எரிது

எரிது
எரிது is located in ஈராக்
எரிது
Shown within Iraq
இருப்பிடம்அபு ஷாரைன், தி குவார் ஆளுநரகம், ஈராக்
பகுதிமெசொப்பொத்தேமியா
ஆயத்தொலைகள்30°48′57″N 45°59′46″E / 30.81583°N 45.99611°E / 30.81583; 45.99611
வகைபண்டைய நகரம்
பரப்பளவு10 ha (25 ஏக்கர்கள்)
வரலாறு
கட்டப்பட்டதுஏறத்தாழ கிமு 5400
பயனற்றுப்போனதுகிபி 600
பகுதிக் குறிப்புகள்
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களம்
அலுவல்முறைப் பெயர்எரிது நகர தொல்லியல் களம்
பகுதிதெற்கு ஈராக்
கட்டளை விதிகலவை: (iii)(v)(ix)(x)
உசாத்துணை1481-007
பதிவு2016 (40-ஆம் அமர்வு)
பரப்பளவு33 ha (0.13 sq mi)
Buffer zone1,069 ha (4.13 sq mi)
ஆள்கூறுகள்30°49′1″N 45°59′45″E / 30.81694°N 45.99583°E / 30.81694; 45.99583
எரிது is located in ஈராக்
எரிது
Location of எரிது in ஈராக்.

எரிது (Eridu) (சுமேரியம்: 𒉣𒆠, NUN.KI/eridugki; அக்காதியம்: irîtu; தறகால அரபு: Tell Abu Shahrain) ஈராக் நாட்டின் தெற்கில், தி குவார் ஆளுநரகத்தில் அமைந்த, பண்டைய மெசொப்பொத்தேமியாவின், உலகின் மிகவும் தொன்மையான நகரமான எரிது நகரத்தின் தொல்லியல் களம் (கிமு 5,400) ஆகும்.[1][2]

சுமேரிய நகரமான எரிது நகரத்தின் தொல்லியல் களம், ஈராக்கின், ஊர் எனுமிடத்திற்கு தென்கிழக்கில் 12 கிமீ தொலைவில் உள்ளது.

33 எக்டேர் பரப்பளவு கொண்ட பண்டைய எரிது நகர தொல்லியல் களத்தை, 2016-இல் யுனெஸ்கோ நிறுவனம், உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது.

எரிது நகரத்தில், களிமண் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்ட சுமேரியக் கடவுள்களுக்கான கோயில் கட்டிடங்கள் கொண்டிருந்தது.[3] எரிது நகரத்தின் கோயில்களைச் சுற்றிலும் கிராமங்கள் இருந்தன.[3]

சுமேரியத் தொன்மவியலில் எரிது நகரம், என்கி எனும் சுமேரியக் கடவுளின் தாயகமாக கருதப்படுகிறது.

என்கி கடவுளின் பெயர், பின்னர் சுமேரியாவை ஆண்ட, அக்காடியப் பேரரசு காலத்தில் இவா என மாற்றம் செய்யப்பட்டது.

எரிது நகரத்தின் எபாசு கோயில்

வரலாறு

[தொகு]
சுமேரியாவின் தெற்கில் எரிது நகரம்

சுமேரிய மன்னர்களின் பட்டியலின் படி [4], எரிது நகரமே உலகின் முதல் நகரம் என அறியப்படுகிறது.

சுமேரியத் தொன்மவியலின் படி, சுமேரியப் பெரு வெள்ளத்தின் போது அழிந்த ஐந்து நகரங்களில் எரிது நகரமும் குறிப்பிடப்படுகிறது.

எரிது நகர இராச்சியத்தை ஆண்ட மூன்றாம் ஊர் வம்ச மன்னர் அமர்-சின் பெயர் பெயர் பொறித்த சுட்ட செங்கல், பிரித்தானிய அருங்காட்சியகம்

மெசொப்பொத்தேமியாவின் எரிது நகரம், பாரசீக வளைகுடாவிற்கு அருகே, யூப்பிரடீஸ் ஆற்றின் கரையில் கிமு 5,400ல் நிறுவப்பட்டது. இந்நகரம் என்கி எனும் ஆண் சுமேரியக் கடவுள் வழிபாட்டின் தாயகமாக கருதப்படுகிறது.[5]

எரிது நகரத்தில் சமார்ரா பண்பாடு, சுமேரியப் பண்பாடு மற்றும் செமிடிக் பண்பாடு என மூன்று பண்பாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக வளர்ந்தது.

கிமு 5000-இல் உபைதுகள் காலத்தில், களிமண் வீடுகள் கொண்டிருந்த எரிது கிராமம், உரூக் காலத்தில் கிமு 2,700-இல் சுட்ட செங்கற்கலாலான வீடுகள் கொண்ட பெரிய நகர இராச்சியமாக விளங்கியது.

புது பாபிலோனியப் பேரரசிலும், செலூக்கியப் பேரரசிலும் சிறப்புடன் விளங்கிய எரிது நகரம், கிபி ஆறாம் நூற்றாண்டில் இசுலாமியப் படையெடுப்புகளால் முற்றிலும் அழிந்தது.

கட்டிடக் கலை

[தொகு]

என்கி எனும் ஆண் தெய்வத்தின் கோயிலை மையமாகக் கொண்ட எரிது நகரத்தை, நீர்த்தேக்க நகரம் என அழைப்பர்.

மூன்றாம் ஊர் வம்ச காலத்தில், எரிது நகரத்தில் செவ்வக வடிவில் படிக்கட்டுகளுடன் கூடிய சிக்குரத் எனும் பிரமிடு போன்ற உயர்ந்த கட்டிடம் நிறுவப்பட்டது.[6][7]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Eridu
  2. Leick, Gwendolyn (2002), "Mesopotamia: The Invention of the City" (Penguin)
  3. 3.0 3.1 Pollard, Elizabeth (2015). Worlds Together, Worlds Apart concise edition. New York: W.W. Norton & Company, Inc. p. 51. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780393250930.
  4. Sumerian King List
  5. Steinkeller, P., "On Rulers, Priests, and Sacred Marriage: Tracing the Evolution of Early Sumerian Kingship. In Priests and Officials in the Ancient Near East." Papers of the Second Colloquium on the Ancient Near East—The City and its Life held at the Middle Eastern Culture Center in Japan (Mitaka, Tokyo), ed. K. Watanabe, pp. 103–137. Heidelberg: Universitätsverlag C. Winter, 1999
  6. Ziggurat
  7. AR George, House most high: the temples of ancient Mesopotamia, p. 65, Eisenbrauns, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-931464-80-3

ஆதார நூற்பட்டியல்

[தொகு]
  • Green, Margaret Whitney (1975). Eridu in Sumerian Literature. Chicago: University of Chicago.
  • Leick, Gwendolyn (2001). Mesopotamia: The invention of the city. London: Allen Lane. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7139-9198-4.
  • Seton Lloyd, Ur-al 'Ubaid, 'Uqair and Eridu. An Interpretation of Some Evidence from the Flood-Pit, Iraq, British Institute for the Study of Iraq, vol. 22, Ur in Retrospect. In Memory of Sir C. Leonard Woolley, pp. 23–31, (Spring - Autumn, 1960)
  • Oates, Joan, "Ur and Eridu: the Prehistory", Iraq, vol. 22
  • Oates, Joan (1960), Ur in Retrospect: In Memory of Sir C. Leonard Woolley, pp. 32–50

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிது&oldid=3998692" இலிருந்து மீள்விக்கப்பட்டது