சீரிசை சீருடற்பயிற்சி
சீரிசை சீருடற்பயிற்சிகள் (Rhythmic gymnastics, சுருக்கம்:RG) என்ற தனிநபர்கள் அல்லது அணிகள் (பொதுவாக ஐந்து நபர்கள்) பங்கேற்கும் விளையாட்டில் போட்டியாளர்கள் ஒன்று அல்லது இரண்டு பயிற்சிக் கருவிகளை கையாள்வதாகும். இந்த பயிற்சிக் கருவிகள்: கயிறு, வளையம், பந்து, பிடிதடிகள்,நாடா மற்றும் கட்டற்றவை (கருவிகள் ஏதுமின்றி, தரைப் பயிற்சிகள்) ஆகும். சீரிசை சீருடற்பயிற்சி பாலே நடனம், சீருடற்பயிற்சிகள், நடனம், மற்றும் கருவிக் கையாளுதல் கூறுகளை ஒன்றிணைத்தது. இந்தப் போட்டியில் தாவல்கள், சுழலல்கள், வளைதன்மை, கருவிக் கையாளல், நிறைவேற்றம் மற்றும் கலைநயம் ஆகியவற்றிற்காக மதிப்பிடப்பட்டு நடுவர் குழாம் வழங்கும் மிகக் கூடுதலான மதிப்பெண்களைப் பெற்றவர் அல்லது அணி வாகை சூடுவர்.
பன்னாட்டுப் போட்டிகளில் பதினாறு வயதிற்குட்பட்டோர், இளையோர், என்றும் மற்றவர்கள் முதியோர் என்றும் அவர்களது பிறந்தநாளைக் கொண்டு பிரிக்கப்படுகின்றனர்.
வெளி இணைப்புகள்
[தொகு]- Fédération Internationale de Gymnastique (ஆங்கிலம்) / (பிரெஞ்சு)
- Rhythmic Gymnastics (ஆங்கிலம்) / (செருமன் மொழி)
- The Art of Gymnastics - The Israeli site of Rhythmic Gymnastics பரணிடப்பட்டது 2009-09-23 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலம்)
- Men's Rhythmic Gymnastics
- More on rhythmic gymnastics பரணிடப்பட்டது 2009-02-13 at the வந்தவழி இயந்திரம்