் போட்டிகளை நடத்த விரும்பியது.[10] ஆனால், மார்ச்சு 2004இல் கூடிய தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு சங்கங்கள் ஒருமனதாக பிரேசில் இந்தப் போட்டிகளை தங்கள் சார்பில் நடத்த தெரிவு செய்தன.[11]

இடைக்காலத்தில் கொலம்பியா தான் ஏற்று நடத்த ஏலக்கோரிக்கையை அனுப்ப முடிவு செய்து[12] அலுவல்பூர்வமாக திசம்பர் 2006இல் தனது கோரிக்கையை அறிவித்தது.[13] இதற்கு ஒரு வாரம் முன்னதாக பிரேசிலும் தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தது.[14] பின்னதாக, கொலம்பியா அலுவல்பூர்வமாக ஏப்ரல் 2007இல் தனது ஏலக்கோரிக்கையை மீட்டுக் கொண்டதால் மீண்டும் பிரேசிலே ஒரே கோரிக்கையாளராக அமைந்தது.[15] 2007ஆம் ஆண்டு அக்டோபர் 30 இல் ஃபிபா முறையாக பிரேசிலை இந்நிகழ்வை ஏற்று நடத்தும் நாடாக உறுதி செய்தது.[16]

தகுதிநிலை

[தொகு]

இறுதிப் போட்டிகளில் விளையாடும் அணிகளுக்கான இடங்கள் மார்ச் 3, 2011 அன்று முடிவாயின; 31 இடங்களுக்கான பகிர்வு முந்தையப் போட்டியைப் போன்றே தகுதிப் போட்டிகளின் மூலம் முடிவு செய்ய திட்டமிடப்பட்டது.[17] சூலை 30, 2011 அன்று இரியோ டி செனீரோவில் உள்ள மரீனா ட குளோரியா தங்குவிடுதியில் 2014 உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்றுக்கான நிரல் வரையப்பட்டது.[18][19] ஏற்று நடத்தும் நாடாக, பிரேசில் தானியக்கமாக போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றது.

208 ஃபிஃபா தேசிய அணிகளில் 203 தகுதிச் சுற்றுக்களில் பங்கேற்றன. இந்தப் போட்டிகள் சூன் 15, 2011 முதல் நவம்பர் 20, 2013 வரை நடைபெற்றன. தகுதிபெற்ற 32 அணிகளில் 24 அணிகள் முந்தைய போட்டியிலும் தகுதி பெற்றிருந்தனர். புதியவர்களாக பொசுனியா எர்செகோவினா, முதல்முறையாக தனிநாடாக, தகுதி பெற்றுள்ளனர்.[20] பிஃபா உலகத் தரவரிசைப்படி உயர்ந்த தரவரிசையில் இருந்து பங்குபெறாத நாடாக உக்ரைன் உள்ளது.[21] 2002க்குப் பிறகு முதன்முறையாக ஓசியானா கால்பந்துக் கூட்டமைப்பிலிருந்து எந்த அணியும் இந்த உலகக்கோப்பையில் தகுதிபெறவில்லை.

தகுதிபெற்ற அணிகள்

[தொகு]

கீழ்வரும் 32 அணிகள் இறுதிப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றுள்ளன. போட்டி ஆட்டங்களின் நிரலை வரைவதற்கான அவற்றின் போட்டி தரவரிசைகளுக்கு பிஃபா தரவரிசைப் பட்டியல் பயன்படுத்தப்பட்டுள்ளது.[22]

ஆசி.காகூ (4)
ஆப்.காகூ (5)
ஓகாகூ (0)
  • தகுதி பெறவில்லை
வமஅககாகூ (4)
தெஅகாகூ (6)

ஐகாசகூ (13)

  உலகக்கோப்பைக்கு தகுதிபெற்ற நாடு
  தகுதி பெறாத நாடு
  போட்டியிடாத நாடு
  பிஃபா உறுப்பினரல்லாத நாடு

