மாலிப்டினம்(III) அயோடைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்s மாலிப்டினம் மூவயோடைடு | |
இனங்காட்டிகள் | |
14055-75-5 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6432099 |
| |
பண்புகள் | |
MoI3 | |
வாய்ப்பாட்டு எடை | 476.65 கி/மோல் |
தோற்றம் | கருப்பு திண்மம்[1] |
உருகுநிலை | 927 °C (1,701 °F; 1,200 K) (சிதைவடைகிறது) |
கரைவதில்லை | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மாலிப்டினம்(III) அயோடைடு (Molybdenum(III) iodide) என்பது MoI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
தயாரிப்பு
[தொகு]மாலிப்டினம் அறுகார்பனைலுடன் அயோடின் வாயு 105°செல்சியசு வெப்பநிலையில் வினை புரிந்து மாலிப்டினம்(III) அயோடைடு உண்டாகிறது.[2]
- 2 Mo(CO)6 + 3 I2 → 2 MoI3 + 12 CO
மாலிப்டினம்(V) குளோரைடுடன் கார்பன் டைசல்பைடில் கரைக்கப்பட்ட ஐதரசன் அயோடைடு கரைசலைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் மாலிப்டினம்(III) அயோடைடு உருவாகும்.
- MoCl5 + 5 HI → MoI3 + 5 HCl + I2
300 °செல்சியசு வெப்பநிலையில் (572 °பாரங்கீட்டு) மாலிப்டினம் உலோகமும் அதிகப்படியான அயோடினும் நேரடியாக வினை புரிந்தாலும் மாலிப்டினம்(III) அயோடைடு உருவாகும்.
- 2 Mo + 3 I2 → 2 MoI3
மாலிப்டினம்(III) அயோடைடு மாலிப்டினத்தின் மிக உயர்ந்த நிலைப்புத்தன்மை கொண்ட அயோடைடு என்பதால் இதுவே விரும்பத்தக்க தயாரிப்புப் பாதையாகும்.
பண்புகள்
[தொகு]மாலிப்டினம்(III) அயோடைடு அறை வெப்பநிலையில் காற்றில் நிலைப்புத்தன்மையுடன் இருக்கும் ஒரு கருப்பு எதிர்காந்த திண்மமாகும். வெற்றிடத்தில், இது 100 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் மாலிப்டினம்(II) அயோடைடு மற்றும் அயோடினாக சிதைகிறது. இது முனைவு மற்றும் முனைவற்ற கரைப்பான்களில் கரையாது.[2] இதன் படிக அமைப்பு சிர்க்கோனியம்(III) அயோடைடுடன் சமகட்டமைப்பு கொண்டுள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. pp. 1019–1021. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
- ↑ 2.0 2.1 hrsg. von Georg Brauer. Unter Mitarb. von M. Baudler (1981). Handbuch der präparativen anorganischen Chemie / 3 (3rd ed.). Stuttgart: Enke. p. 1539. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-432-87823-0. இணையக் கணினி நூலக மைய எண் 310719495.
- ↑ Riedel, Erwin; Christoph, Janiak; Meyer, Hans-Jürgen (2012). Riedel moderne anorganische Chemie. Riedel, Erwin, 1930-, Janiak, Christoph., Meyer, Hans-Jürgen. (4. Aufl ed.). Berlin: De Gruyter. p. 357. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-024900-2. இணையக் கணினி நூலக மைய எண் 781540844.