காஞ்சிபுரம் பரிதீசுவரர் கோயில்

காஞ்சிபுரம் பருத்தீசம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் பருத்தீசம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பரிதீஸ்வரர்.

காஞ்சிபுரம் பரிதீசுவரர் கோயில் (பருத்தீசம்) எனப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக்கோயில்களில் ஒன்றாகும். மேலும், சூரியன் (ஞாயிறு) பரிகார தலமாக உள்ள இக்கோயில் பற்றிய குறிப்புகள் காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]

இறைவர், வழிபட்டோர்

[தொகு]

தல வரலாறு

[தொகு]

சூரியன் வழிபட்ட சிவலிங்க மூர்த்தமாகும். மேலும், இப்பகுதி பரிதிக்குளம் (பரிதி என்றால் ஞாயிறு, (சூரியன்) என்பதாகும்.) என்பது மருவி தற்போது பருத்திக்குளம் எனப்படுவதால் இவ்விரைவர்க்கு பருத்தீசுவரர் எனும் பெயருமுண்டு.[2]

தல பதிகம்

[தொகு]
  • பாடல்: (பரிதிக் குளம்)
மருத்தேத்துஞ் செவ்வந்தீச் சரமால் வரைப்பின் வடகுடக்காந்
திருத்தேத்துக் கதிர்ப்பரிதிச் செல்வன் பரிதிக் குளந்தொட்டுக்
கருத்தேய்த்து வீடளிக்கும் அந்நீ ராட்டிக் கருதார்ஊர்
உருத்தேத்துஞ் சுரர்க்கருளும் ஒளியைத் தொழுதுவரம்பெற்றான்.
  • பொழிப்புரை:
வாயு வழிபாடு செய்த செவ்வந்தீச்சரமாம் பெருமை பொருந்திய
சூழலின் வடமேற்காகும் அழகிய இடத்தில் கதிர்களையுடைய சூரியன் தன்
பெயரால் சூரிய தீர்த்தம் வகுத்துப் பிறவி நோயைப் போக்கி வீடு பேற்றினை
வழங்கும் அந்நீரால் திருமுழுக்காட்டிப் பகைவருடைய முப்புரங்களை
வெகுண்டழித்துப் போற்றுந் தேவர்க்கருள் செய்யும் பரஞ்சுடரைத் தொழுது
வேண்டும் வரங்களைப் பெற்றனன்.[3]

அமைவிடம்

[தொகு]

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் தென்மேற்குப் பகுதியில் அரக்கோணம் செல்லும் சாலையின் அருகே பஞ்சுப்பேட்டை பெரியதெருவில் உள்ள தமிழக அரசின் விதைப் பண்ணையின் உட்புற வளாகத்திலுள்ள செவ்வந்தீசர் கோயிலை கடந்து சென்றால் இடதுபுறம் பிரியும் சாலைக்கருகில் பருத்திக்குளத்தின் கரையில் இச்சிவலிங்கம் உள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் தென்மேற்கு திசையில், சுமார் 1 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலின் தென்மேற்கில் சற்று தூரம் சென்றால் இக்கோயிலை அடையலாம்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. projectmadurai.org | காஞ்சிப் புராணம் | 47. நவக்கிரேகசப் படலம் (1645 - 1650) | 1648 பரிதிக்குளம்.
  2. naavaapalanigotrust.com | KANCHI-SIVAN/பஞ்சுபேட்டை#சிவன்/பரிதீஸ்வரர்[தொடர்பிழந்த இணைப்பு]
  3. tamilvu.org | காஞ்சிப் புராணம் | நவக்கிரகேசப் படலம் | பாடல் 4 | பக்கம்: 487
  4. "shaivam.org | பரிதீசர் - பரிதிக்குளம் - பருத்திக்குளம்". Archived from the original on 2015-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-03-28.

புற இணைப்புகள்

[தொகு]