வாரன் ஹேஸ்டிங்ஸ்
வாரன் ஹேஸ்டிங்ஸ் | |
---|---|
தலைமை ஆளுனர் | |
பதவியில் 20 அக்டோபர் 1774 – 8 பிப்ரவரி 1785[1] | |
ஆட்சியாளர் | மூன்றாம் ஜார்ஜ் அரசர் |
பின்னவர் | சர் ஜான் மெக்பெர்சன் தற்காலிக தலைமை ஆளுனர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 200px 6 திசம்பர் 1732 சர்ச்சில், ஆக்ஸ்போர்டுஷிரெ |
இறப்பு | 22 ஆகத்து 1818 டய்லெஸ்போர்டு, குளௌசெஸ்டர்சயர் | (அகவை 85)
இளைப்பாறுமிடம் | 200px |
தேசியம் | பிரித்தானியர் |
பெற்றோர் |
|
முன்னாள் கல்லூரி | வெஸ்ட்மினிஸ்டர் பள்ளி |
வாரன் ஹேஸ்டிங்ஸ் (Warren Hastings) (6 டிசம்பர் 1732 – 22 ஆகஸ்டு 1818), சிறந்த ஆங்கிலேயே அரசியல் அறிஞர். பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின், வங்காளத்தின் முதல் தலைமை ஆளுனராக 1773 முதல் 1785 முடிய பணியாற்றியவர். இவர் காலத்தில்தான் இந்தியாவில் கம்பெனி ஆட்சி காலூன்றியது. பின்னர் இவர் மீது 1787ஆம் ஆண்டில் ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தால் விசாரணை நடத்தப்பட்டு, 1814ஆம் ஆண்டில் குற்ற வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். இங்கிலாந்தில், இராபர்ட் கிளைவுக்கு அடுத்தபடியாக அதிகம் பேசப்பட்டவர்.
கிழக்கிந்திய கம்பெனியில் ஆகஸ்டு 1750ஆம் ஆண்டில், கொல்கத்தாவில் எழுத்தராக பணியேற்றார்.[2] கடுமையாக உழைத்து, உருது, பாரசீகம் போன்ற மொழிகளை கற்றவர்.[3] 1752இல் பதவி உயர்வு பெற்று, ஆங்கிலேயேர்களின் முக்கிய வணிகத் தலமான காசிம் பஜார் பகுதியில் பணியில் இருக்கையில் கிழக்கிந்திய அரசியலை நன்கு அறிந்தார்.
3 சூன் 1756இல் வங்காள நவாப் சிராஜ் உத் தௌலாவின் படையால், கிழக்கிந்திய கம்பெனி படைகள் சிறை பிடிக்கப்பட்டு முர்சிதாபாத்தில் அடைக்கப்பட்டனர். 1757ஆம் ஆண்டில் இராபர்ட் கிளைவ், சென்னையிலிருந்து புறப்பட்டு, வங்காள நவாப் சிராஜ் உத் தௌலாவை பிளாசிப் போரில் வென்று, மீர் ஜாபரை அரியனையில் ஏற்றி, வாரங்ஹேஸ்டிங்ஸை மீட்டார்.
முதல் ஆங்கிலேயே மைசூரின் முடிவின் போது, சென்னையை கைப்பற்ற வந்த ஐதர் அலியை எதிர் கொள்ள, வாரன் ஹேஸ்டிங்ஸ் சென்னை வந்தடைந்தார். சென்னை, கொல்கத்தா, பம்பாய் போன்றா முதன்மை மாகாணங்களை தனித்தனி தலைமை ஆளுனர்களால் ஆளப்படும் முறையை நீக்கி, அனைத்து இந்தியப் பகுதிகளுக்கும், கிழக்கிந்திய கம்பெனியின் ஒரே தலைமை ஆளுனர் ஆட்சிக்கு வித்திட்டார். மேலும் வாரன் ஹேஸ்டிங்ஸ், கிழக்கிந்திய கம்பெனியின், இந்தியாவின் தலைமை ஆளுனராக, 1773ஆம் ஆண்டில் கல்கத்தாவில் பதவி ஏற்றுக் கொண்டார்.
கொள்ளை கூட்டத்தவர்களை கட்டுப்படுத்தினார். வாரன் ஹேஸ்டிங்ஸ், வங்காளத்தின் ஆளுனராக இருந்த காலத்தில் 1770ஆம் ஆண்டு வங்காளப் பஞ்சத்தை எதிர் கொண்டார். பஞ்சத்தில் பத்து மில்லியன் மக்கள் பசிக் கொடுமையாலும், நோயாலும் கொல்லப்பட்டனர்.
பிட்டின் இந்தியா சட்டப்படி மும்பை மற்றும் சென்னை மாகாணங்களின் ஆளுனர்கள் தன்னிச்சையாகச் செயல்படும் உரிமையை இழந்தனர். வங்காள மாகாண ஆளுனராக வாரன்ஹேஸ்டிங்ஸ் 1774ஆம் ஆண்டு முதல் தலைமை ஆளுனராக பதவி உயர்த்தப்பட்டார். மற்ற மாகாண ஆளுனர்கள், வங்காள மாகாண ஆளுனரின் மேற்பார்வையில் செயல்படத் தொடங்கினர். கல்கத்தா, கம்பெனி அட்சியின் தலைநகராக மாறியது.
பத்தாண்டு பணி நிறைவு செய்த வாரன்ஹேஸ்டிங்ஸ், ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக, பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுனர் பணியை துறந்தார்.
எதிர் கொண்ட சமர்களும் பஞ்சங்களும்
[தொகு]- கர்நாடகப் போர்கள்
- வங்காளப் பஞ்சம், 1770
- ரோகில்லாப் போர் (1773–1774)
- முதல் ஆங்கிலேயே-மராத்தியப் போர் (1777–1783)
- 1783-1784ஆம் ஆண்டு சாலிசா பஞ்சம்
- இரண்டாம் ஆங்கிலேயே-மைசூர் போர் (1780–1784)
நான்காம் ஆங்கிலேய மைசூர் போர் (1799)
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]ஆதார நூற்பட்டியல்
[தொகு]- Davies, Alfred Mervyn. Strange destiny: a biography of Warren Hastings (1935)
- Ghosh, Suresh Chandra. The Social Condition of the British Community in Bengal: 1757-1800 (Brill, 1970)
- Feiling, Keith, Warren Hastings (1954)
- Lawson, Philip. The East India Company: A History (Routledge, 2014)
- Marshall, P.J., The impeachment of Warren Hastings (1965)
- Marshall, P. J. "Hastings, Warren (1732–1818)", Oxford Dictionary of National Biography (Oxford University Press, 2004); online edn, Oct 2008 accessed 11 Nov 2014
- Moon, Penderel. Warren Hastings and British India (Macmillan, 1949)
- Turnbull, Patrick. Warren Hastings. (New English Library, 1975)
உசாத்துணை
[தொகு]- Forrest, G.W., ed. Selections from The State Papers of the Governors-General of India — Warren Hastings (2 vols), Blackwell's, Oxford (1910)