மசனோபு புக்குவோக்கா

மசனோபு ஃவுக்குவோக்கா
பிறப்பு(1913-02-02)2 பெப்ரவரி 1913
இயோ, சப்பான்
இறப்பு16 ஆகத்து 2008(2008-08-16) (அகவை 95)
தேசியம்சப்பானியர்
பணிவேளாண் அறிவியலாளர், மெய்யியலாளர்
அறியப்படுவதுஇயல்முறை வேளாண்மை
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஒரு-வைக்கோல் புரட்சி The One-Straw Revolution
விருதுகள்ரமோன் மாக்சாசே விருது, Desikottam Award, Earth Council Award

மசனோபு ஃபுக்குவோக்கா (Masanobu Fukuoka, சப்பானிய மொழி: 福岡正信|福岡 正信, பெப்ரவரி 2, 1913 – ஆகத்து 16, 2008) ஒரு சப்பானிய வேளாண் அறிஞரும் மெய்யியலாளரும் ஆவார். இவரது தரிசுநில மேம்பாட்டு முறையும் இயற்கையோடு இயைந்த வேளாண்முறையும் புகழ் பெற்றது. உழவு, களைக்கொல்லிகள் இல்லாமல் பழங்குடியினரின் பயிர்வளர்ப்பு முறையை ஒட்டி அமைந்த ஒரு முறையை இவர் வலியுறுத்தினார்[1]. இவரது முறையை 'இயல்முறை வேளாண்மை' என்றும் 'எதுவும் செய்யாத வேளாண்மை' என்றும் அழைக்கின்றனர்.[2][3][4]

இவர் சப்பானிய மொழியில் பல நூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தொலைக்காட்சியிலும் பல நேர்காணல்களைத் தந்துள்ளார்[5]. பயிர் செய்யும் முறையையும் தாண்டி இயற்கையான உணவுமுறையையும் வாழ்முறையையும் கடைப்பிடிப்பதை இவர் ஊக்குவித்தார்.[6]

வரலாறு

[தொகு]

ஃப்யூகூவோகா 2 பிப்ரவரி 1913 அன்று பிறந்தார். ஃப்யூகூவோகா ஒரு படித்த மற்றும் பணக்கார நில உரிமையாளர் மற்றும் உள்ளூர் தலைவரின் இரண்டாவது மகன். அவர் தாவர நோயியல் ஆய்வு பற்றி படித்தார். யோக்கோகாமாவில் ஒரு சுங்க பரிசோதகர் வேலையில் 1934ல் சேர்ந்து பல ஆண்டுகளாக இருந்தார். இவர் ஷிகோகு என்ற ஜப்பானிய தீவை சேரந்தவர்.

பின்னணி

[தொகு]

நுண்ணுயிரியலில் தேர்ச்சி பெற்ற இவர், தாவர நோயியல் ஆய்வாளராக முதலில் பணிபுரிந்தார். தனது 25-ஆம் அகவையில் இக்கால வேளாண் முறைகளின் மேல் ஏற்பட்ட ஐயப்பாட்டின் விளைவாக, தான் வகித்த அறிவியல் ஆராய்ச்சியாளர் பணியினை விட்டுவிட்டு, தெற்கு யப்பானின் சிகோகு தீவிலுள்ள தனது சொந்த நிலத்தில் இயல்முறை விவசாயம் செய்ய முற்பட்டார். முறையான வேளாண் பணிகளான களையெடுத்தல், பூச்சிக்கொல்லி மருந்திடல், உரமிடல் மற்றும் நிலத்தை உழவு செய்தல் ஆகிய பணிகள் இல்லாத இயற்கை வேளாண்மை முறைகளைக் கண்டறிந்து அவ்வழியே நெல், எலுமிச்சை போன்றவற்றை விளைவிப்பதில் முழுமையாக ஈடுபட்டார்.

மேற்கத்திய வேளாண் அறிவியலிலிருந்து, புக்குவோக்காவின் மாற்றம், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட இயற்கை வேளாண் முறைகளுக்கு இணையானது. புக்குவோக்கா தனது முறை மேற்கத்திய வேளாண் முறைகளிலிருந்து மேம்பட்டு மண்வளம் குன்றாமல், தேவைக்கு மிகுதியான உடலுழைப்பு இல்லாமல் நல்ல விளைச்சலைத் தரக்கூடியது என்று காட்ட முயன்றார்.

