1598
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1598 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1598 MDXCVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1629 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2351 |
அர்மீனிய நாட்காட்டி | 1047 ԹՎ ՌԽԷ |
சீன நாட்காட்டி | 4294-4295 |
எபிரேய நாட்காட்டி | 5357-5358 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 1653-1654 1520-1521 4699-4700 |
இரானிய நாட்காட்டி | 976-977 |
இசுலாமிய நாட்காட்டி | 1006 – 1007 |
சப்பானிய நாட்காட்டி | Keichō 3 (慶長3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1848 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3931 |
ஆண்டு 1598 (MDXCVIII) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு வியாழக்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும். பழைய 10-நாட்கள் பின்தங்கிய யூலியன் நாட்காட்டியில் இது ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 7 – உருசியாவின் பேரரசர் முதலாம் பியோதர் இறந்ததை அடுத்து அவரது மைத்துனர் போரிசு கொடூநொவ் ஆட்சியைக் கைப்பற்றினார்.
- ஏப்ரல் 13 – பிரான்சில் கூகனொட்டுகளுக்கு கத்தோலிக்கர்களுக்கு இணையான உரிமைகள் வழங்கப்பட்டன. பிரான்சின் சமயப் போர் முடிவுக்கு வந்தது.
- மே – டைக்கோ பிராகியின் 1,004 விண்மீன்களின் அட்டவணை வெளியிடப்பட்டது.[1]
- மே 2 – பிரான்சுக்கும் எசுப்பானியாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
- மூன்று டச்சுக் கப்பல்கள் யாக்கோபு வான் நெக் தலைமையில் மொரிசியசு தீவுக்கு சென்றடைந்தன.
- மெய்யியலாளர் தொம்மாசோ கம்பனெல்லா எசுப்பானியரின் ஆட்சிக்கு எதிராக கலபிரியாவில் கொளர்ச்சியை ஆரம்பித்தார். இவர் பின்னர் கைது செய்யப்பட்டு 27 ஆண்டுகளுக்கு சிறை வைக்கப்பட்டார்.
- குற்றவாளிகளை குடியேற்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் சட்டமூலம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]- ஏப்ரல் 17 – ஜியோவானி ரிக்கியொலி, இத்தாலிய வானியலாளர் (இ. 1671)