1793
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1793 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1793 MDCCXCIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1824 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2546 |
அர்மீனிய நாட்காட்டி | 1242 ԹՎ ՌՄԽԲ |
சீன நாட்காட்டி | 4489-4490 |
எபிரேய நாட்காட்டி | 5552-5553 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 1848-1849 1715-1716 4894-4895 |
இரானிய நாட்காட்டி | 1171-1172 |
இசுலாமிய நாட்காட்டி | 1207 – 1208 |
சப்பானிய நாட்காட்டி | Kansei 5 (寛政5年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2043 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4126 |
1793 (MDCCXCIII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது சனிக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 2 - ரஷ்யாவும் புருசியாவும் போலந்தைப் பங்கிட்டன.
- ஜனவரி 21 - பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் அரசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக கழுத்து வெட்டப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டான்.
- பெப்ரவரி 1 - பிரித்தானியா, மற்றும் நெதர்லாந்து மீது பிரான்ஸ் போரை அறிவித்தது.
- பெப்ரவரி 25 - ஜோர்ஜ் வாஷிங்டன் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார்.
- மார்ச் 5 - பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவினால் தோற்கடிக்கப்பட்டன.
- மார்ச் 7 - ஸ்பெயின் மீது பிரான்ஸ் போரை அறிவித்தது.
- ஏப்ரல் 1 - ஜப்பானில் உன்சென் எரிமலை வெடித்தை அடுத்து நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 53,000 பேர் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 16 - பதினாறாம் லூயி மன்னனின் மனைவி மறீ அண்டனெட் மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டாள்.
- நவம்பர் 9 - மிஷனறி வில்லியம் கேரி குடும்பத்துடன் கல்கத்தா வந்து சேர்ந்தார்.
- டிசம்பர் 9 - நியூயோர்க் நகரின் முதலாவது தினசரிப் பத்திரிகை "தி அமெரிக்கன் மினேர்வா" வெளியிடப்பட்டது.
- டிசம்பர் 26 - கைஸ்பேர்க் என்னும் இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களைத் தோற்கடித்தனர்.
நாள் அறியப்படாதவை
[தொகு]- ரோமன் கத்தோலிக்கம் பிரான்சில் தடை செய்யப்பட்டது.
- புனித ரோம் பேரரசு பிரான்சின் மீது போரை அறிவித்தது.
- யாழ்ப்பாணத்தில் பருத்தி முதற்தடவையாக விளைவிக்கப்பட்டது.
தொடரும் நிகழ்வுகள்
[தொகு]பிறப்புக்கள்
[தொகு]இறப்புக்கள்
[தொகு]1793 நாற்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Louis XVI". Encyclopædia Britannica. (August 8, 2023).
- ↑ Tucker, Abigail (October 2012). "The Great New England Vampire Panic". Smithsonian. https://www.smithsonianmag.com/history/the-great-new-england-vampire-panic-36482878/. பார்த்த நாள்: 2020-09-01.
- ↑ Everett, Jason M., ed. (2006). "1793". The People's Chronology. Thomson Gale.