20-ஆம் நூற்றாண்டு
ஆயிரமாண்டுகள்: | 3-ஆம் ஆயிரமாண்டு |
நூற்றாண்டுகள்: | 19-ஆம் நூற்றாண்டு - 20-ஆம் நூற்றாண்டு - 21-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 1900கள் 1910கள் 1920கள் 1930கள் 1940கள் 1950கள் 1960கள் 1970கள் 1980கள் 1990கள் |
20 ஆம் நூற்றாண்டு (20th century) கிரிகோரியன் நாட்காட்டிப்படி ஜனவரி 1, 1901 இல் ஆரம்பித்து டிசம்பர் 31, 2000 இல் முடிவடைந்தது.
முக்கிய நிகழ்வுகள்
[தொகு]போர்களும் அரசியலும்
[தொகு]- மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.
- முதலாம் உலகப் போர் (1914–1918)[1]
- அக்டோபர் புரட்சி
- பெரும் பொருளியல் வீழ்ச்சி Great Depression
- இரண்டாம் உலகப் போர் (1939–1945) [2]
- பல நாடுகளில் உள்நாட்டுப் போர்கள் ஆரம்பித்து மக்கள் தமது பாரம்பரிய வாழ்விடங்களை விட்டு அகதிகளாக இடம்பெயர்ந்தனர்.
ஐக்கிய நாடுகள் சபை
[தொகு]- ஐக்கிய நாடுகள் அவையும் அதன் அங்கங்களாக உணவு, கல்வி, கலாசாரம் தொடர்பான உப அமைப்புகளும் ஏற்படுத்தப் பட்டன.
புதிய நாடுகள்
[தொகு]- ஏகாதிபத்திய அரசுகளிடமிருந்து பல ஆசிய, ஆபிரிக்க நாடுகள் விடுதலை பெற்று தனித்தனி நாடுகளாயின.
தகவல், போக்குவரத்து புரட்சி
[தொகு]- வானொலி, தொலைக்காட்சி, அச்சு ஊடகங்கள் பெருவளர்ச்சி பெற்று சாதாரண மக்கள் தகவல் அறியும் வாய்ப்பு பெருகியது.
- போக்குவரத்து சாதனங்கள் முன்னேற்றமடைந்து சாதாரண மக்களும் தூர இடங்களுக்கு இலகுவில் சென்றுவரும் வசதி கிட்டியது.
- இணையம் ஆரம்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது
- விண்வெளி அறிவியல் வளர்ச்சியடைந்து மனிதன் சந்திரனில் காலடி எடுத்து வைத்தான்.