சனவரி 13
<< | சனவரி 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMXXIV |
சனவரி 13 (January 13) கிரிகோரியன் ஆண்டின் 13 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 352 (நெட்டாண்டுகளில் 353) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1658 – இங்கிலாந்தின் இராணுவ மற்றும் அரசியல் தலைவருமான ஒலிவர் குரொம்வெல்லுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய எட்வர்டு செக்சுபி என்பவன் லண்டன் கோபுர சிறையில் இறந்தான்.
- 1797 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரெஞ்சுக் கடற்படைக் கப்பல் ஒன்றுக்கும் இரண்டு பிரித்தானியக் கடற்படைக் கப்பல்களுக்குமிடையே பிரித்தானிக் கரையில் இடம்பெற்ற மோதலில் பிரெஞ்சுக் கப்பல் மூழ்கியது. 900 பேர் வரையில் உயிரிழந்தனர்.
- 1815 – கண்டிப் போர்கள்: பிரித்தானியர் கண்டியினுள் நுழைந்தனர்.[1]
- 1830 – லூசியானாவில் நியூ ஓர்லீன்ஸ் நகரில் பெரும் தீ பரவியது.
- 1840 – அமெரிக்காவின் லெக்சிங்டன் என்ற நீராவிக் கப்பல் லோங் தீவுக்கருகில் மூழ்கியதில் 139 பேர் உயிரிழந்தனர்.
- 1842 – முதலாம் ஆங்கிலேய-ஆப்கானியப் போர்: காபூலில் இருந்து வெளியேறிய பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவன இராணுவத்தைச் சேர்ந்த 4,500 பேரில் வில்லியம் பிரைடன் என்ற மருத்துவர் மட்டுமே உயிருடன் ஜலாலாபாத் நகரை சென்றடைந்தார்.
- 1847 – கலிபோர்னியாவில் மெக்சிக்கோ-அமெரிக்கப் போர் காகுவெங்கா என்ற இடத்தில் எட்டப்பட்ட உடன்பாட்டின் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
- 1849 – வான்கூவர் தீவில் குடியேற்றம் ஆரம்பமானது.
- 1888 – தேசிய புவியியல் கழகம் வாசிங்டனில் நிறுவப்பட்டது.
- 1893 – அமெரிக்க கடற்படை, அவாய், ஒனலுலுவில் தரையிறங்கியது.
- 1908 – பென்சில்வேனியாவில் ரோட்ஸ் ஒப்பேரா மாளிகையில் தீப்பிடித்ததில் 171 பேர் உயிரிழந்தனர்.
- 1910 – முதலாவது நேரலை வானொலி ஒலிபரப்பு நியூயார்க் நகரில் இடம்பெற்றது.
- 1915 – இத்தாலியின் அவசானோ பிரதேசத்தில் இடம்பெற்ற 6.7 அளவு நிலநடுக்கத்தில் 29,800 பேர் உயிரிழந்தனர்.
- 1930 – மிக்கி மவுஸ் சித்திரங்கள் துணுக்குகளாக முதன் முதலாக வெளிவரத்தொடங்கியது.
- 1938 – இங்கிலாந்து திருச்சபை சார்ல்ஸ் டார்வினின் கூர்ப்புக் கொள்கையை ஏற்றுக் கொண்டது.
- 1939 – ஆத்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் 20,000 சதுர கிமீ நிலம் காட்டுத்தீயினால் அழிந்தது. 71 பேர் உயிரிழந்தனர்.
- 1942 – ஹென்றி போர்ட் பிளாஸ்டிக்கினால் ஆன தானுந்துக்கான காப்புரிமம் பெற்றார்.
- 1950 – பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று எண்ணெய்த் தாங்கிக் கப்பல் ஒன்றுடன் மோதியதில் 64 பேர் உயிரிழந்தனர்.
- 1963 – டோகோவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் சில்வானுசு ஒலிம்பியோ கொல்லப்பட்டார்.
- 1964 – கல்கத்தாவில் இந்து-முஸ்லிம் கலவரம் மூண்டதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
- 1972 – கானாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் பிரதமரும், அரசுத்தலைவரும் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்கள்.
- 1982 – வாசிங்டனில் விமானம் ஒன்று பாலம் ஒன்றில் வீழ்ந்து நொருங்கியதில் 78 பேர் உயிரிழந்தனர்.
- 1985 – எதியோப்பியாவில் பயணிகள் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 428 பேர் உயிரிழந்தனர்.
- 1986 – தெற்கு யேமன், ஏடன் நகரில் ஒரு மாதமாக இடம்பெற்ற வன்முறைகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
- 1991 – சோவியத் படைவீரர்கள் லித்துவேனியாவில் சோவியத் ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட பொதுமக்களைத் தாக்கி 14 பேரைக் கொன்றனர்.