இடம்

[தொகு]

பனிரெண்டு இடங்கள் (ஏழு புதிய மற்றும் ஐந்து புணரமைக்கப்பட்ட இடங்கள்) பனிரெண்டு நகர்களில் இருந்து போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இரியோ டி செனீரோ, ரிசெ பிரசிலியா, கூமா சாவோ பாவுலோ, சாபா போர்த்தலேசா, சியா
எசுடேடியோ டொ மரக்கானா எசுடேடியோ நாசியோனல் மனே கரிஞ்சா[23] கொரிந்தியன்சு அரங்கம் எசுடேடியோ கேஸ்தலோவ்

22°54′43.8″S 43°13′48.59″W / 22.912167°S 43.2301639°W / -22.912167; -43.2301639 (Estádio do Maracanã)

15°47′0.6″S 47°53′56.99″W / 15.783500°S 47.8991639°W / -15.783500; -47.8991639 (Estádio Nacional Mané Garrincha)

23°32′43.91″S 46°28′24.14″W / 23.5455306°S 46.4733722°W / -23.5455306; -46.4733722 (Arena de São Paulo)

3°48′26.16″S 38°31′20.93″W / 3.8072667°S 38.5224806°W / -3.8072667; -38.5224806 (Estádio Castelão)

கொள்ளளவு: 76,935[24]

(புதுப்பிக்கப்பட்டது)

கொள்ளளவு: 70,042[25]

(புதிய அரங்கு)

கொள்ளளவு: 68,000
(புதிய அரங்கு)
கொள்ளளவு: 64,846[26]

(புதுப்பிக்கப்பட்டது)

பெலோ அரிசாஞ்ச், மிஜெ போர்ட்டோ அலெக்ரி, ரிசு
மினெய்ரோ விளையாட்டரங்கம் எசுடேடியோ பெய்ரா ரியோ

19°51′57″S 43°58′15″W / 19.86583°S 43.97083°W / -19.86583; -43.97083 (Estádio Mineirão)

30°3′56.21″S 51°14′9.91″W / 30.0656139°S 51.2360861°W / -30.0656139; -51.2360861 (Estádio Beira-Rio)

கொள்ளவு: 62,547

(புதுப்பிக்கப்பட்டது)

கொள்ளவு: 51,300[27]
(புதுப்பிக்கப்பட்டது)
சால்வடோர், பா ரெசிஃபி, பெ
அரீனா பொன்டே நோவா இட்டாய்பவா அரீனா

12°58′43″S 38°30′15″W / 12.97861°S 38.50417°W / -12.97861; -38.50417 (Arena Fonte Nova)

8°2′24″S 35°0′29″W / 8.04000°S 35.00806°W / -8.04000; -35.00806 (Arena Pernambuco)

கொள்ளவு: 56,000[28]

(புதுப்பிக்கப்பட்டது)

கொள்ளவு: 46,154

(புதிய அரங்கு)

குய்யாபா, மா மனௌசு, அமா நடால், ரி குரிடிபே,
அரீனா பன்டனல் அரீனா அமசோனியா அரீனா டஸ் டுனஸ் அரீனா ட பய்க்சாடா

15°36′11″S 56°7′14″W / 15.60306°S 56.12056°W / -15.60306; -56.12056 (Arena Pantanal)

3°4′59″S 60°1′41″W / 3.08306°S 60.02806°W / -3.08306; -60.02806 (Arena Amazônia)

5°49′44.18″S 35°12′49.91″W / 5.8289389°S 35.2138639°W / -5.8289389; -35.2138639 (Arena das Dunas)

25°26′54″S 49°16′37″W / 25.44833°S 49.27694°W / -25.44833; -49.27694 (Arena da Baixada)

கொள்ளவு: 42,968
(புதிய அரங்கு)
கொள்ளவு: 42,374
(புதிய அரங்கு)
கொள்ளவு: 42,086
(புதிய அரங்கு)
கொள்ளவு: 43,981[29]
(புதுப்பிக்கப்பட்டது)

