ஒரு இந்திய கனவு (திரைப்படம்)
ஒரு இந்திய கனவு | |
---|---|
இயக்கம் | கோமல் சுவாமிநாதன் |
தயாரிப்பு | ஸ்ரீ முத்தியாலம்மன் கிரியேஷன்ஸ் டி. பி. வரதராஜன், விஜயலட்சுமி தேசிகன் |
கதை | கோமல் சுவாமிநாதன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சுஹாசினி, ராஜீவ், பூர்ணம் விஸ்வநாதன், டி. எம். சாமிக்கண்ணு, வாத்தியார் ராமன் |
ஒளிப்பதிவு | எம். கேசவன் |
படத்தொகுப்பு | சி. ஆர். சண்முகம் |
வெளியீடு | 1983 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஒரு இந்திய கனவு, 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். கோமல் சுவாமிநாதன் இயக்கத்தில் சுஹாசினி, ராஜீவ் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் அந்த ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்றது.[1] சுஹாசினி மற்றும் ராஜீவ் இதில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பூர்ணம் விஸ்வநாதன், வாத்தியார் ராமன், சாமிக்கண்ணு இன்னும் பல குணசித்திர நடிகர்கள் நடித்தனர்.
கதை
[தொகு]கல்லூரியிருந்து கல்விச் சுற்றுப்பயணமாக ஆதிவாசிகள் வாழும் இடத்துக்கு (ஜவந்தி மலை) செல்லும் அனாமிகா (சுஹாசனி), அங்கு வாழும் ஆதிவாசிகளின் மோசமான வாழ்நிலையைக் கண்டு வேதனைப்பட்டு அவர்களின் நலனுக்காகப் போராடுவதுதான் இத்திரைப்படத்தின் கதை. அப்போராட்டத்தில் அவள் சந்திக்கும் இடையூறுகளும், அவளது மனிதாபிமானமும் தைரியமும், அவளுக்கு எதிராகவும் துணையாகவும் நிற்கும் கதாபாத்திரங்களின் செயல்களும் கதையை வளர்த்துச் செல்கின்றன.
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலியும் வைரமுத்துவும் எழுதியிருந்தனர்.[2][3]
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|
1. | "முத்தியலாம்மன் கோவிலிலே" | எம். எஸ். விஸ்வநாதன், பி. ௭ஸ். சசிரேகா குழுவினர். | ||
2. | "என் பெயரே எனக்கு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | ||
3. | "ஓடக்கரையில் ஒரு புளியமரம்" | பி. சுசீலா | ||
4. | "வேர்வைக்கு கூலியிங்கே.. நல்லகாலம்" | மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nathan, Archana. "In 'Oru Indhiya Kanavu', an Indian dream for incomplete justice". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-02.
- ↑ "Oru Indhiya Kanavu (Original Motion Picture Soundtrack)". Apple Music. Archived from the original on 22 March 2022. பார்க்கப்பட்ட நாள் 22 March 2022.
- ↑ "Oru Indhia Kannavu Tamil Film EP Vinyl Record by M.S.Viswanathan". Mossymart. Archived from the original on 29 September 2022. பார்க்கப்பட்ட நாள் 29 September 2022.