அணில்
அணில்கள் Squirrels புதைப்படிவ காலம்: | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
Various members of the family Sciuridae
| ||||||||||
உயிரியல் வகைப்பாடு | ||||||||||
திணை: | ||||||||||
தொகுதி: | ||||||||||
வகுப்பு: | ||||||||||
வரிசை: | ||||||||||
துணைவரிசை: | Sciuromorpha | |||||||||
குடும்பம்: | Sciuridae Johann Fischer von Waldheim, 1817 | |||||||||
Subfamilies and tribes | ||||||||||
and see text |
அணில் (ⓘ) (Squirrel) மரத்தில் வசிக்கும் ஒரு கொறிணி ஆகும். அணில்கள் அமெரிக்கா, ஐரோவாசியா மற்றும் ஆபிரிக்காவையும் தாய் நாடாக கொண்டவை. பின்னர் ஆத்திரேலியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.[1] . இவை 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்துள்ளன என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.[2]
உடல் அமைப்பு
[தொகு]இந்தியாவில் காணப்படும் அணில்கள் வெளிர்சாம்பல் நிறத்தில் முதுகில் மூன்று கோடுகளுடன் காணப்படும். வால் அடர்த்தியான முடிகளுடன் மென்மையாக இருக்கும்மு. முதுகுப் பகுதியில் சிறியளவிலான மூன்று கோடுகள் காணப்படும். சிறிய கால்களுடன் மரங்களில் ஏறுவதற்கு வசதியாக கூர்மையான நகங்கள் இருக்கும். இவற்றின் முன்பற்கள் சற்று பெரியதாக கூர்மையாக இருக்கும். அணில்கள் கொறிக்கும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை. பழங்களுக்குப் பெரும் சேதம் விளைவிப்பவை. கொறிக்காவிட்டால், முன்பற்களை அரைக்காவிட்டால் இவை வளர்ந்து வாயை அசைக்க முடியாதபடி செய்துவிடும். அதனால் அணில் பட்டினியால் இறந்து விடும்.
வசிப்பிடம்
[தொகு]அணில் மரங்களிலும், வீடுகளில் மறைவான இடங்களில் பறவையைப்போல் கூடு கட்டியும் வசிக்கும். தேங்காய் நார், பஞ்சு முதலியவைகளைக் கொண்டு கூடுகட்டும்.
வாழ்க்கைமுறை
[தொகு]அணில்கள் குட்டி போட்டு தங்கள் இனத்தைப் பெருக்குகின்றன. அணில்கள் தங்களுக்கு ஆபத்து வரும் போது பயங்கரமாக ஒலியெழுப்பி எதிரியின் கவனத்தைத் திசை திருப்பும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Seebeck, J. H. "Sciuridae" (PDF). Fauna of Australia. Archived from the original (PDF) on 2015-01-17. பார்க்கப்பட்ட நாள் 2013-11-24.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-02.