பவய் ஏரி
பவய் ஏரி | |
---|---|
அமைவிடம் | மும்பை, மகாராஷ்டிரா |
ஆள்கூறுகள் | 19°08′N 72°55′E / 19.13°N 72.91°E |
வடிநிலப் பரப்பு | 6.61 km2 (2.55 sq mi) |
வடிநில நாடுகள் | இந்தியா |
அதிகபட்ச ஆழம் | 12 மீ (39 அடி) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 58.5 மீ (191.93 அடி) |
குடியேற்றங்கள் | பொவாய் |
பவய் ஏரி அல்லது பொவாய் ஏரி, மும்பை நகரத்தின் புறநகர் மாவட்டத்தில் உள்ள பவய் பகுதியில் உள்ள ஒரு மனிதர்களால் வெட்டப்பபட்ட ஒரு செயற்கை ஏரியாகும். மும்பை இந்திய தொழில்நுட்பக்கழகம் இந்த ஏரியி்ன் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.[1] இந்த ஏரி வெட்டப்பட்ட போது இதன் பரப்பளவு 2.1 ச.கி.மீ (520 ஏக்கர்கள்) ஆகவும் ஆழம் கரையோரத்தில் 3 மீட்டர் (9.8 அடி) முதல் அதிகபட்ச ஆழமாக 12 மீட்டர் (39 அடி) வரையும் இருந்தது.[2] இந்த ஏரி நீர் காலப்போக்கில் மாசடைந்து குடிப்பதற்கு ஏற்றதல்ல என்று அறிவிக்கப்பட்டு விட்டது. தற்போது இந்த ஏரி சுற்றுலாப்பயணிகளைக் கவரக்கூடிய இடமாக உள்ளது. இந்த ஏரியிலிருந்து மித்தி ஆறு உற்பத்தி ஆகிறது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Powai lake". Archived from the original on 2014-09-24. பார்க்கப்பட்ட நாள் 2012-08-30.
- ↑ "History Of Powai Lake". Members.tripod.com. பார்க்கப்பட்ட நாள் 2013-10-24.