இறுதி குலுக்கல்

[தொகு]
தொட்டி 1 (மூலம்) தொட்டி 2 (ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா) தொட்டி 3 (ஆசியா மற்றும் வட அமெரிக்கா) தொட்டி 4 (ஐரோப்பா)

 பிரேசில் (நடத்தும் நாடு)
 அர்கெந்தீனா
 கொலம்பியா
 உருகுவை
 பெல்ஜியம்
 செருமனி
 எசுப்பானியா
 சுவிட்சர்லாந்து

 அல்ஜீரியா
 கமரூன்
 ஐவரி கோஸ்ட்
 கானா
 நைஜீரியா
 சிலி
 எக்குவடோர்

 ஆத்திரேலியா
 சப்பான்
 ஈரான்
 தென் கொரியா
 கோஸ்ட்டா ரிக்கா
 ஒண்டுராசு
 மெக்சிக்கோ
 ஐக்கிய அமெரிக்கா

 பொசுனியா எர்செகோவினா
 குரோவாசியா
 இங்கிலாந்து
 பிரான்சு
 கிரேக்க நாடு
 இத்தாலி (தொட்டி 2க்கு)
 நெதர்லாந்து
 போர்த்துகல்
 உருசியா

ஆட்ட நடுவர்கள்

[தொகு]

பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு மார்ச்சு 2013இல் முன்தெரிவாக 52 நடுவர்களின் பட்டியலை வெளியிட்டது. ஆறு காற்பந்து கூட்டமைப்புக்களிலிலிருந்தும் ஒரு நடுவருக்கு இரு துணை நடுவர்கள் கூட்டாக இந்தப் பட்டியல் அமைந்திருந்தது.[30] 2014 சனவரி 14 அன்று பிஃபாவின் நடுவர் குழு 25 மூன்று நபர் நடுவர் அணிகளையும் ஆதரவாக எட்டு இரட்டையர் அணிகளையும் 43 வெவ்வேறு நாடுகளிலிலிருந்து அறிவித்தது.[31][32]

கோல்-கோடு தொழினுட்பம்

[தொகு]

உலகக்கோப்பை காற்பந்தின் இறுதிப்போட்டிகளில் முதன்முறையாக நடுவர்களுக்குத் துணையாக கோல்-கோடு தொழினுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கான உந்துதலாக முந்தைய உலகக்கோப்பை அமைந்தது; 2010ஆம் ஆண்டுப் போட்டியில் பதினாறுவர் சுற்றில் செருமனிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்திற்கு கோல் வழங்க தவறுதலாக மறுக்கப்பட்டது.[33] இந்தப் பிழையை அடுத்து பிஃபா தலைவர் செப் பிளாட்டர் "கோல்-கோடு தொழினுட்பத்தைக் கருத்தில் எடுக்காதிருப்பது முட்டாள்தனம்" எனக் கடுமையாகச் சாடினார்.[34] இதனையடுத்து 2012இல் பன்னாட்டுக் கால்பந்துச் சங்க வாரியம் இதன் பயன்பாட்டிற்கு ஏற்பளித்தது.[35] இந்த மாற்றத்திற்கு பின்பு இந்தத் தொழினுட்பம் பிஃபாவின் 2012, 2013 கழக உலகக்கோப்பை போட்டிகளிலும் 2013 கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. நான்காம் முறையாக 2014 உலகக்கோப்பையில் பயன்படுத்தப்படவுள்ளது. அக்டோபர் 2013இல் செருமனி நிறுவனத்தின் கோல்கன்ட்ரோல் இந்தப் போட்டியில் அலுவல்முறையாகப் பயன்படுத்தவிருக்கும் தொழினுட்பமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.[36]

