கோபி அன்னான்

கோபி அன்னான்
Kofi Annan
2012-இல் அன்னான்
7வது ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர்
பதவியில்
1 சனவரி 1997 – 31 டிசம்பர் 2006
முன்னையவர்புத்துருசு புத்துருசு காலீ
பின்னவர்பான் கி மூன்
சிரியாவுக்கான ஐநா,
அரபு நாடுகள் கூட்டமைப்பு சிறப்புத் தூதர்
பதவியில்
23 பெப்ரவரி 2012 – 31 ஆகத்து 2012
முன்னையவர்புதிய பதவி
பின்னவர்லக்தார் பிராகிமி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1938-04-08)8 ஏப்ரல் 1938
கொமாசி, கானா
இறப்பு18 ஆகத்து 2018(2018-08-18) (அகவை 80)
பேர்ன், சுவிட்சர்லாந்து
துணைவர்(கள்)
தித்தி அலக்கிசா
(தி. 1965; ம.மு. 1983)
நேன் லாகர்கிரென்
(தி. 1984, 2018)
பிள்ளைகள்3
கல்வி
வேலைதூதர்
கையெழுத்து

கோபி அன்னான் (ஏப்ரல் 8, 1938 – ஆகத்து 18, 2018) கானாவைச் சேர்ந்தவர். ஐக்கிய நாடுகள் அவையின் ஏழாவது செயலாளராக இருந்தவர். ஜனவரி 1, 1997 இல் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கோபி அன்னான் டிசம்பர் 31, 2006 அன்று ஓய்வு பெற்றார். 2001 இல் அன்னான் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கு கூட்டாக "ஒரு சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைதியான உலகத்திற்காக உழைத்ததற்காக " அமைதிக்கான நோபல் பரிசு, விருது வழங்கப்பட்டது.[1]

பிப்ரவரி 23, 2012 முதல் 31 ஆகஸ்ட் 2012 வரை, சிரியாவிற்கான ஐ.நா. அரபு லீக் கூட்டுச் சிறப்பு பிரதிநிதியாக இருந்தார் .[2][3] ஐ.நா.வின் பற்றாக்குறையான பங்களிப்பு குறித்து சலிப்படைந்த கோபி அன்னான் சிறப்பு பிரதிநிதி பதவியில் இருந்து விலகினார்.[4]

பிறப்பும், வளர்ப்பும், கல்வியும்

[தொகு]

கானாவின் குமசியின் கோபேன்ட்ரோஸ் பகுதியில் பிறந்தார். இவரும் இவரது சகோதரியும் இரட்டையர்களாவர். கானா நாட்டின் கலாசாரப்படி இரட்டையர்கள் கௌரவமாகக் கருதப்படுவர். அவரது மாமாவும் தாத்தாவும் குடியினரின் தலைவர்களாக இருந்தனர்.[5]

கானா நாட்டில் ஓர் வழக்கமாக குழந்தைகள் பிறந்த நாளினையே அவர்களுக்கு பெயராகச் சூட்டுவர். அவ்வழக்கப்படியே இவருக்கு “கோஃபி”(அதாவது வெள்ளிக்கிழமை அவர்களின் மொழியில்) என்று பெயரிட்டனர்.[6] 1954 முதல் 1957 வரை கேப் கோஸ்டிலுள்ள பள்ளியில் கல்வி பயின்றார்.[7] 1957இல் தனது பள்ளிக்கல்வியை முடித்தார். அவ்வாண்டு கானா நாட்டிற்கு ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை கிடைத்தது. இவரது இரட்டைச் சகோதரி 1991 இல் மரணமானார்.

அன்னான் ஆங்கிலம், பிரெஞ்சு, அகான் போன்ற மொழிகளில் பேசத் தெரிந்தவர்.[8]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

1962 ஆம் ஆண்டு, கோஃபி அன்னான், உலக சுகாதார அமைப்பில் ஒரு பட்ஜெட் அதிகாரியாக தனது பணியை துவங்கினார் . 1974 முதல் 1976 வரை, அவர் கானா சுற்றுலாத்துறை இயக்குநர் பணியாற்றினார் .1980 களின் பிற்பகுதியில், அன்னான் ஐ.நா வேலைக்கு திரும்பினார் . உதவி பொது செயலாளராக மூன்று பதவிகளில் நியமிக்கப்பட்டார் - மனித வள மேலாண்மை மற்றும் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் (1987-1990); திட்டம் திட்டமிடல், பட்ஜெட் மற்றும் நிதி, மற்றும் கட்டுப்பாட்டாளர் (1990-1992) மற்றும் அமைதிசெயல்பாடுகள் (டிசம்பர் 1996 மார்ச் 1993) . 1994 ல் நடந்த ருவாண்டா படுகொலை போது அன்னான் ஐ.நா. அமைதிப்படை நடவடிக்கையை இயக்கினார்.2003 இல் கனடிய முன்னாள் ஜெனரல் ரோமியோ தல்லைரே நிகழக்கூடிய இனப்படுகொலையில் அன்னாநின் செயல்பாடு அதீத செயலற்றதாக இருந்ததாக கூறினார்.[9]

உருவாண்டா படுகொலைகள் 1994களிலேயே நடத்தப்பட்டன. அப்போது ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படைக்கு தலைமை தாங்கியவர் அன்னான். 2003ல் கனடாவின் அதிகாரியான தால்லயிரே இதைப்பற்றி தன் நூலில் எஔதி இருக்கிறார். மார்ச் 1994 இலிருந்து அக்டோபர் 1995 வரை நேருதவிச் செயலராக பணியாற்றினார்.அவர் ஏப்ரல் 1996 ல் முன்னாள் யூகோஸ்லாவியா விற்கு பொது செயலாளரின் சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.[10]

ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர்

[தொகு]

நியமனம்

[தொகு]

1996 ஆம் ஆண்டு டிசம்பர் 13 இல் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை முந்தைய பொது செயலாளர், டாக்டர் பூட்ரோஸ் பூட்ரோஸ் காளிக்கு பதிலாக கோபி அன்னான் பரிந்துரை செய்யபட்டார் .[11][12] நான்கு நாட்களுக்கு பின்னர் ஜெனரல் சபையில் வாக்கெடுப்பு மூலம் உறுதிசெய்ய பட்டு , 1 ஜனவரி 1997 முதல் அன்னான் பொது செயலாளராக அவரது பதவிக் காலத்தை துவங்கினார் .[13]

செயல்பாடுகள்

[தொகு]

ஏப்ரல் 2001 இல், அன்னான் எச்.ஐ. வி / எய்ட்ஸ் தொற்றை கையால ஒரு ஐந்து அம்ச "நடவடிக்கைக்காண அழைப்பு" வெளியிட்டார் ."தனிப்பட்ட முன்னுரிமை" என்று அதை குறிப்பிட்ட அவர் , உலக எய்ட்ஸ் மற்றும் சுகாதார நிதியை முன்மொழிந்தார் .டிசம்பர் 10, 2001 இல் அண்ணன் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கு கூட்டாக "ஒரு சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைதியான உலகதிற்காக உழைததர்காக " அமைதிக்கான நோபல் பரிசு, விருது வழங்கப்பட்டது.[14]

சிரிய உள்நாட்டுப் போர்

[தொகு]

பெப்ரவரி 2012ல் அன்னான் ஐக்கிய நாடுகளின் அரேபியக் குழுவில் நியமிக்கப்பட்டார். அக்குழு சிரிய நாட்டின் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவரும் எண்ணத்துடன் அமைக்கப்பட்டது.[15] He developed a six-point plan for peace:[16] இவர் அக்குழுவில் இருந்து தன் சிறப்பு உறுப்பினர் பதவியை ஆகத்து 2, 2012ல் விடுத்தார்.[17] அதற்கு காரணமாக அசாத் அரசும் சிரிய புரட்சிக் குழுக்களுக்கும் இடையிலுள்ள அமைதிக்கான ஒத்துழைப்பின்மையை காரணம் காட்டினார்[18] மேலும் அனைத்துலக நாடுகளின் ஒத்துழைப்பு சரியாக அமையாதமையாலும் அவற்றின் சார்புடைய செயல்பாடுகளினாலும் அங்கு அமைதியை கொண்டு வர இயலவில்லை என்றும் அறிவித்தார்.[19]

மேடைப்பேச்சுகள்

[தொகு]

மறைவு

[தொகு]

உடல்நலக் குறைவு காரணமாக சுவிட்சர்லாந்து நாட்டு மருத்துவமனையில் 18 ஆகஸ்டு 2018 அன்று காலமானார்.[20]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Nobel Peace Prize 2001". Oslo: The Norwegian Nobel Committee. 12 October 2001. Archived from the original on 28 நவம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 21 October 2010.
  2. "United Nations Department of Political Affairs - Syria". Un.org. 2012-10-19. பார்க்கப்பட்ட நாள் 2013-03-29.
  3. Jonathan Marcus (2012-02-24). "Syria faces ultimatum from international conference". Bbc.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2013-03-29.
  4. "Kofi Annan resigns as UN Syria envoy". பார்க்கப்பட்ட நாள் 2 August 2012.
  5. "Kofi Annan - The Man To Save The World?", சாகா பத்திரிக்கை, November 2002
  6. Akan dictionary entry for Kofi at dictionary.kasahorow.com
  7. [1]
  8. "Kofi Annan" பரணிடப்பட்டது 2010-07-13 at the வந்தவழி இயந்திரம், The Elders
  9. "FORMER SECRETARY-GENERAL". United Nations. பார்க்கப்பட்ட நாள் 24 August 2013.
  10. "UN chief's Rwanda genocide regret". BBC News. 26 March 2004. http://news.bbc.co.uk/2/hi/africa/3573229.stm. பார்த்த நாள்: 4 April 2010. 
  11. UN(13 December 1996). "BIO/3051 – "Kofi Annan of Ghana recommended by Security Council for appointment as Secretary-General of United Nations"". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 12 December 2006.
  12. Traub, James (2006). The Best Intentions. New York: Farrar, Straus and Giroux. pp. 66–67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-374-18220-5.
  13. UN(17 December 1996). "GA/9208 -"General Assembly appoints Kofi Annan of Ghana as seventh Secretary-General"". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 12 December 2006.
  14. "The Nobel Peace Prize 2001". Oslo: The Norwegian Nobel Committee. 12 October 2001. Archived from the original on 28 நவம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 21 October 2010.
  15. Syria faces ultimatum from international conference. BBC News. 23 February 2012[2]
  16. Kofi Annan's six-point plan for Syria, 27 March 2012, Aljazeera
  17. Syrian rebels pound military airport, 2 August 2012, CNN.com
  18. Press conference by Kofi Anon, Joint Special Envoy for Syria. ஐக்கிய நாடுகள் ஜெனீவா அலுவலகம். 2 August 2012.
  19. Black, Ian (2 August 2012). "Kofi Annan resigns as Syria envoy". தி கார்டியன். http://www.guardian.co.uk/world/2012/aug/02/kofi-annan-resigns-syria-envoy. பார்த்த நாள்: 3 August 2012. 
  20. முன்னாள் ஐ.நா. செயலர் கோஃபி அன்னான் காலமானார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபி_அன்னான்&oldid=3816080" இலிருந்து மீள்விக்கப்பட்டது