- 1992 – இரண்டாம் உலகப் போரின் போது கொரியப் பெண்களை பாலியல் அடிமைகளாக கட்டாயமாக சிறைப்படுத்தி வைத்திருந்தமைக்காக சப்பான் மன்னிப்புக் கோரியது.
- 1993 – வேதி ஆயுத உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
- 1998 – தற்பாலினர் வெறுப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து அல்பிரெடோ ஓர்மண்டோ என்பவர் புனித பேதுரு சதுக்கத்தில் தீக்குளித்து இறந்தார்.
- 2001 – எல் சல்வடோரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 800 பேர் உயிரிழந்தனர்.
- 2006 – சீனாவின் தென் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் 13,000 வீடுகள் இடிந்து தரை மாட்டமாயின.
- 2012 – இத்தாலியப் பயணிகள் கப்பல் கொஸ்டா கொன்கோர்டியா கடலில் மூழ்கியதில் 32 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
- 1858 – ஆஸ்கர் மின்கோவஸ்கி, லித்துவேனிய-செருமானிய உயிரியலாளர் (இ. 1931)
- 1864 – வில்லெம் வீன், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1928)
- 1879 – மெல்வின் ஜோன்ஸ், அரிமா சங்கத்தைத் தோற்றுவித்த அமெரிக்கர் (இ. 1961)
- 1887 – ஜார்ஜ் குர்ச்சீயெவ், உருசிய-பிரான்சிய மெய்யியலாளர் (இ. 1949)
- 1889 – வசீலி பெசென்கோவ், உருசிய வானியற்பியலாளர் (இ. 1972)
- 1906 – சூ யூக்வாங், சீன மொழியியலாளர் (இ. 2017)
- 1911 – எம். ஜி. சக்கரபாணி, இந்திய நாடக, திரைப்பட நடிகர் (இ. 1986)
- 1911 – ஆனந்த சமரக்கோன், சிங்கள இசைக்கலைஞர் (இ. 1962)
- 1913 – செ. அச்சுத மேனன், இந்திய இடதுசாரி அரசியல்வாதி, கேரள முதலமைச்சர் (இ. 1991)
- 1922 – ஏரம்பு சுப்பையா, ஈழத்து பரத நாட்டியக் கலைஞர் (இ. 1976)
- 1938 – சிவக்குமார் சர்மா, இந்திய இசையமைப்பாளர் (இ. 2022)
- 1946 – ஆர். பாலச்சந்திரன், தமிழகக் கல்வியாளர், கவிஞர் (இ. 2009)
- 1949 – ராகேஷ் சர்மா, இந்திய விண்வெளி வீரர்
- 1960 – எரிக் பெட்சிக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர்
- 1977 – ஆர்லாந்தோ புளூம், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்
- 1978 – நேட் சில்வர், அமெரிக்க ஊடகவியலாளர், புள்ளிவிபரவியலாளர்
- 1983 – இம்ரான் கான், இந்திய நடிகர்
- 1990 – லியம் எம்சுவர்த், ஆத்திரேலிய நடிகர்
இறப்புகள்
- 1717 – மரியா சிபில்லா மெரியன், செருமானியப் பூச்சியியலாளர் (பி. 1647)
- 1906 – அலெக்சாண்டர் பப்போவ், உருசிய இயற்பியலாளர் (பி. 1859)
- 1941 – ஜேம்ஸ் ஜோய்ஸ், அயர்லாந்து எழுத்தாளர் (பி. 1882)
- 1977 – என்றி லங்லொவைசு, துருக்கிய-பிரான்சிய வரலாற்றாளர் (பி. 1914)
- 2013 – கனகசபை சிவகுருநாதன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1920)
- 2014 – அஞ்சலிதேவி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1927)
- 2015 – மார்வின் டி. கிரார்டோ, அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1930)
- 2016 – ஜி. ஏ. வடிவேலு, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (பி. 1925)
- 2016 – ஜெ. எப். ஆர். ஜேக்கப், இந்தியத் தரைப்படைத் தளபதி (பி. 1923)
- 2023 – ரெஜினால்ட் குரே, இலங்கை அரசியல்வாதி, வடமாகாணத்தின் 5-வது ஆளுநர் (பி. 1947)
- 2024 – பிரபா ஆத்ரே, இந்துத்தானி இசைப் பாடகர் (பி. 1932)
சிறப்பு நாள்
- சனநாயக நாள் (கேப் வர்டி)
- உலோகிரி (பஞ்சாப், அரியானா, இமாச்சலப் பிரதேசம்)
- விடுதலை நாள் (டோகோ)
மேற்கோள்கள்
- ↑ "Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.