இந்த 2014 ஆம் ஆண்டு உலகக்கோபை காற்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி மற்றும் ஹாண்டூரஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் 48 ஆவது நிமிடத்தில் பென்சமா அடித்த கோல் அடிக்க முயற்சி செய்தபோது, பந்து கோல் கம்பத்தில் பட்டு திரும்பும் வேளையில், அந்த கோலைத் தடுக்க முயற்சித்த ஹாண்டூரஸ் அணியின் கோல் கீப்பர் நோயல் வெலாட்ரஸின் கைகளில் உரசி கோல் எல்லைக் கோட்டைக் கடந்தது என்று முறைப்பாடு எழ, 'கோல்-கோடு தொழினுட்பம்' மூலம் பந்து கோல் வலையின் கோட்டைக் கடந்தது என்று முடிவு செய்யப்பட்டது.[37]

மறைகின்ற தெளிப்பு

[தொகு]

உலகக்கோப்பை இறுதியாட்டங்களில் முதன்முறையாக மறைகின்ற தெளிப்பு பயன்படுத்தப்படவிருக்கின்றது; நீரை அடிப்படையாகக் கொண்ட இந்த தெளிப்பு சில நிமிடங்களிலேயே மறைகின்ற தன்மை உடையதாக உள்ளது. தடங்கலற்ற உதையின்போது தடுக்கும் அணிக்கான பத்து கஜ கோட்டையும் பந்தை எங்கு வைப்பது என்பதையும் குறிக்க இது பயன்படுத்தப்படுகிறது. 2013 பிஃபா 20-கீழ் உலகக்கோப்பையிலும் 2013 பிஃபா 17-கீழ் உலகக்கோப்பையிலும் 2013 பிஃபா கழகங்களுக்கான உலகக்கோப்பையிலும் வெற்றிகரமான சோதனையோட்டங்களுக்குப் பிறகு இதன் பயன்பாட்டிற்கு பிஃபா அனுமதி வழங்கியுள்ளது.[38]

போட்டிகள்

[தொகு]

குழு நிலை

[தொகு]

குழுவில் வெற்றி பெற்ற அணிகளும் அதற்கடுத்து வரும் அணிகளும் சுற்று 16க்கு முன்னேறும்.[39]

  வாகையாளர்
  இரண்டாமிடம்

  மூன்றாமிடம்
  நான்காமிடம்

  கால் இறுதி
  சுற்று 16

  குழு நிலை

சமநிலையை முறி கட்டளை விதி

குழுவிலுள்ள ஓவ்வொரு அணிகளின் தரவரிசை பின்வருமாறு உறதி செய்யப்படும்:

  1. எல்லா குழு போட்டிகளிலும் அதிக புள்ளி
  2. எல்லா குழு போட்டிகளிலும் கோல் வித்தியாசம்
  3. எல்லா குழு போட்டிகளிலும் அதிக கோல் அடித்தமை
  4. சமநிலையில் முடிந்த அணிகளுக்கிடையில் போட்டியில் அதிக புள்ளிகள்
  5. சமநிலையில் முடிந்த அணிகளுக்கிடையில் போட்டியில் கோல் வித்தியாசம்
  6. சமநிலையில் முடிந்த அணிகளுக்கிடையில் போட்டியில் அதிக கோல் அடித்தமை
  7. பீபா ஒழுங்கமைப்புக் குழுவினுடைய சீட்டுக் குலுக்கல்
குழு அட்டவணையில் முக்கிய நிறம்
16 அணிகளின் சுற்றுக்கு முன்னேறிய அணிகள்
16 அணிகளின் சுற்றுக்கு முன்னேறாத அணிகள்

குழு ஏ

[தொகு]
அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
 பிரேசில் 3 2 1 0 7 2 +5 7
 மெக்சிக்கோ 3 2 1 0 4 1 +3 7
 குரோவாசியா 3 1 0 2 6 6 0 3
 கமரூன் 3 0 0 3 1 9 −8 0
பிரேசில் 3-1 குரோவாசியா
நெய்மார் Goal 29'71' (தண்ட உதை)
ஒஸ்கார் Goal 90+1'
அறிக்கை மாசெலோ Goal 11' (சுய கோல்)[nb 1]
பார்வையாளர்கள்: 62,103[41]
நடுவர்: யூச்சி நிசிமுரா (ஜப்பான்)[42]

