அயனாவரம்
அயனாவரம் அயன்புரம் | |
---|---|
ஆள்கூறுகள்: 13°05′55″N 80°14′01″E / 13.0986°N 80.2337°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
புறநகர் | சென்னை |
அரசு | |
• நிர்வாகம் | தமிழ்நாடு அரசு |
• ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
• முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
• மாவட்ட ஆட்சியர் | மருத்துவர். ஜெ. விஜய ராணி, இ. ஆ. ப |
ஏற்றம் | 30.3 m (99.4 ft) |
மொழி | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 600023 |
வாகனப் பதிவு | TN-01 |
மக்களவைத் தொகுதி | மத்திய சென்னை |
சட்டமன்றத் தொகுதி | வில்லிவாக்கம் |
இணையதளம் | www |
அயனாவரம் (ஆங்கிலம்: Ayanavaram) அல்லது அயன்புரம் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாகும். சென்னையின் பெரம்பூர் பகுதியில் அமைந்துள்ள 'இரயில் இணைப்புப் பெட்டித் தொழிற்சாலை'யை ஒட்டி இவ்வூர் அமைந்துள்ளது. இது சென்னையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. சென்னையில், முக்கியமான இணைக்கும் சாலைகளில் ஒன்றான சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலை (கொன்னூர் நெடுஞ்சாலை), அயனாவரம் வழியாகச் செல்கிறது.
சொற்பிறப்பு
[தொகு]இந்த நகரம் முதலில் அயன்புரம் என்று அழைக்கப்பட்டது; 'அயன்' என்றால் பிரம்மா என்று பொருள். முருக பகவான் பிரம்மாவிற்கு அறிவுரை கூறி, படைப்பாற்றலை எடுத்துக் கொண்டபோது, பிரம்மா சிவனிடம் பிரார்த்தனை செய்து, படைப்பாற்றல் செயலை மீண்டும் பெற்றார் என்று நம்பப்படுகிறது. பரசுராம ஈசுவரன் கோயிலில், பிரம்மா, சிவனை வணங்கினார் என்று நம்பப்படுகிறது.
அமைவிடம்
[தொகு]சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலும், சென்னை எழும்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 18 கி.மீ. தொலைவிலும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலும், அயனாவரம் அமைந்துள்ளது.
அமைப்பு
[தொகு]அயனாவரத்தைச் சுற்றியுள்ள பகுதிகள்
[தொகு]பெரம்பூர், பெரவள்ளூர், ஐ. சி. எஃப். காலனி, ஜமாலியா, செம்பியம், அகரம், ஜவஹர் நகர், புரசைவாக்கம், ஓட்டேரி, வில்லிவாக்கம், கீழ்ப்பாக்கம் மற்றும் அண்ணா நகர் கிழக்கு ஆகியவை அயனாவரம் பகுதியைச் சுற்றியுள்ள சில முக்கியமான பகுதிகள் ஆகும்.
போக்குவரத்து
[தொகு]சாலைப் போக்குவரத்து
[தொகு]அயனாவரத்தை, சென்னையின் மற்ற பகுதிகளுடன், (சென்னை திருவள்ளூர் நெடுஞ்சாலை) கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் புதிய ஆவடி சாலை இணைக்கின்றன. பேருந்துகளை பராமரிப்பதற்காக ஒரு பணிமனையுடன் இணைக்கப்பட்டுள்ள அயனாவரம் பேருந்து நிலையம், மற்ற பகுதிகளுக்கு செல்ல சேவை செய்கிறது.
தொடருந்து போக்குவரத்து
[தொகு]- பெரம்பூர் தொடருந்து நிலையம், பெரம்பூர் கேரேஜ் வொர்க்ஸ் தொடருந்து நிலையம் ஆகியவை தலா ஒரு கி.மீ. தொலைவிலுள்ளன. பெரம்பூர் லோகோ வொர்க்ஸ் தொடருந்து நிலையம் சுமார் 2 கி. மீ. தொலைவிலுள்ளது. 'மெட்ரோ' தொடருந்து சேவையின் அடுத்த தடம் அயனாவரம் வழியாகச் செல்ல, வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
கோயில்கள்
[தொகு]அயனாவரத்தில் பழனி ஆண்டவர் கோயில் என்ற முருகன் கோயில், தாண்டவ வினாயகர் ஆலயம் என்கிற பிள்ளையார் கோயில், காசி விசுவநாதர் கோயில், பரசுராமலிங்கேசுவரர் கோயில் என்கிற சிவன் கோயில்கள், கரியமாணிக்க பெருமாள் கோயில் என்ற பெருமாள் கோயில் ஆகியவை அமைந்துள்ளன.
அருகிலுள்ளவை
[தொகு]நூர் விடுதி மற்றும் சயானி குடியிருப்புகள் என்பவை உள்ளூரில் பிரபலமானவை ஆகும்.
மருத்துவ வசதிகள்
[தொகு]தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை, மகப்பேறு ஆரம்ப சுகாதார மருத்துவமனை, எஸ். கே. மருத்துவமனை மற்றும் சில 24 மணிநேர மருத்துவமனைகள் முதலியன அயனாவரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களுக்குப் பயனளிக்கின்றன.
கல்வி நிலையங்கள்
[தொகு]ஸ்ரீ அரங்கைய நாயுடு பள்ளி, பெத்தேல் மெட்ரிக் பள்ளி, கன்னட சங்கப் பள்ளி, தனிஷ் மெட்ரிக் பள்ளி, சௌந்தரபாண்டியன் மேல்நிலைப் பள்ளி, தாராப்பூர் மேல்நிலைப் பள்ளி, சாலை கோவிந்தராஜன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, டேவிட்சன் மெட்ரிக் பள்ளி ஆகியவை இங்குள்ள கல்வி நிலையங்களாகும்.
பொழுதுபோக்கு
[தொகு]பூங்காக்கள்
[தொகு]- அருகிலுள்ள பெரம்பூரில், முரசொலி மாறன் மேம்பாலப் பூங்காக்கள் உள்ளன. இப்பூங்காக்களில், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள், நடைப்பயிற்சி தளங்கள், அமரும் இருக்கைகள், மனங்கவர் பூக்கள் நிறைந்த மரங்கள், மிக உயர்ந்த நிலை ஒளி விளக்குகள் என அதிக வசதிகள் உள்ளன.
சிறுவர் உருளைச் சக்கர சறுக்கு விளையாட்டு மைதான அரங்கம்
[தொகு]- சிறுவர், சிறுமியர் இருபாலருக்கான உருளைச் சக்கர சறுக்கு விளையாட்டு மைதான அரங்கம் ஒன்று, முரசொலி மாறன் மேம்பாலப் பூங்கா உள்ளே அமைந்துள்ளது. இங்கு சிறுவர், சிறுமியர் பயிற்சி பெற்று, மாநில அளவில் போட்டிகளில் கலந்து வெற்றி கொள்கின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.