சம்பல் மாவட்டம்

சம்பல் மாவட்டம்
சம்பல்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்
மாநிலம்உத்தரப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்மொராதாபாத்
தலைமையகம்சம்பல் நகரம்
பரப்பு2,453.30 km2 (947.22 sq mi)
மக்கட்தொகை2192933 (2011)
வட்டங்கள்3
மக்களவைத்தொகுதிகள்1
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை3
சராசரி ஆண்டு மழைபொழிவு115cm mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

சம்பல் மாவட்டம் (Sambhal district) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் 70 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிடம் சம்பல் நகரம் ஆகும். [1]இது மொராதாபாத் கோட்டத்தில் அமைந்துள்ளது.

இம்மாவட்டம் 23 சூலை 2012-ஆம் ஆண்டில் புதிதாக துவக்கப்பட்ட மூன்று மாவட்டங்களில் ஒன்றாகும். மற்ற இரண்டு புதிய மாவட்டங்கள் பிரபுத்தா நகர் மாவட்டம் மற்றும் பஞ்சசீல நகர் மாவட்டம் ஆகும். [2]

அமைவிடம்

[தொகு]

அம்ரோகா மாவட்டம், மொராதாபாத் மாவட்டம், இராமப்பூர் மாவட்டம், பதாவுன் மாவட்டம், அலிகார் மாவட்டம் மற்றும் புலந்தசகர் மாவட்டங்கள் எல்லைகளாக சூழ்ந்துள்ளது.

அருகில் உள்ள பெருநகரம் புதுதில்லியாகும். சம்பல் நகரம் புதுதில்லியிலிருந்து கிழக்கே 158.6 கி மீ தொலைவில் உள்ளது. அருகில் உள்ள பிற நகரங்கள் காசியாபாத், நொய்டா மற்றும் ஹப்பூர் ஆகும்.[3] சம்பல் நகரம் மாநிலத் தலைநகரம் லக்னோவிலிருந்து வடமேற்கே 355 கி. மீ தொலைவில் உள்ளது.

அரசியல் & மாவட்ட நிர்வாகம்

[தொகு]

இம்மாவட்டம் சம்பல், சந்தௌசி, குன்னௌர் என மூன்று வருவாய் வட்டங்களையும், சம்பல், அஸ்மோலி, குன்னௌர், சந்தௌசி | என 4 சட்டமன்றத் தொகுதிகளும்; சம்பல் மக்களவைத் தொகுதியும் கொண்டுள்ளது.

மக்கள் தொகை

[தொகு]

2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, சம்பல் மாவட்டத்தின் மக்கள்தொகை 21,92,933 ஆகும். அதில் ஆண்கள் 11,61,093 மற்றும் பெண்கள் 10,31,840. இம்மாவட்டத்தில் 1022 கிராமங்கள் உள்ள்து.

மொழிகள்

[தொகு]

உத்தரப் பிரதேச பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bandh in Sambhal over location of new district headquarters". பார்க்கப்பட்ட நாள் 2012-10-27.
  2. "UP gets three new districts: Prabuddhanagar, Panchsheel Nagar, Bhimnagar". இந்தியன் எக்சுபிரசு. 29 September 2011 இம் மூலத்தில் இருந்து 22 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130122152416/http://www.expressindia.com/latest-news/up-gets-three-new-districts-prabuddhanagar-panchsheel-nagar-sambhal/853411/. பார்த்த நாள்: 2 October 2011. 
  3. http://www.distancesfrom.com/distance-from-New-Delhi-to-Sambhal/DistanceHistory/5148.aspx

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்பல்_மாவட்டம்&oldid=3792977" இலிருந்து மீள்விக்கப்பட்டது