மெக்சிக்கோ 1-0 கமரூன்
பெரல்டா Goal 61' அறிக்கை
பார்வையாளர்கள்: 39,216
நடுவர்: வில்மர் ரொல்டன் (கொலம்பியா)

பிரேசில் 0-0 மெக்சிக்கோ
அறிக்கை
பார்வையாளர்கள்: 60,342
நடுவர்: கூனெய்த் சாகிர் (துருக்கி)

கமரூன் 0-4 குரோவாசியா
அறிக்கை ஒலிக் Goal 11'
பெரிசிக்Goal 48'
மான்சுகிக்Goal 61' Goal 73'
பார்வையாளர்கள்: 39,982
நடுவர்: பெட்ரோ புரொவென்கா (போர்த்துக்கல்)

கமரூன் 1–4 பிரேசில்
மட்டிப் Goal 26' அறிக்கை நெய்மர் Goal 17'35'
பிரட் Goal 49'
பெர்னாண்டினோ Goal 84'
பார்வையாளர்கள்: 69,112
நடுவர்: ஜோன்ஸ் எரிக்சன் (சுவீடன்)

குரோவாசியா 1–3 மெக்சிக்கோ
ஐவன் பெரிசிக் Goal 87' அறிக்கை மார்க்குயிஸ் Goal 72'
குராடோ Goal 75'
கெர்னாட்ஸ் Goal 82'
பார்வையாளர்கள்: 41,212
நடுவர்: ரவ்சான் இர்மடோவ் (உஸ்பெகிஸ்தான்)

குழு பி

[தொகு]
அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
 நெதர்லாந்து 3 3 0 0 10 3 +7 9
 சிலி 3 2 0 1 5 3 +2 6
 எசுப்பானியா 3 1 0 2 4 7 −3 3
 ஆத்திரேலியா 3 0 0 3 3 9 −6 0
எசுப்பானியா 1–5 நெதர்லாந்து
அலன்சோ Goal 27' (தண்ட உதை) அறிக்கை வான் பெர்சீ Goal 44'72'
ரொபென் Goal 53'80'
டெ விரிச் Goal 65'
பார்வையாளர்கள்: 48,173
நடுவர்: நிக்கோலா ரிசோலி (இத்தாலி)

சிலி 3-1 ஆத்திரேலியா
சான்செசு Goal 12'
வால்தீவியா Goal 14'
போசெசோர் Goal 90+2'
அறிக்கை காகில் Goal 35'
பார்வையாளர்கள்: 40,275
நடுவர்: நுமான்டியெசு டூயே (ஐவரி கோஸ்ட்)

ஆத்திரேலியா 2-3 நெதர்லாந்து
டிம் காகில் Goal 21'
ஜெடினாக் Goal 54' (தண்ட உதை)
அறிக்கை ரொபென் Goal 20'
வான் பெர்சி Goal 58'
டெப்பே Goal 68'
பார்வையாளர்கள்: 42,877
நடுவர்: ஜமெல் ஐமூடி (அல்சீரியா)

எசுப்பானியா 0-2 சிலி
அறிக்கை வர்கஸ் Goal 19'
அராகிஸ் Goal 43'
பார்வையாளர்கள்: 74,101
நடுவர்: மார்க் கெய்கர் (ஐக்கிய அமெரிக்கா)

ஆத்திரேலியா 0-3 எசுப்பானியா
அறிக்கை டேவிட் வில்லா Goal 36'
டொரெசு Goal 69'
மட்டா Goal 82'
பார்வையாளர்கள்: 39,375
நடுவர்: நவாப் சுக்ராலா (பகுரைன்)

