தன் மின் தூண்டல்
மின்காந்தவியல் |
---|
பொதுவான குறியீடு(கள்): | L |
SI quantity dimension: | M1·L2·T−2·I−2 |
SI அலகு: | ஹென்றி (H) |
பிற அளவைகளில் இருந்து: |
ஒரு கம்பிச் சுருளில் பாயும் மின்னோட்டத்தில் மாற்றம் ஏற்படும்பொழுது அக்கம்பிச் சுருளில் ஒரு எதிா் மின்னியக்குவிசை தூண்டப்படும் நிகழ்வு தன் மின் தூண்டல் அல்லது மின்தூண்டல் அல்லது தூண்டம் (Inductance) எனப்படும்.
கம்பிச் சுருள் ஒன்று மின்கலம் Bt மற்றும் சாவி K உடன் தொடா் இணைப்பு முறையில் இணைக்கப்படுகிறது. சாவி அழுத்தப்படும் பொழுது கம்பிச் சுருளின் வழியே பாயும் மின்னோட்டம், அதன் பெரும மதிப்பிற்கு அதிகரிக்கிறது. அதற்கு ஏற்ப கம்பி சுருளோடு தொடா்பு கொண்ட காந்தப்பாயமும் அதிகாிக்கிறது. எனவே தூண்டப்பட்ட மின்னோட்டம் கம்பிச் சுருளில் பாய்கிறது.
லென்ஸ் விதியின்படி, தூண்டப்பட்ட மின்னோட்டமானது, மின்கலத்திலிருந்து பாயும் மின்னோட்டத்திற்கு எதிரான திசையில் பாய்ந்து, கம்பிச் சுருளில் மின்னோட்டம் அதிகாிப்பதை எதிா்க்கிறது. சாவி அழுத்தப்படுவதை நிறுத்தினால் கம்பிச் சுருளில் பாயும் மின்னோட்டம் சுழிக்கு குறையும். எனவே கம்பிச் சுருளுடன் தொடா்பு கொண்ட காந்தப்பாயமும் குறையும். லென்சு விதிப்படி, தூண்டப்பட்ட மின்னோட்டமானது, மின்கலத்திலிருந்து பாயும் மின்னோட்டத்திற்கு எதிரான திசையில் பாய்ந்து, கம்பிச் சுருளில் மின்னோட்டம் குறைவதை எதிா்க்கிறது.
தன்மின்தூண்டலுக்கான வாய்பாடு: மின்தூண்டல், தூன்டப்பட்ட மின்னோட்டத்திற்கும் அதற்குக் காரணமான மின்னோட்டத்திற்குமான விகிதமாக வரையறுக்கப்படுகிறது.[1]
- L - மின்தூண்டல், ஹென்றிகளில்,
- i - மின்னோட்டம், ஆம்பியர்களில்,
- Φ - காந்தப்பாயம், வெபரில்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Serway, A. Raymond; Jewett, John W.; Wilson, Jane; Wilson, Anna; Rowlands, Wayne (2017). "Inductance". Physics for global scientists and engineers (2 ed.). Cengage AU. p. 901. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780170355520.
- மேல்நிலை - இரண்டாம் ஆண்டு, தமிழ்நாடு பாடநூல் கழகம், சென்னை - 600006
சான்றுகள்
[தொகு]- Frederick W. Grover (1952). Inductance Calculations. Dover Publications, New York.
- Griffiths, David J. (1998). Introduction to Electrodynamics (3rd ed.). Prentice Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-13-805326-X.
- Wangsness, Roald K. (1986). Electromagnetic Fields (2nd ed.). Wiley. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-81186-6.
- Hughes, Edward. (2002). Electrical & Electronic Technology (8th ed.). Prentice Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-582-40519-X.
- Karl Küpfmüller, Einführung in die theoretische Elektrotechnik, Springer-Verlag, 1959.
- Heaviside O., Electrical Papers. Vol.1. – L.; N.Y.: Macmillan, 1892, p. 429-560.
- Fritz Langford-Smith, editor (1953). Radiotron Designer's Handbook, 4th Edition, Amalgamated Wireless Valve Company Pty., Ltd. Chapter 10, "Calculation of Inductance" (pp. 429–448), includes a wealth of formulas and nomographs for coils, solenoids, and mutual inductance.
- F. W. Sears and M. W. Zemansky 1964 University Physics: Third Edition (Complete Volume), Addison-Wesley Publishing Company, Inc. Reading MA, LCCC 63-15265 (no ISBN).