காஞ்சிபுரம் கங்கணேசுவரர் கோயில்
காஞ்சிபுரம் கங்கணேசம். | |
---|---|
பெயர் | |
பெயர்: | காஞ்சிபுரம் கங்கணேசம். |
அமைவிடம் | |
ஊர்: | காஞ்சிபுரம் |
மாவட்டம்: | காஞ்சிபுரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கங்கணேஸ்வரர். |
தீர்த்தம்: | கங்கணதீர்த்தம் |
காஞ்சிபுரம் கங்கணேசுவரர் கோயில் (கங்கணேசம்) எனப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக்கோயில்களில் ஒன்றாகும். இச்சந்நிதியின் மூலவர் அறை சுமார் 15-அடி பாதாளத்தில் உள்ளதால், மக்கள் இச்சிவலிங்கத்தை பாதாளீஸ்வரர் என்று வழங்குகின்றனர். மேலும், இவ்விறைவரை அம்பிகை வழிபட்டதாக அறியப்படும் இக்கோயில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]
தல பெருமை
[தொகு]பெரிய காஞ்சிபுரம் சின்னகம்மாளத் தெருவில் கிழக்கு பார்த்த சன்னதியாக உள்ள இது, பாதாளேஸ்வரர் கோவில் என வழங்கப்படுகிறது. இது காமாட்சி அம்மையார் ஏகாம்பரநாதரை வழிபடுவதற்கு கங்கணம் கட்டிக்கொண்ட தலமாகும். கங்கணதீர்த்தம் (குளம்) எதிரில் மறைக்கப்பட்டிருக்கிறது.[2]
தல வரலாறு
[தொகு]அம்பிகை சிவபெருமானை வழிபட வேண்டி, காஞ்சியை அடைந்து, சிவலிங்கப் பிரதிட்டை செய்து, அவ்விறைவனை வழிபட்டு, பொன்னாலான காப்புநாணை (கங்கணம்) அணிந்து கொண்டார். அதுவே கங்கணேசம் எனப் பெயர் பெற்றதாக வரலாறு.[3]
தல பதிகம்
[தொகு]- பாடல்: (கங்கண தீர்த்தம் கங்கணேச்சரம்)
- அலங்கொளிக் கரத்துச் செம்பொற் காப்புநாண் அணிந்து மூவா
- இலிங்கம்ஆண் டிருவிப் பூசை இயற்றினாள் அனைய தீர்த்தம்
- நலங்கெழு காப்புத் தீர்த்த மெனப்பெயர் நவில்வர் சேர்ந்தார்
- குலங்களோ டுய்யச் செய்யும் இலிங்கமுங் கொள்ளும் அப்பேர்.
- பொழிப்புரைகள்:
- பேரொளி விளங்கும் திருக்கை யிறையில் செம்பொற் காப்புக் கயிற்றை
- அணிந்து மாறுபடாத சிவலிங்கத்தை அங்குத் தாபித்துப் பூசனையைப்
- புரிந்தனர். அத்தீர்த்தத்தினை நன்மை கெழுமிய காப்புத் தீர்த்தமெனக் கூறுவர்.
- சார்ந்து தரிசித்தோர் மரபோடு முய்யச் செய்யும்
- அங்கு வழிபாடு செய்த சிவலிங்கமும் கங்கணேச்சரம் எனப்பெயர் பெறும்.[4]
அமைவிடம்
[தொகு]இந்தியாவின் தென்கடை மாநிலம் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான பெரிய காஞ்சிபுரம் எனப்படும் சிவகாஞ்சியின் சின்னகம்மாளத் தெருவில் கங்கணேசம் அமைந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கில் ½ மைல் தூரமுள்ள காஞ்சி இறவாதீசுவரர் கோயிலுக்கு செல்லும் சாலையில் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.[5]
போக்குவரத்து
[தொகு]- வான்வழி: வானூர்தி சேவை இல்லை; உலங்கு வானூர்தி மூலம் காஞ்சிபுரம் வந்தடைய, காஞ்சியிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஏனாத்தூர் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அகத்திலுள்ள உலங்கூர்தி இறங்குதளத்தில் இறங்கி சீருந்து மூலம் இக்கோயிலை அடையலாம்.
- இரும்புத் தடம்: தொடருந்து மூலாமாக; தலைநகர் சென்னையிலிருந்து செங்கல்பட்டு மார்க்கமாகவும், திருப்பதியிலிருந்து அரக்கோணம் மார்க்கமாகவும், காஞ்சி தொடருந்து நிலையத்தை அடைந்து அங்கிருந்து 1 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இக்கோயிலை, சீருந்து மூலமாகவும், தானியுந்து மூலமாகவும் சென்றடையலாம்.
- சாலை வழி: பேருந்திலோ, அல்லது சீருந்துலோ, காஞ்சி வந்தடைய நான்கு திசையில் சாலை வழியுள்ளன; வடகிழக்கில், சென்னையிலிருந்து திருப்பெரும்புதூர் வழியாகவும் (75 கிலோமீட்டர்); தென்கிழக்கில், செங்கல்பட்டிலிருந்து வாலாசாபாத் வழியாகவும் (40 கிலோமீட்டர்); வடமேற்கில், விழுப்புரத்திலிருந்து வந்தவாசி வழியாகவும் (80 கிலோமீட்டர்); தென்மேற்கில், பெங்களுரிலிருந்து வேலூர் வழியாகவும் (275 கிலோமீட்டர்) இக்கோயில் நகரை வந்தடையலாம்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ projectmadurai.org | காஞ்சிப் புராணம் | 61. தழுவக்குைழந்த படலம் (2023- 2449) | 2154 கங்கணதீர்த்தம் -கங்கேணச்சரம்
- ↑ "palsuvai.net | காஞ்சிபுர சிவலிங்கங்கள்". Archived from the original on 2016-06-29. பார்க்கப்பட்ட நாள் 2016-04-12.
- ↑ "shaivam.org | கங்கணேசம் பாதாளீஸ்வரர்". Archived from the original on 2015-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-04-12.
- ↑ tamilvu.org | காஞ்சிப் புராணம் | தழுவக் குழைந்த படலம் | பாடல்: 132 | பக்கம்: 626 - 627
- ↑ dinaithal.com | கங்கணேசம் பாதாளீஸ்வரர் கோயில்
- ↑ tripadvisor.in 15 temples in Kanchipuram