கரூர் மக்களவைத் தொகுதி

கரூர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
கரூர் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1957-நடப்பு
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்1,012,924
சட்டமன்றத் தொகுதிகள்133. வேடசந்தூர்
134. அரவக்குறிச்சி
135. கரூர்
136. கிருஷ்ணராயபுரம் (தனி)
138. மணப்பாறை
179. விராலிமலை

கரூர் மக்களவைத் தொகுதி (Karur Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 23-ஆவது தொகுதி ஆகும்.

தொகுதி மறுசீரமைப்பு

[தொகு]

கரூர் மக்களவைத் தொகுதியின் பழைய சட்டமன்றத் தொகுதிகள் - அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), மருங்காபுரி, குளித்தலை, தொட்டியம் ஆகியனவாகும். தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக கரூர் மக்களவைத் தொகுதியில் இருந்த மருங்காபுரி, குளித்தலை, தொட்டியம் ஆகியவை நீக்கப்பட்டன. புதிதாக மணப்பாறை, விராலிமலை ஆகிய இரு தொகுதிகள் இணைக்கப்பட்டன. இவை இரண்டும் புதிதாக உருவாக்கப்பட்டவை ஆகும்.

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:

  1. வேடசந்தூர்
  2. அரவக்குறிச்சி
  3. கரூர்
  4. கிருஷ்ணராயபுரம் (தனி)
  5. மணப்பாறை
  6. விராலிமலை

இங்கு வென்றவர்கள்

[தொகு]

இதுவரை நடந்துள்ள 16 தேர்தல்களில், 7 முறை காங்கிரசும், 6 முறை அதிமுகவும், திமுகவும், தமாகாவும் தலா ஒரு முறை வென்று உள்ளன. இதுவரை இத்தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்.

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி
1957 பெரியசாமி கவுண்டர் இந்திய தேசிய காங்கிரசு
1962 ஆர். ராமநாதன் செட்டியார் இந்திய தேசிய காங்கிரசு
1967 முத்துச்சாமி கவுண்டர் சுதந்திராக் கட்சி
1971 கே. கோபால் இந்திய தேசிய காங்கிரசு
1977 கே. கோபால் இந்திய தேசிய காங்கிரசு
1980 ஏ. ஆர். முருகையா இந்திய தேசிய காங்கிரசு
1984 ஏ. ஆர். முருகையா இந்திய தேசிய காங்கிரசு
1989 மு. தம்பிதுரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1991 என். முருகேசன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1996 கே. நாட்ராயன் தமிழ் மாநில காங்கிரசு
1998 மு. தம்பிதுரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1999 எம். சின்னசாமி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2004 கே. சி. பழனிசாமி திராவிட முன்னேற்றக் கழகம்
2009 மு. தம்பிதுரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2014 மு. தம்பிதுரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2019 ஜோதிமணி[1] இந்திய தேசிய காங்கிரசு
2024 ஜோதிமணி இந்திய தேசிய காங்கிரசு

18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல் : கரூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு செ. ஜோதிமணி 534,906 47.25% 16.11
அஇஅதிமுக கே. ஆர். எல். தங்கவேல் 368,090 32.52% Increase7.46
பா.ஜ.க வி. வி. செந்தில்நாதன் 102,482 9.05%
நாதக ரெ. கருப்பையா 87,503 7.73% Increase4.22
நோட்டா நோட்டா 8,275 0.73% 0.14
வெற்றி விளிம்பு 166,816 14.74% 23.56
பதிவான வாக்குகள் 1,132,045
பதிவு செய்த வாக்காளர்கள்
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

[தொகு]

வாக்காளர் புள்ளி விவரம்

[தொகு]
ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %
11,03,165[2]

முக்கிய வேட்பாளர்கள்

[தொகு]

இத்தேர்தலில், 11 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 31 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 42 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, அதிமுக வேட்பாளரான, தம்பிதுரையை 4,20,546 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் சின்னம் கட்சி பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம்
ஜோதிமணி காங்கிரஸ் 6,95,697 63.06%
தம்பிதுரை அதிமுக 2,75,151 24.94%
கருப்பையா நாம் தமிழர் கட்சி 38,543 3.49%
தங்கவேலு அமமுக 31,139 2.82%
ஹரிஹரன் மக்கள் நீதி மய்யம் 15,967 1.45%
நோட்டா - - 9,603 0.87%

16-ஆவது மக்களவைத் தேர்தல்

[தொகு]

முக்கிய வேட்பாளர்கள்

[தொகு]
வேட்பாளர் கட்சி கூட்டணி
மு. தம்பிதுரை அதிமுக 5,40,722
சின்னசாமி திமுக 3,45,475
என். எஸ். கிருஷ்ணன் தேமுதிக 76,560
ஜோதிமணி காங்கிரசு 30,459

வாக்குப்பதிவு

[தொகு]
2009 வாக்குப்பதிவு சதவீதம் [3] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [4] வித்தியாசம்
81.46% 80.47% 0.99%

15-ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள்

[தொகு]

38 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், அதிமுகவின் மு. தம்பிதுரை, திமுகவின் கே. சி. பழனிச்சாமியை 47,254 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
மு. தம்பிதுரை அதிமுக 3,80,542
கே. சி. பழனிசாமி திமுக 3,33,288
ஆர். இராமநாதன் தேமுதிக 51,196
ஆர். நடராசன் கொமுபே 14,269
ஆர். தர்மலிங்கம் பகுஜன் சமாஜ் கட்சி 5,413

14-ஆவது மக்களவை

[தொகு]

கே. சி. பழனிசாமி (திமுக) – 4,50,407.

ராஜா பழனிச்சாமி (அதிமுக) – 2,59,531.

வெற்றி வேறுபாடு - 1,90,876 வாக்குகள்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "General elections to the 17th Lok Sabha, 2019 - List of members elected" (PDF). New Delhi: Election Commission of India. 25 May 2019. p. 27. பார்க்கப்பட்ட நாள் 2 June 2019.
  2. "General Election 2019 - Election Commission of India". results.eci.gov.in. Archived from the original on 22 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 11 August 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) – GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2012-12-07. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 29 செப்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரூர்_மக்களவைத்_தொகுதி&oldid=4040649" இலிருந்து மீள்விக்கப்பட்டது