திமீத்திரி முராத்தொவ்
திமீத்திரி முராத்தொவ் Dmitry Muratov | |
---|---|
2018 இல் முராத்தொவ் | |
பிறப்பு | திமீத்திரி அந்திரியேவிச் முராத்தொவ் அக்டோபர் 30, 1961 குய்பீசெவ், குய்பீசெவ் மாகாணம், உருசியா, சோவியத் ஒன்றியம் |
குடியுரிமை | உருசியா |
கல்வி | குய்பீசெவ் மாநிலப் பல்கலைக்கழகம் (மொழியறிவியல், 1983) |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1987–இன்று |
பணியகம் | நோவயா கசியெத்தா |
விருதுகள் | அமைதிக்கான நோபல் பரிசு (2021) |
வலைத்தளம் | |
novayagazeta |
திமீத்திரி அந்திரியேவிச் முராத்தொவ் (Dmitry Andreyevich Muratov; உருசியம்: Дми́трий Андре́евич Мура́тов, பிறப்பு: 30 அக்டோபர் 1961) என்பவர் உருசியப் பத்திரிகையாளர் ஆவார். இவர் நோவயா கசியெத்தா பத்திரிகையின் ஆசிரியராக 1995 முதல் 2017 வரை பணியாற்றினார்.[1] இவருக்கு 2021 இற்கான அமைதிக்கான நோபல் பரிசு பிலிப்பீன்சின் ஊடகவியலாளர் மரியா இரேசாவுடன் இணைந்து வழங்கப்பட்டது.[2]
பத்திரிக்கையாளர்களைப் பாதுகாக்கும் குழுவால் நோவயா கசியெத்தா பத்திரிகை "உருசியாவில் இன்று தேசிய செல்வாக்குள்ள உண்மையான விமர்சன செய்தித்தாள்" என்று அழைக்கப்படுகிறது. அரசாங்க ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்ற முக்கிய தலைப்புகளில் முழுமையான அறிக்கைகளுக்காக இந்தப் பத்திரிகை அறியப்படுகிறது.[3]
2007 ஆம் ஆண்டில், பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு இவருக்கு சர்வதேச பத்திரிகை சுதந்திர விருதை வழங்கியது. தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், சிறைவாசங்களை எதிர்கொண்டு பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாப்பதில் தைரியம் காட்டும் பத்திரிகையாளர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.[4] 2010 இல் இவருக்கு பிரான்சின் உயர் விருதான செவாலியே விருது வழங்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Главным редактором "Новой газеты" стал Сергей Кожеуров". Novaya Gazeta. 17 November 2017. Archived from the original on 17 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 17 November 2017.
- ↑ https://archive.today/20211008090154/https://www.nobelprize.org/prizes/peace/2021/summary/
- ↑ "Dmitry Muratov, Editor of Novaya Gazeta, Russia".
- ↑ "CPJ To Honor Five Journalists". Committee to Protect Journalists. 24 September 2007. பார்க்கப்பட்ட நாள் 12 May 2011.
வெளி இணைப்புகள்
[தொகு]- திமீத்திரி முராத்தொவ் on Nobelprize.org