சம்மட்டி எறிதல்
சம்மட்டி எறிதல் (Hammer throw) ஓர் தட கள விளையாட்டு ஆகும். இதில் ஓர் கைப்பிடியடன் கம்பி ஒன்றினால் பிணைக்கப்பட்ட கனமான மாழைப் பந்து ஒன்றை வெகு தொலைவிற்கு எறிதலே போட்டியின் நோக்கமாகும். பழைமையான இசுக்காட்லாந்தின் விளையாட்டுப் போட்டிகளில் உண்மையிலேயே சம்மட்டி ஒன்றை பயன்படுத்தியதை ஒட்டி "ஹாம்மர் த்ரோ" என்ற பெயர் வந்தது.[1]
மற்ற எறிதல் போட்டிகளைப் போலவே இதிலும் போட்டியாளர்கள் சம்மட்டியை தங்கள் தலைக்கு மேலே வட்டமாகச் சுழட்டுகிறார்கள். பின்னர் விசையை கூட்டி ஒன்று முதல் நான்கு சுற்றுக்கள் இந்த வட்டத்தில் சுற்றுகிறார்கள். ஒவ்வொருச் சுற்றிலும் விசையும் வேகமும் கூட்டுகிறார்கள். இறுதியில் வட்டத்தின் முன்னிலிருந்து சரியான கோணத்தில் பந்தை விடுகிறார். வெகு தொலைவை எட்ட பந்து விடப்படும் கோணமும் வேகமும் மிகவும் முகனையாகும்.
தொடர்புடைய பக்கங்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- சம்மட்டி எறிதல் வரலாறு பரணிடப்பட்டது 2009-07-27 at the வந்தவழி இயந்திரம்
- சம்மட்டி எறிதல் சாதனைகள் பரணிடப்பட்டது 2009-07-27 at the வந்தவழி இயந்திரம்