1601
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1601 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1601 MDCI |
திருவள்ளுவர் ஆண்டு | 1632 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2354 |
அர்மீனிய நாட்காட்டி | 1050 ԹՎ ՌԾ |
சீன நாட்காட்டி | 4297-4298 |
எபிரேய நாட்காட்டி | 5360-5361 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 1656-1657 1523-1524 4702-4703 |
இரானிய நாட்காட்டி | 979-980 |
இசுலாமிய நாட்காட்டி | 1009 – 1010 |
சப்பானிய நாட்காட்டி | Keichō 6 (慶長6年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1851 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3934 |
1601 (MDCI) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய சூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். இவ்வாண்டு 17-ஆம் நூற்றாண்டின் முதலாம் ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 1 - 17-ஆம் நூற்றாண்டின் முதலாம் நாள்.
- பெப்ரவரி 8 - இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் மகாராணியின் நீண்ட கால நம்பிக்கைக்குரியவராக இருந்த எசெக்சின் இரண்டாம் இளவரசர் ராபர்ட் டெவெரோ மகாராணிக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டார். இவரது கிளர்ச்சி விரைவில் அடக்கப்பட்டு அவருக்கு பெப்ரவரி 25 இல் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படது.
- இளவேனிற்காலம் - சேக்சுபியரின் ஆம்லெட் நாடகம் முதற்தடவையாக அரங்கேற்றப்பட்டது.[1][2]
- மலாக்காவில் டச்சுp படையினர் போர்த்துக்கீசியப் படைகளைத் தாக்கினர்.
- மிங் அரசமரபு காலத்தில் சீனாவின் பெய்ஜிங் நகரின் பேரரண் நகருள் முதற்தடவையாக இயேசு சபையின் மத்தேயோ ரீச்சி நுழைந்தார். முதன் முதலாக அங்கு சென்ற ஐரோப்பியரும் இவரே.
- உருசியாவின் சாராட்சியில் பெரும் பஞ்ச நிலைமை (1601-1603) ஏற்பட்டது. இதன் போது 2 மில்லியன் பேர் இறந்தனர்.
- முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் மதுரையின் நாயக்க மன்னராக முடிசூடினார்.
- பத்மநாபபுரம் அரண்மனை கட்டப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]- ஆகத்து 17 - பியரே டி பேர்மட், பிரெஞ்சு கணிதவியலாளர் (இ. 1665)
இறப்புகள்
[தொகு]- அக்டோபர் 24 - டைக்கோ பிராகி, டென்மார்க்கு வானியலாளர் (பி. 1546)
- மகான் சிறீவாதிராஜர், மத்வ குருமார் வரிசையில் இரண்டாவது குரு (பி. 1481)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Palmer, Alan; Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 166–168. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-5616-2.
- ↑ Edwards, Phillip, ed. (1985). Hamlet, Prince of Denmark. New Cambridge Shakespeare. Cambridge University Press. p. 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-29366-9.
Any dating of Hamlet must be tentative.
Scholars date its writing as between 1599 and 1601.