கோழிக்கோடு நாடு
கோழிக்கோடு சாமூத்திரிகள் കോഴിക്കോട് സാമൂതിരി | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
12-ஆம் நூற்றாண்டு–1806 | |||||||||
நிலை | முடியாட்சி | ||||||||
தலைநகரம் | கோழிக்கோடு | ||||||||
பேசப்படும் மொழிகள் | மலையாளம், சமஸ்கிருதம் | ||||||||
சமயம் | இந்து சமயம் | ||||||||
அரசாங்கம் | நிலப்பிரபுத்துவம், முடியாட்சி | ||||||||
கோழிக்கோட்டின் சாமூத்திரி | |||||||||
வரலாறு | |||||||||
• பிற்கால சேரர்களின் வீழ்ச்சிக்குப் பின் | 12-ஆம் நூற்றாண்டு | ||||||||
• பிரித்தானிய இந்திய அரசால் ஜமீந்தார் நிலை. | 1806 | ||||||||
நாணயம் | கோழிக்கோடு பணம் | ||||||||
|
சாமூத்திரி அல்லது சமோரின் (Samoothiri - Zamorin) (மலையாளம்: സാമൂതിരി), இந்தியாவின் கேரள மாநிலத்தில் மலபார் கடற்கரைப் பகுதிகளை, கோழிக்கோட்டை தலைநகராகக் கொண்டு சாமூத்திரிகள் எனும் ஏராடி குல இந்து சமய மன்னர்கள் கி பி 12-ஆம் நூற்றாண்டு முதல் கி பி 17-ஆம் நூற்றாண்டு முடிய ஆண்டனர். கோழிக்கோடு தென்னிந்தியாவின் முக்கிய வணிகத் தலமாக விளங்கியது.[1]
நறுமணப் பொருட்களைத் தேடி 1498-இல் இந்தியாவின் கோழிக்கோட்டிற்கு வந்த முதல் ஐரோப்பியர், போர்ச்சுக்கல் நாட்டின் வணிகரும், மாலுமியுமான வாஸ்கோ ட காமா ஆவார்.
நாட்டின் பரப்புகள்
[தொகு]தெற்காசிய வரலாற்றுக் காலக்கோடு |
---|
சாமூத்திரியர்கள் ஆண்ட கோழிக்கோடு நாட்டின் பகுதிகளாக குறும்பரநாடு, பையநாடு, ஏறநாடு, பொன்னானி, சேரநாடு, வெங்கிட்டா கோட்டை, மலப்புறம், கப்புல், மண்ணார்க்காடு, கரிம்புழா, நெடுங்காடு, கொல்லங்கோடு, கோட்டுவாயூர் இருந்தன.
துறைமுகங்கள்
[தொகு]புதுப்பட்டினம், கொல்லம், கோழிக்கோடு, பொன்னானி சாமூத்திரிகளின் முக்கிய துறைமுகங்கள் ஆகும்.
வரலாறு
[தொகு]கோழிக்கோடு அரசு கி பி 826-இல் நெடுயிரிப்பு சுவரூபம் எனும் பெயரில் நிறுவப்பட்டது. கோழிக்கோடு நகரம் 1026 நிறுவப்பட்டது. 1766 - 1792-ஆம் ஆண்டுகளுக்கிடையே கோழிக்கோடு அரசு மைசூர் அரசுடன் இணைக்கப்பட்டது. பின்னர் கோழிக்கோடு அரசை பிரித்தானிய இந்திய அரசுடன் இணைக்கப்பட்டது. [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Zamorin". Encyclopædia Britannica. Encyclopædia Britannica Online. Encyclopædia Britannica Inc., 2012. Web. 6 May. 2012 <http://www.britannica.com/EBchecked/topic/655668/Zamorin>
- ↑ Princely states of India
- ^ Schwartz, Stuart.Implicit Understandings, Cambridge University Press, Cambridge, 665pp, 1994, 302. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-45880-3
- Hamilton, Alex. A new Account of the East Indies, Pinkerton's Voyages and Travels, viii. 374
- Hart, Henry H. The Sea Road to the Indies. New York:MacMillan Company, 1950.
- Danvers, Frederick Charles. The Portuguese in India. New York:Octagon Books, 1966.
வெளி இணைப்புகள்
[தொகு]- Zamorin at Columbia University
- History of Calicut at Calicut Press Club பரணிடப்பட்டது 2012-04-26 at the வந்தவழி இயந்திரம்
- Tali Temple, Calicut பரணிடப்பட்டது 2016-05-25 at the வந்தவழி இயந்திரம்