திசம்பர் 25
<< | திசம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | 31 | ||||
MMXXIV |
திசம்பர் 25 (December 25) கிரிகோரியன் ஆண்டின் 359 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 360 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் ஆறு நாட்கள் உள்ளன
நிகழ்வுகள்
- 274 – சூரியனுக்கான கோவில் உரோமை நகரில் அமைக்கப்பட்டது.
- 336 – உரோமை நகரில் நத்தார் முதன் முதலில் கொண்டாடப்பட்டதாக அறியப்படுகிறது.
- 508 – பிராங்குகளின் மன்னர் முதலாம் குளோவிசு கத்தோலிக்கராகத் திருமுழுக்குப் பெற்றார்.
- 800 – சார்லமேன் புனித உரோமைப் பேரரசனாக முடிசூடினான்.
- 1000 – அங்கேரிப் பேரரசு முதலாம் இசுடீவனின் கீழ் கிறித்தவ நாடானது.
- 1066 – நோர்மண்டி இளவரசர் முதலாம் வில்லியம் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார்.
- 1100 – முதலாம் பால்டுவின் எருசலேமின் முதலாவது மன்னராக பெத்லகேம், பிறப்பிடத் தேவாலயத்தில் முடிசூடினார்.
- 1492 – கொலம்பசின் சாண்டா மரியா கப்பல் எயிட்டி அருகே பவளப் படிப்பாறையில் மோதியது.
- 1559 – நான்காம் பயசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1643 – கிறித்துமசு தீவு கண்டுபிடிக்கப்பட்டது. பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ரோயல் மேரி கப்பலின் தலைவன் வில்லியம் மைநோர்ஸ் என்பவரால் இத்தீவுக்கு கிறித்துமசுத் தீவு எனப் பெயரிடப்பட்டது.
- 1741 – ஆன்டர்சு செல்சியசு தனது செல்சியசு வெப்பமானியைக் கண்டுபிடித்தார்.
- 1758 – ஹேலியின் வால்வெள்ளி ஜொகான் பாலிட்ச் என்னும் செருமனியரால் அவதானிக்கப்பட்டது. இதன் மூலம் எட்மண்டு ஏலியின் எதிர்வுகூறல் நிறுவப்பட்டது.
- 1776 – சியார்ச் வாசிங்டன் அமெரிக்க விடுதலைப் படையுடன் இரவோடிரவாக டெலவேர் ஆற்றைக் கடந்து டிரெண்டனில் பிரித்தானியப் படைகளுடன் போரில் ஈடுபட சென்றார்.
- 1831 – ஜமேக்காவில் அடிமைகள் விடுதலை வேண்டி கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
- 1868 – அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட அனைத்து கூட்டமைப்புப் படைவீரர்களுக்கும் பொது மன்னிப்பை அமெரிக்க அரசுத்தலைவர் ஆன்ட்ரூ ஜோன்சன் அறிவித்தார்.
- 1914 – முதலாம் உலகப் போர்: செருமனிக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் கிறித்துமசு நாள் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.
- 1932 – சீனாவின் கான்சு நகரில் 7.6 நிலநடுக்கம் ஏற்பட்டதில் 275 பேர் இறந்தனர்.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: ஆங்காங் மீதான சப்பானின் முற்றுகை ஆரம்பமாயிற்று.
- 1947 – சீனக் குடியரசின் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது.
- 1962 – சோவியத் ஒன்றியம் கடைசித் தடவையாக நிலத்திற்கு மேலான அணுவாயுத சோதனையை மேற்கொண்டது.
- 1968 – கீழ்வெண்மணிப் படுகொலைகள்: கூலி அதிகம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 44 தலித் மக்கள் தமிழ்நாட்டில் கீழவெண்மணி கிராமத்தில் உயிருடன் தீயிட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
- 1976 – எகிப்திய விமானம் பேங்காக் நகரில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 52 பேரும், தரையில் 19 பேரும் உயிரிழந்தனர்.
- 1977 – இசுரேல் பிரதமர் பெகின் எகிப்திய அதிபர் அன்வர் சதாத்தை சந்தித்தார்.
- 1979 – சோவியத் ஒன்றியம் ஆப்கானித்தானில் தனது படைகளை பெருமளவில் இறக்கியது.
- 1989 – உருமேனியாவின் முன்னாள் கம்யூனிசத் தலைவர் நிக்கொலாய் செய்செஸ்குவுக்கும் அவரது மனைவிக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1990 – உலகளாவிய வலைத் திட்டம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
- 1991 – சோவியத் தலைவர் பதவியில் இருந்து மிக்கைல் கொர்பச்சோவ் விலகினார். அடுத்த நாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.
- 1991 – உக்ரைன் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகியது.
- 2003 – பெனின் விமான நிலையத்தில் போயிங் 727 விமானம் வீழ்ந்ததில் 151 பேர் உயிரிழந்தனர்.
