இராமாபாய் நகர் மாவட்டம்

இராமாபாய் நகர் மாவட்டம்
रमाबाई नगर जिला - رم بی نگار ضلع
இராமாபாய் நகர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்
26°20′39″N 79°58′02″E / 26.3443°N 79.96718°E / 26.3443; 79.96718 - 26°18′07″N 79°58′01″E / 26.302°N 79.967°E / 26.302; 79.967
மாநிலம்உத்தரப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்கான்பூர்
தலைமையகம்அக்பர்பூர், இராமாபாய் நகர்
பரப்பு3,021 km2 (1,166 sq mi)
மக்கட்தொகை1,795,092 (2011)
படிப்பறிவு77.52%
வட்டங்கள்1. அக்பர்பூர், 2. தேராப்பூர், 3. ரசூலாபாத், 4. போக்நிபூர் மற்றும் 5. சிகன்தரா
மக்களவைத்தொகுதிகள்அக்பர்பூர்
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை1. ரசூலாபாத், 2. அக்பர்பூர்-ரனியா, 3. சிகன்தரா மற்றும் 4. போக்நிபூர்
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

இராமாபாய் நகர் மாவட்டம் (உருது: رم بی نگار ضلع‎), (இந்தி: रमाबाई नगर जिला), முன்பு கான்பூர் தேகத் மாவட்டம் என அறியப்படும் இம்மாவட்டம் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. அக்பர்பூர் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டம் கான்பூர் பிரிவின் கீழ் அமைந்துள்ளது.

வரலாறு

[தொகு]

கான்பூர் மாவட்டம் ஆனது கான்பூர் நகர் மற்றும் கான்பூர் தேகத் என இரு மாவட்டங்களாக 1977 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. 1979 ஆம் ஆண்டு இவ்விரு மாவட்டங்களும் மீண்டும் ஒன்று சேர்க்கப்பட்டது. மீண்டும் 1981 ஆம் ஆண்டு இரண்டாக பிரிக்கப்பட்டது. 1 சூலை 2010 அன்று உத்தரப்பிரதேச அரசு கான்பூர் தேகத் மாவட்டத்தை இராமாபாய் நகர் மாவட்டம் என பெயர் மாற்ற முடிவு செய்தது.[1]

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இராமாபாய் நகர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 1,795,092.[2] இது தோராயமாக காம்பியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 268வது இடத்தில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 594 inhabitants per square kilometre (1,540/sq mi).[2] மேலும் இராமாபாய் நகர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 14.82%.[2]இராமாபாய் நகர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 862 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் இராமாபாய் நகர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 77.52% .[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ramabai Nagar". District administration. Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2010-08-18.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  3. US Directorate of Intelligence. "Country Comparison:Population". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமாபாய்_நகர்_மாவட்டம்&oldid=3544168" இலிருந்து மீள்விக்கப்பட்டது