நெதர்லாந்து 2-0 சிலி
ஃபெர் Goal 77'
மெம்பிசு Goal 90+2'
அறிக்கை
பார்வையாளர்கள்: 62,996
நடுவர்: பக்காரி கசாமா (காம்பியா)

குழு சி

[தொகு]
அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
 கொலம்பியா 3 3 0 0 9 2 +7 9
 கிரேக்க நாடு 3 1 1 1 2 4 −2 4
 ஐவரி கோஸ்ட் 3 1 0 2 4 5 −1 3
 சப்பான் 3 0 1 2 2 6 −4 1
கொலம்பியா 3–0 கிரேக்க நாடு
ஆர்மெரோ Goal 5'
குடியெர்ஸ் Goal 58'
ரொட்ரிகஸ் Goal 90+3'
அறிக்கை
பார்வையாளர்கள்: 57,174
நடுவர்: மார்க் கெய்கர் (ஐக்கிய அமெரிக்கா)

ஐவரி கோஸ்ட் 2-1 சப்பான்
பொனி Goal 64'
ஜெர்வீனோ Goal 66'
அறிக்கை ஒண்டா Goal 16'
பார்வையாளர்கள்: 40,267
நடுவர்: என்றிக் ஓசெஸ் (சிலி)

கொலம்பியா 2–1 ஐவரி கோஸ்ட்
ரொட்ரீகசு Goal 64'
குவுன்டெரோ Goal 70'
அறிக்கை செர்வீனோ Goal 73'
பார்வையாளர்கள்: 68,748
நடுவர்: ஹவார்ட் வெப் (இங்கிலாந்து)

சப்பான் 0-0 கிரேக்க நாடு
அறிக்கை
பார்வையாளர்கள்: 39,485
நடுவர்: ஜொயெல் அகிலார் (எல் சால்வடோர்)

சப்பான் 1–4 கொலம்பியா
ஓக்கசாக்கி Goal 45+1' அறிக்கை குட்ராடோ Goal 17' (தண்ட உதை)
மார்டினெஸ் Goal 55'82'
ரொட்ரிக்கஸ் Goal 90'
பார்வையாளர்கள்: 40,340
நடுவர்: பெட்ரோ (போர்த்துக்கல்)

கிரேக்க நாடு 2–1 ஐவரி கோஸ்ட்
சமாரிஸ் Goal 42'
சமராஸ் Goal 90+3' (தண்ட உதை)
அறிக்கை பொனி Goal 74'
பார்வையாளர்கள்: 59,095
நடுவர்: கரோல்ஸ் வேரா (ஈக்வடோர்)

குழு டி

[தொகு]
அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
 கோஸ்ட்டா ரிக்கா 3 2 1 0 4 1 +3 7
 உருகுவை 3 2 0 1 4 4 0 6
 இத்தாலி 3 1 0 2 2 3 −1 3
 இங்கிலாந்து 3 0 1 2 2 4 −2 1
உருகுவை 1-3 கோஸ்ட்டா ரிக்கா
கவானி Goal 24' (தண்ட உதை) அறிக்கை கேம்பெல் Goal 54'
துவார்த்தே Goal 57'
யுரேனா Goal 84'
பார்வையாளர்கள்: 58,679
நடுவர்: பீலிக்சு பிரிக் (செருமனி)

இங்கிலாந்து 1-2 இத்தாலி
ஸ்டரிட்ச் Goal 37' அறிக்கை மார்ச்சீசியோ Goal 35'
பலொட்டெலி Goal 50'
பார்வையாளர்கள்: 39,800
நடுவர்: பியோர்ன் கூப்பர்சு (நெதர்லாந்து)

உருகுவை 2-1 இங்கிலாந்து
சுவாரெசு Goal 39'85' அறிக்கை ரூனி Goal 75'
பார்வையாளர்கள்: 62,575
நடுவர்: கார்லோசு கர்வாலோ (எசுப்பானியா)

இத்தாலி 0-1 கோஸ்ட்டா ரிக்கா
அறிக்கை ரூயிசு Goal 44'
பார்வையாளர்கள்: 40,285
நடுவர்: என்றிக்கே ஓசெசு (சிலி)

