அயோடின் முக்குளோரைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர் அயோடின் டிரைகுளோரைடு | |
இனங்காட்டிகள் | |
865-44-1 | |
ChemSpider | 63265 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 70076 |
| |
பண்புகள் | |
I2Cl6 | |
வாய்ப்பாட்டு எடை | 466.5281 கி/மோல் |
தோற்றம் | மஞ்சள்நிற திண்மம் |
அடர்த்தி | 3.11 கி/செ.மீ3 |
உருகுநிலை | 63 °C (145 °F; 336 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அயோடின் முக்குளோரைடு (Iodine trichloride ) என்பது I2Cl6 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட அயோடின் மற்றும் குளோரின் கலந்துள்ள ஆலசனிடை அல்லது இடை உப்பீனிச் சேர்மம் ஆகும். அடர்மஞ்சள்நிற திண்மமாக காணப்படும் இச்சேர்மம் I2Cl6, Cl2I(μ-Cl)2ICl2, என்று பாலமிடும் இரண்டு குளோரின் அணுக்களைப் பெற்று இருபடிச் சேர்மமாக காணப்படுகிறது[1]
அயோடினுடன் – 70 பாகை செல்சியசு வெப்பநிலையில் திரவநிலையில் உள்ள குளோரினை அதிகளவில் செலுத்துவதன் மூலமாக அயோடின் முக்குளோரைடைத் தயாரிக்க முடியும். உருகலில் இது கடத்தும் பண்புடன் இருப்பதால் வினையில் பிரிகைக்கான அடையாளம் தெரிகிறது[2]
- I2Cl6 ICl2+ + ICl4−
திரவநிலையில் உள்ள அயோடினுடன் குளோரின் வாயுவை 105 பாகை செல்சியசு வெப்பநிலையில் சேர்த்து சூடுபடுத்தியும் அயோடின் முக்குளோரைடைத் தயாரிக்க முடியும்.
அயோடின் முக்குளோரைடு ஓர் ஆக்சிசனேற்ற முகவராகச் செயல்படுகிறது. கரிமச் சேர்மங்களுடன் இணைய நேர்ந்தால் தீயை உருவாக்க வல்லதாக உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ K. H. Boswijk; E. H. Wiebenga (1954). "The crystal structure of I2Cl6 (ICl3)". Acta Crystallographica 7 (5): 417–423. doi:10.1107/S0365110X54001260.
- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.