மணிப்பூர் இராச்சியம்
கங்கிலேய்பாக் இராச்சியம் Kangleipak Kingdom 1724 வரை | |||||
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா (1824–1947) இந்தியக் குடியரசு (1949 முதல்) | |||||
| |||||
1907-இல் பெங்கால் கெஜட்டில் குறித்த கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணம், மேற்கு வங்காளம், பிகார், நேபாளம், பூடான், திபெத், மணிப்பூர் இராச்சியம் மற்றும் பர்மாவின் வரைபடம் | |||||
தலைநகரம் | இம்பால் | ||||
வரலாறு | |||||
• | மணிப்பூர் இராச்சியம் நிறுவப்பட்டது. | பொ.ஊ. 33 | |||
• | இந்தியாவுடன் இணைந்த நாள் | 15 அக்டோபர் 1949 | |||
• | இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. | 15 அக்டோபர் 1949 | |||
பரப்பு | |||||
• | 1941 | 22,372 km2 (8,638 sq mi) | |||
Population | |||||
• | 1941 | 5,12,069 | |||
மக்கள்தொகை அடர்த்தி | 22.9 /km2 (59.3 /sq mi) | ||||
"Assam States,", Indian States and Agencies, The Statesman's Year Book 1947, pg 160, Macmillan & Co. |
தெற்காசிய வரலாற்றுக் காலக்கோடு |
---|
மணிப்பூர் இராச்சியம் (Kingdom of Manipur or Kangleipak Kingdom) பண்டைய இந்திய இராச்சியங்களில் பொ.ஊ. 33 முதல் பொ.ஊ. 1949 வரை தொடர்ந்து ஆட்சியில் இருந்த இராச்சியம் ஆகும். மணிப்பூர் இராச்சியத்தின் தலைநகராக இம்பால் நகரம் விளங்கியது. பொ.ஊ. 1824-இல் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் வகுத்த துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொண்ட மணிப்பூர் இராச்சிய மன்னர்கள், ஆண்டுதோறும் கம்பெனியாளர்களுக்கு கப்பம் செலுத்தி, பிரித்தானிய இந்தியாவின் பாதுகாப்பில் இருந்தனர்.[1] இந்திய விடுதலைக்குப் பின்னர் 1949-இல் மணிப்பூர் இராச்சியம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
அமைவிடம்
[தொகு]மணிப்பூர் இராச்சியத்தின் மேற்கில் அசாம் மாகாணம், கிழக்கில் பிரித்தானிய பர்மா, வடக்கில் தற்கால நாகலாந்து, தெற்கில் தற்கால மிஸோரம் எல்லைகளாக இருந்தது.
வரலாறு
[தொகு]இருபதாம் நூற்றாண்டில் இவ்விராச்சியத்தின் பரப்பளவு 22,327 சகிமீ (8,621 சதுர மைல்) மற்றும் 467 கிராமங்களும் கொண்டதாக இருந்தது. 1714 ஆண்டு முதல் மணிப்பூர் இராச்சிய மன்னர்கள் இந்து சமயத்தின்வைணவப் பிரிவை கடைபிடிக்கத் துவங்கினர்.
1754-இல் மணிப்பூர் இராச்சியம் மற்றும் அசாம் பகுதிகளை பர்மா இராச்சியத்தினர் கைப்பற்றினர். மணிப்பூரை மீட்க மணிப்பூர் இராச்சிய மன்னர் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனியிடம் இராணுவ உதவியைக் கோரினார்.[2] 1824 – 1826களில் நடைபெற்ற முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போரின் முடிவில் பர்மா இராச்சியமிடமிருந்து மணிப்பூர் இராச்சியம் மற்றும் அசாம் மாகாணம் மீட்கப்பட்டது. 1824 முதல் மணிப்பூர் இராச்சியம், பிரித்தானிய இந்தியாவிற்கு அடங்கிய சுதேச சமஸ்தானமாக விளங்கியது. 1949-இல் மணிப்பூர் இராச்சியம்இந்தியாவுடன் இணைந்தது. தற்போது இந்த இராச்சியம் இந்தியாவின் மணிப்பூர் மாநிலமாக உள்ளது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Manipur". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 17. (1911). Cambridge University Press.
- ↑ "Imperial Gazetteer2 of India, Volume 17, page 186 – Imperial Gazetteer of India – Digital South Asia Library". பார்க்கப்பட்ட நாள் 1 April 2015.