இத்தாலி 0–1 உருகுவை
அறிக்கை டிகோ கோடின் Goal 81'
பார்வையாளர்கள்: 39,706
நடுவர்: மாகோ ரொட்ரிக்கஸ் (மெக்சிக்கோ)

கோஸ்ட்டா ரிக்கா 0–0 இங்கிலாந்து
அறிக்கை
பார்வையாளர்கள்: 57,823
நடுவர்: கைமெளடி (அல்ஜீரியா)

குழு ஈ

[தொகு]
அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
 பிரான்சு 3 2 1 0 8 2 +6 7
 சுவிட்சர்லாந்து 3 2 0 1 7 6 +1 6
 எக்குவடோர் 3 1 1 1 3 3 0 4
 ஒண்டுராசு 3 0 0 3 1 8 −7 0
சுவிட்சர்லாந்து 2-1 எக்குவடோர்
மெக்மெதி Goal 48'
செஃபெரோவிச் Goal 90+3'
அறிக்கை எ. வலென்சியா Goal 22'
பார்வையாளர்கள்: 68,351
நடுவர்: ராவ்சன் இர்மாத்தொவ் (உசுபெக்கிசுத்தான்)

பிரான்சு 3-0 ஒண்டுராசு
பென்சிமா Goal 45' (தண்ட உதை), Goal 72'
வலாடெரெசு Goal 48' (சுய கோல்)
அறிக்கை
பார்வையாளர்கள்: 43,012
நடுவர்: சான்ட்ரோ ரிச்சி (பிரேசில்)

சுவிட்சர்லாந்து 2-5 பிரான்சு
ஜெமாய்லி Goal 81'
ஹாக்கா Goal 87'
அறிக்கை கிரூட் Goal 17'
மத்தூடி Goal 18'
வால்பூனா Goal 40'
பென்சிமா Goal 67'
சிசோக்கோ Goal 73'
பார்வையாளர்கள்: 51,003
நடுவர்: யோன் குயிப்பர்சு (நெதர்லாந்து)

ஒண்டுராசு 1-2 எக்குவடோர்
கோஸ்ட்லி Goal 31' அறிக்கை எ. வலேன்சியா Goal 34'65'
பார்வையாளர்கள்: 39,224
நடுவர்: பென் வில்லியம்சு (ஆத்திரேலியா)

ஒண்டுராசு 0-3 சுவிட்சர்லாந்து
அறிக்கை சக்கிரி Goal 6'31'71'
பார்வையாளர்கள்: 40,322
நடுவர்: நெஸ்டர் (ஆர்ஜெந்தீனா)

எக்குவடோர் 0–0 பிரான்சு
அறிக்கை
பார்வையாளர்கள்: 73,749
நடுவர்: நெளமன்டிஸ் (ஐவரி கோஸ்ட்)

குழு எப்

[தொகு]
அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
 அர்கெந்தீனா 3 3 0 0 6 3 +3 9
 நைஜீரியா 3 1 1 1 3 3 0 4
 பொசுனியா எர்செகோவினா 3 1 0 2 4 4 0 3
 ஈரான் 3 0 1 2 1 4 −3 1
அர்கெந்தீனா 2-1 பொசுனியா எர்செகோவினா
கோலசினாக் Goal 3' (சுய கோல்)
மெஸ்ஸி Goal 65'
அறிக்கை இபிசெவிக் Goal 84'
பார்வையாளர்கள்: 74,738
நடுவர்: யோயல் ஆக்குய்லர் (எல் சல்வடோர்)

ஈரான் 0 – 0 நைஜீரியா
அறிக்கை
பார்வையாளர்கள்: 39,081
நடுவர்: கார்லோசு வீரா எக்குவடோர்

அர்கெந்தீனா 1-0 ஈரான்
மெசி Goal 90+1' அறிக்கை
பார்வையாளர்கள்: 57,698
நடுவர்: மிலோராத் மாசிச் (செர்பியா)