இயற்கை உழவு முறை

[தொகு]

புக்குவோக்கா தான் பயிலும் உழவு முறையை 'இயற்கை உழவு முறை' என்று அழைக்களானார். அவரது செயல்பாடுகள் பெரும்பாலும் யப்பான் நாட்டிற்கு பொருந்துவதாக இருப்பினும், அச்செயல்பாடுகளின் உள்ளார்ந்த கொள்கைகள், உலக நாடுகள் பலவற்றில் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

புக்குவோக்காவின் முறைகளில் இயற்கைச் சூழல் கூடுமான வரை பேணப்படுகின்றது. சரியான சூழல் அமைத்துக்கொடுக்கப்படும்போது விதைகள் உழவு செய்யாமல் முளைக்க வைக்கப்படுகின்றது.

தானியங்களின் கீழே வெள்ளை கிராம்புச்செடி விளைவிக்கப்படுகின்றது. இந்த வெள்ளை கிராம்புச்செடிகள், தானிய செடிகளுக்கு தேவையான தழைச்சத்தினை தருகின்றது. களைகளைப் பிடுங்காமல் வளரவிட்டு, பின் வெட்டப்பட்டு கதிருக்கு அடியிலேயே இடப்படுகின்றது. இவ்வாறு இடும்போது, அக்களைகளிலுள்ள அத்தனை ஊட்டமும் நேரடியாக மண்ணுக்குச்சென்று கதிர்களால் எடுத்துக்கொள்ளப்படுகின்றது. கதிர் விளைந்த வயலில் வாத்துக்கள் மேய்ச்சலுக்கு விடப்படுகின்றன. மேலும் சில நன்மை செய்யும் பூச்சிகளும் வயலுக்குள் விடப்படுகின்றன.

இம்முறையில் நிலம் எப்போதும் பசுமை போர்த்தியபடி இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படுகின்றது. முதல் பட்டத்தில் விதைக்கப்பட்டு, கதிரறுக்கப்பட்ட தாவரங்களின் மிச்சங்கள் மூடாக்காகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இம்முறையில் கதிரறுக்கப்படுவதற்கு முன்னரே அடுத்த பட்டத்திற்கான பயிர் நடவு செய்யப்படுகின்றது. பண்டைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விதை நேர்த்தி முறையான 'விதையுருண்டை' முறையினை செயல்பாட்டிற்கு கொண்டுவந்தார். இம்முறையில், களிமண், மக்கிய உரம் இவற்றை கலந்து சிறிய உருண்டையாய் பிடித்து, அதனுள் ஒவ்வொரு விதை மணியையும் செருகி, நேர்த்த செய்யப்பட்டு பின் நடவு செய்யப்படுகின்றன. இவ்வாறு விளைவிக்கப்பட்ட கதிர்கள், செழிப்பாகவும், அடர்த்தியாகவும், விளைச்சல் மிகுதியாகக் கொடுக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

செலவு பிடிக்கும் செயற்கை உரங்கள் இல்லாமல், உழவு இயந்திரத்தின் தேவை இல்லாமல் விளங்கும் புக்குவோக்காவின் முறைகளும், கொள்கைகளும் சிறிய அளவிலான நிலம் வைத்திருக்கும் குறுவிவசாயிகளுக்கு கை கொடுக்கவல்லது.

விருதுகள்

[தொகு]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gammage, Bill (2005), "'...far more happier than we Europeans': Aborigines and farmers" (PDF), London Papers in Australian Studies (formerly Working Papers in Australian Studies), Menzies Centre for Australian Studies. King's College. (12): 1–27, பன்னாட்டுத் தர தொடர் எண் 1746-1774, archived from the original (PDF) on 9 அக்டோபர் 2010, பார்க்கப்பட்ட நாள் 23 November 2010 {{citation}}: External link in |journal= (help)
  2. Sustainable Agriculture: Definition and Terms. Special Reference Briefs Series no. SRB 99-02, September 1999. Compiled by: Mary V. Gold, Alternative Farming Systems Information Center, US Department of Agriculture
  3. Setboonsarng, S. and Gilman, J. 1999. Alternative Agriculture in Thailand and Japan. HORIZON Communications, Yale University, New Haven, Connecticut. Online review version (Retrieved 8 March 2011).[தொடர்பிழந்த இணைப்பு]
  4. What does Natural Farming mean? by Toyoda, Natsuko. Japan Spotlight, Nov. Dec. 2008.
  5. (சப்பானிய மொழி) NHK TV station appearances', 1976 earliest search result (Japanese only; Retrieved 30 November 2010)
  6. Nurturing the soil, feeding the people: an introduction to sustainable agriculture, Scheewe W., Crust Foundation, INC, Phillipines.

7. ஒற்றை வைக்கோல் புரட்சி - மசானபு ஃபுகோகா [தன்னறம் வெளியீீீடு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மசனோபு_புக்குவோக்கா&oldid=3860754" இலிருந்து மீள்விக்கப்பட்டது