பாந்தா மாவட்டம்
பாந்தா மாவட்டம் बांदा जिला | |
---|---|
பாந்தாமாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம் | |
மாநிலம் | உத்தரப் பிரதேசம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | சித்திரக்கூடம் |
தலைமையகம் | பாந்தா, இந்தியா |
பரப்பு | .4413 km2 (0.1704 sq mi) |
மக்கட்தொகை | 1,799,541 (2011) |
மக்களவைத்தொகுதிகள் | பாந்தா |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
பாந்தா மாவட்டம் (இந்தி: बांदा जिला) இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைநகரம் பாந்தா நகரம். இது சித்திரக்கூட பிரிவின் கீழ் புந்தேல்கண்ட் புவியியல் பகுதியில் அமைந்துள்ளது. வரலாற்று புகழ் மிக்க கலிஞ்சர் கோட்டை இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.
பொருளாதாரம்
[தொகு]முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. நெல், கோதுமை, காய்கறிகள் போன்றவை இம்மாவட்டத்தில் அதிகமாக பயிரிடப்படுகின்றன. 2006ல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் பாந்தா மாவட்டத்தை இந்தியாவின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ள 250 மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்தது.[1] இம்மாவட்டம் பின்தங்கியுள்ள பகுதிகளுக்கான நிதி வழங்கும் திட்டம் (BRGF) மூலம் உத்தரப்பிரதேசத்தில் பயன்பெறும் 34 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1]
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி பாந்தா மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 1,799,541.[2] இது தோராயமாக காம்பியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 265வது இடத்தில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 404 inhabitants per square kilometre (1,050/sq mi).[2] மேலும் பாந்தா மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 17.06%.[2] பாந்தா மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 863 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் பாந்தா மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 68.11%..[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on ஏப்ரல் 5, 2012. பார்க்கப்பட்ட நாள் September 27, 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ US Directorate of Intelligence. "Country Comparison:Population". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01.