நைஜீரியா 1-0 பொசுனியா எர்செகோவினா
ஓடெம்விங்கி Goal 29' அறிக்கை
பார்வையாளர்கள்: 40,499
நடுவர்: பீட்டர் ஓ'லியரி (நியூசிலாந்து)

 நைஜீரியா2-3 அர்கெந்தீனா
மூசா Goal 4'47' அறிக்கை மெசி Goal 3'45+1'
ரோஜோ Goal 50'
பார்வையாளர்கள்: 43,285
நடுவர்: நிக்கொலா ரிசோலி (இத்தாலி)

பொசுனியா எர்செகோவினா 3-1 ஈரான்
சேக்கோ Goal 23'
பிஜானிச் Goal 59'
விரிசஜேவிச் Goal 83'
அறிக்கை கூசனெஜாத் Goal 82'
பார்வையாளர்கள்: 48,011
நடுவர்: கார்லொசு கார்பாலோ (எசுப்பானியா)

குழு ஜி

[தொகு]
அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
 செருமனி 3 2 1 0 7 2 +5 7
 ஐக்கிய அமெரிக்கா 3 1 1 1 4 4 0 4
 போர்த்துகல் 3 1 1 1 4 7 −3 4
 கானா 3 0 1 2 4 6 −2 1
செருமனி 4-0 போர்த்துகல்
முல்லர் Goal 12' (தண்ட உதை)45+1'78'
அமெல்சு Goal 32'
அறிக்கை
பார்வையாளர்கள்: 51,081
நடுவர்: மிலோராத் மாசிச் (செர்பியா)

கானா 1 – 2 ஐக்கிய அமெரிக்கா
அய்யு Goal 82' அறிக்கை டம்செGoal 1'
புரூக்சுGoal 86'
பார்வையாளர்கள்: 39,760
நடுவர்: ஜோனசு எரிக்சன் சுவீடன்

செருமனி 2-2 கானா
கோட்சி Goal 51'
குளோசி Goal 71'
அறிக்கை ஆயெவ் Goal 54'
கயான் Goal 63'
பார்வையாளர்கள்: 59,621
நடுவர்: சான்ட்ரோ ரிச்சி (பிரேசில்)

ஐக்கிய அமெரிக்கா 2 – 2 போர்த்துகல்
ஜோன்சு Goal 64'
டெம்ப்சி Goal 81'
அறிக்கை நானி Goal 5'
வரேலா Goal 90+5'
பார்வையாளர்கள்: 40,123
நடுவர்: நெசுட்டர் பிட்டானா (அர்கெந்தீனா)

ஐக்கிய அமெரிக்கா 0–1 செருமனி
அறிக்கை முல்லர் Goal 55'
பார்வையாளர்கள்: 41,876
நடுவர்: ரவ்சான் இர்மாத்தொவ் (உஸ்பெக்கிஸ்தான்)

போர்த்துகல் 2-1 கானா
போயி Goal 31' (சுய கோல்)
ரொனால்டோ Goal 80'
அறிக்கை கயான் Goal 57'
பார்வையாளர்கள்: 67,540
நடுவர்: நவாப் சுக்ராலா (பகுரைன்)

குழு எச்

[தொகு]
அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
 பெல்ஜியம் 3 3 0 0 4 1 +3 9
 அல்ஜீரியா 3 1 1 1 6 5 +1 4
 உருசியா 3 0 2 1 2 3 −1 2
 தென் கொரியா 3 0 1 2 3 6 −3 1
பெல்ஜியம் 2-1 அல்ஜீரியா
ஃபெலானி Goal 70'
மெர்டென்சு Goal 80'
அறிக்கை ஃபெகோலி Goal 25' (தண்ட உதை)
பார்வையாளர்கள்: 56,800
நடுவர்: மார்க்கோ ரொட்ரிகசு (மெக்சிக்கோ)