வாணியம்பாடி (சட்டமன்றத் தொகுதி)

வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 47. திருப்பத்தூர், அணைக்கட்டு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.தமிழகத்தில் பாலாறு தொடங்கும் இடத்தில் வாணியம்பாடி தொகுதி உள்ளது. தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைநோக்கியுடன் கூடிய காவலூர் விண்வெளி ஆராய்ச்சி மையம், ஆண்டியப்பனூர் அணை, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி, ஜவ்வாதுமலையின் சந்தன மரங்கள் மற்றும் சுவையான பிரியாணிக்கும் வாணியம்பாடி தொகுதி பெயர் பெற்றது. வாணியம்பாடி தொகுதி மக்களின் பிரதான தொழிலாக தோல் பதனிடும் தொழில், தோல் பொருட்கள் தயாரிப்பு, தென்னை, கரும்பு உள்ளிட்ட வேளாண்மை, கோரை பாய் தயாரிப்பு, பீடி சுற்றுதல், ஊதுபத்தி தயாரித்தல் ஆகும்..

வாணியம்பாடி தொகுதியில் இஸ்லாமியர்களும், வன்னியர்களும் ஏறத்தாழ சமநிலையிலும், பட்டியல் இனமக்கள், முதலியார், நாயுடு, யாதவர், கிறிஸ்தவர்கள் மற்றும் இதர சமூகத்தினரும் உள்ளனர்.

இந்த தொகுதியில் வாணியம்பாடி நகராட்சியின் 36 வார்டுகள், ஆலங்காயம், உதயேந்திரம் பேரூராட்சிகள் உள்ளது. இத்தொகுதியில் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பீமகுளம், நாயக்கனூர், நரசிங்கபுரம், நிம்மியம்பட்டு, 102 ரெட்டியூர், வெள்ளக்குட்டை, கொத்தகோட்டை, பெரியகுரும்பதெரு, விஜிலாபுரம், பெத்தவேப்பம்பட்டு, வள்ளிப்பட்டு, கோவிந்தாபுரம், வளையாம்பட்டு, நெக்னாமலை, தேவஸ்தானம், பள்ளிப்பட்டு, ஜாப்ராபாத் ஆகிய 17 ஊராட்சிகள், திருப்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட பூங்குளம், மரிமாணி குப்பம், மிட்டூர் பெருமாபட்டு, பள்ளவள்ளி, குரிசிலாப்பட்டு, இருணாப்பட்டு, ஆண்டியப்பனூர் ஆகிய 8 ஊராட்சிகள், நாட்டறம் பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட நாராயணபுரம், அலசந்தாபுரம், திம்மாம்பேட்டை, புல்லூர், ராமநாயக்கன்பேட்டை, ஆவராங்குப்பம், மல்லகுண்டா, சிக்கனாகுப்பம், அம்பலூர், கொடையாஞ்சி, தும்பேரி, வடக்குபட்டு, தெக்குபட்டு, எக்லாசபுரம், மல்லங்குப்பம், சங்கரபுரம், அழிஞ்சிகுப்பம் ஆகிய 17 ஊராட்சிகள் அடங்கியுள்ளன.

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் செந்தில் குமார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் என்.முகமது நயீம் ஆகியோருக்கிடையே கடும் போட்டி உள்ளது.[1]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]

தும்பேரி, நெக்னாமலை, ஆலங்காயம் (ஆர்.எப்), நிம்மியம்பட்டு, வெள்ளகுடை, கொத்தகொட்டை, வளையாம்பட்டு, வாணியம்பாடி, சிக்கனாங்குப்பம், திம்மாம்பேட்டை, புல்லூர், சீமுகம்பட்டு, அலசந்தாபுரம், வெங்கடராஜசமுத்திரம், நாராயணபுரம், ஜவாதுராமசமுத்திரம், கொள்ளப்பள்ளி, குருவானிகுண்டா, ராமநாயக்கன்பேட்டை, வடக்குப்பட்டு, கனகப்பட்டு, தேவஸ்தானம், அம்பலூர், கோவிந்தபுரம், ஆம்பூர்பேட்டை, வள்ளிப்பட்டு, தெக்குப்பட்டு, மல்லான்குப்பம், மல்லகுண்டா, ரெட்டியூர், நரசிங்கபுரம், மரிமாணிகுப்பம், நாச்சியார்குப்பம், பூங்குளம், நாய்க்கனூர், சத்திரம்,காவலூர், பீமகுளம்,மிட்டூர், ஆண்டியப்பனூர், இருணாப்பட்டு, பெருமாபட்டு மற்றும் குரிசிலாபட்டு கிராமங்கள்.

உதயேந்திரம் (பேரூராட்சி), ஜாபராபாத் (சென்சஸ் டவுன்), வாணியம்பாடி (நகராட்சி) மற்றும் வார்ப்புரு:ஆலங்காயம் (பேரூராட்சி). வேலூரின் முக்கிய சுற்றுலா தலமான காவலூர் இப்பகுதியில் அமைந்துள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]

சென்னை மாநிலம்

[தொகு]
ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1952 A. K.ஹனுமந்தராயகவுண்டர் சுயேச்சை
1957 ஏ. ஏ. ரசீது இந்திய தேசிய காங்கிரசு
1962 M. P. வடிவேல் திராவிட முன்னேற்றக் கழகம்
1967 ராஜமன்னார் இந்திய தேசிய காங்கிரசு

தமிழ்நாடு

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 எம். அப்துல் லத்தீப் சுயேட்சை (இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்) தரவு இல்லை 42 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 எம். அப்துல் லத்தீப் சுயேட்சை (இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்) 26,620 42 ஆர். சம்பங்கி திமுக 17,886 28
1980 என். குலசேகர பாண்டியன் அதிமுக 38,049 52 எம். அப்துல் லத்தீப் சுயேட்சை 34,375 47
1984 எச். அப்துல் மஜீத் இந்திய தேசிய காங்கிரசு 39,141 44 ஏ. பி. அப்துல் மஜித் திமுக 37,856 42
1989 பி. அப்துல் சமது திமுக (இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் லத்தீப் அணி) 39,723 40 என். குலசேகர பாண்டியன் அதிமுக(ஜெ) 22,614 23
1991 இ. சம்பத் இந்திய தேசிய காங்கிரசு 53,354 54 ஏ. அப்துல் ஹமீது திமுக 33,523 34
1996 அப்துல் லத்தீப் திமுக (இந்திய தேசிய லீக்) 74,223 65 கே. குப்புசாமி காங்கிரஸ் 26,970 24
2001 அப்துல் லத்தீப் சுயேட்சை (இந்திய தேசிய லீக்) 54,218 48 ஜே.எம். ஹாரூன் ராஷித் திமுக 42,280 38
2006 அப்துல் பாசித் திமுக (இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்) 69,837 53 கே. முகமது அலி அதிமுக 45,653 35
2011 கோவி. சம்பத் குமார் அதிமுக 80,563 54.65 ஹெச். அப்துல் பாசித் திமுக 62,338 42.29
2016 மரு. நிலோபர் கபில் அதிமுக 69,588 40.73 சையது பாரூக் ஐஎம்எல் 55,062 32.23
2021 கோ. செந்தில் குமார் அதிமுக[2] 88,018 46.33 என். முஹம்மது நயீம் ஐயுஎம்எல் 83,114 43.74

2016 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

[தொகு]
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 2021 சட்டமன்ற பொதுத்தேர்தல்:வாணியம்பாடி தொகுதி கண்ணோட்டம்
  2. வாணியம்பாடி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா

வெளியிணைப்புகள்

[தொகு]