- 2003 – மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலத்தில் இருந்து டிசம்பர் 19 இல் ஏவப்பட்ட பீகில் 2 விண்கலம் செவ்வாய்க் கோளில் தரையிறங்குவதற்கு சற்று முன்னர் காணாமல் போனது.
- 2004 – காசினி விண்கப்பலில் இருந்து சனிக் கோளின் டைட்டன் துணைக்கோளில் இறக்குவதற்காக இயூஜென்சு என்ற சேய்க்கலம் விடுவிக்கப்பட்டது. இது 2005 சனவரி 14-இல் டைட்டானில் இறங்கியது.
- 2005 – இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கம் அதிகாலை 12:15 மணியளவில் மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த போது துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த ஒருவனால் சுட்டு கொல்லப்பட்டார்.
- 2012 – கசக்ஸ்தானில் அண்டோனொவ் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 27 பேர் உயிரிழந்தனர்.
- 2016 – உருசிய பாதுகாப்பு அமைச்சின் விமானம் ஒன்று கருங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 92 பேரும் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
- 1642 (யூநா) – ஐசாக் நியூட்டன், ஆங்கிலேய இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1726/1727)
- 1724 – ஜான் மிச்சல், ஆங்கிலேய மெய்யியலாளர், கருந்துளையை எதிர்வு கூறியவர் (இ. 1793)
- 1861 – மதன் மோகன் மாளவியா, இந்திய அரசியல்வாதி (இ. 1946)
- 1876 – அடால்ஃப் வின்டாஸ், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (இ. 1959)
- 1876 – முகம்மது அலி ஜின்னா, பாக்கித்தானின் 1வது ஆளுநர் (இ. 1948)
- 1899 – ஹம்பிறி போகார்ட், அமெரிக்க நடிகர் (இ. 1957)
- 1905 – தி. க. இராமானுசக் கவிராயர், வைணவப் புலவர், தமிழறிஞர் (இ. 1985)
- 1906 – ஏர்ணஸ்ட் ருஸ்கா, நோபல் பரிசு எப்ற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1988)
- 1918 – அன்வர் சாதாத், எகிப்தின் 3வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 1981)
- 1924 – அடல் பிகாரி வாச்பாய், 10வது இந்தியப் பிரதமர் (இ. 2018)
- 1927 – ராம் நாராயண், இந்துத்தானி இசைக்கலைஞர்
- 1942 – என்ரீக்கே மொறேந்தே, எசுப்பானியப் பாடகர் (இ. 2010)
- 1949 – நவாஸ் ஷெரீப், பாக்கித்தானின் 12வது பிரதமர்
- 1956 – பிரபு, தமிழ்த் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர்
- 1960 – நோயெல் இம்மானுவேல், இலங்கைத் தமிழ் கத்தோலிக்க மதகுரு, ஆயர்
- 1971 – ஜஸ்டின் துரூடோ, கனடாவின் 23வது பிரதமர்
- 1974 – நக்மா, இந்திய நடிகை
இறப்புகள்
- 1796 – வேலு நாச்சியார், ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி (பி. 1730)
- 1921 – விளாதிமிர் கொரலென்கோ, உருசிய ஊடகவியலாளர், எழுத்தாளர், செய்ற்பாட்டாளர் (பி. 1853)
- 1931 – பா. வே. மாணிக்க நாயக்கர், அறிவியல் தமிழ் வளர்த்த தமிழிஞர் (பி. 1871)
- 1961 – ஒட்டோ லோவி, நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க மருத்துவர் (பி. 1873)
- 1972 – ராஜாஜி, சென்னை மாகாண முதல்வர், அரசியல்வாதி, எழுத்தாளர் (பி. 1978)
- 1977 – சார்லி சாப்ளின், ஆங்கிலேய நடிகர் (பி. 1889)
- 1994 – ஜெயில் சிங், 7வது இந்தியக் குடியரசுத் தலைவர் (பி. 1916)
- 2004 – நிரூபன் சக்கரபோர்த்தி, இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1905)
- 2005 – யோசப் பரராஜசிங்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1934)
- 2006 – ஜேம்ஸ் ப்ரௌன், அமெரிக்கப் பாடகர் (பி. 1933)
- 2006 – தமிழோவியன், இலங்கை மலையக இலக்கியவாதி, கவிஞர்
- 2016 – வேரா உரூபின், அமெரிக்க வானியலாளர் (பி. 1928)
- 2018 – நரேந்திரநாத் சக்ரவர்த்தி, வங்காள மொழிக் கவிஞர் (பி. 1924)
- 2018 – நான்சி கிரேசு உரோமன், அமெரிக்க வானியலாளர் (பி. 1925)
- 2019 – சிறீகாந்தலட்சுமி அருளானந்தம், ஈழத்து நூலகர், எழுத்தாளர் (பி. 1961)
சிறப்பு நாள்
- கிறித்துமசு நாள்
- குழந்தைகள் நாள் (கமரூன், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, சாட், எக்குவடோரியல் கினி, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, காபோன், கொங்கோ குடியரசு)
- நல்லாட்சி நாள் (இந்தியா)