ஆபேரி
ஆபேரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 22வது மேளகர்த்தா இராகமும், "வேத" என்று அழைக்கப்படும் நான்காவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
[தொகு]இந்த இராகத்தில் சட்சம் (ச), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), கைசிக நிசாதம் (நி2), சதுச்ருதி தைவதம் (த2), சதுச்ருதி ரிசபம் (ரி2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு[1]:
ஆரோகணம்: | ச க2 ம1 ப நி2 ச் |
அவரோகணம்: | ச் நி2த2 ப ம1 க2 ரி2 ச |
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது "வர்ஜ" இராகம் எனப்படும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இது "ஔடவ சம்பூரண" இராகம் எனப்படுகின்றது.
வகை | பாடல் | தாளம் | கலைஞர் |
---|---|---|---|
கிருதி | நகுமோமு | ஆதி | தியாகராஜர் |
கிருதி | வினாபேரி | ஆதி | முத்துசுவாமி தீட்சிதர் |
கிருதி | ஏகாம்பர நாதா | ஆதி | பெரியசாமித்தூரன் |
கிருதி | கந்தா வந்தருள் | ஆதி | பாபநாசம் சிவன் |
கிருதி | என்னை எனக்கு | ரூபகம் | முத்துத்தாண்டவர் |
கிருதி | நின்னுவினா | ரூபகம் | சியாமா சாஸ்திரி |
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Music Handbook - Raga Index -A 18 பெப் 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ பக்கம் எண்கள்: 147 & 148, இந்திய இசைக்கருவூலம் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006; வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.), ஆசிரியர்: டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி