பிரசியோடைமியம்(III) ஆக்சைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர் பிரசியோடைமியம்(III) ஆக்சைடு | |
வேறு பெயர்கள் பிரசியோடைமியம் ஆக்சைடு, பிரசியோடைமியம் செசுகியுவாக்சைடு | |
இனங்காட்டிகள் | |
12036-32-7 | |
EC number | 234-845-3 |
பப்கெம் | 165911 |
பண்புகள் | |
Pr2O3 | |
வாய்ப்பாட்டு எடை | 329.813 கி/மோல் |
தோற்றம் | வெண்மையான அறுங்கோணப் படிகங்கள் |
அடர்த்தி | 6.9 கி/செ.மீ3 |
உருகுநிலை | 2,183 °C (3,961 °F; 2,456 K) |
கொதிநிலை | 3,760 °C (6,800 °F; 4,030 K)[1] |
+8994.0·10−6 செ.மீ3/மோல் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | அறுங்கோணம், hP5 |
புறவெளித் தொகுதி | P-3m1, No. 164 |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH | -1809.6 கியூ•மோல்−1 |
வெப்பக் கொண்மை, C | 117.4 யூ•மோல்−1•K−1[1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பிராசியோடிமியம்(III) குளோரைடு பிராசியோடிமியம்(III) சல்பைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | நியோடிமியம்(III) ஆக்சைடு புரோமித்தியம்(III) ஆக்சைடு சீரியம்(III) ஆக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பிரசியோடைமியம்(III) ஆக்சைடு (Praseodymium(III) oxide) என்பது Pr2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். பிரசியோடைமியம், ஆக்சிசன் இரண்டும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மத்தை பிரசியோடைமியம் ஆக்சைடு அல்லது பிரசியோடைமியா என்ற பெயர்களாலும் அழைக்கிறார்கள். வெண்மை நிறத்தில் அறுகோணப் படிகங்களாக இது உருவாகிறது. மேலும், இது மாங்கனீசு(III) ஆக்சைடு அல்லது பிக்சுபைட்டு கட்டமைப்பில் படிகமாகிறது.
பயன்கள்
[தொகு]பிரசியோடைமியம்(III) ஆக்சைடுடன் சிலிக்கன் தனிமத்தைச் சேர்த்து மின்கடத்தாப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். பிரசியோடைமியம் கலந்த டைடிமியம் கண்ணாடிகள் பற்றவைப்பு தொழிலில் பயன்படும் கண்ணாடிகளில் பயன்படுத்தப்படுகின்றன. இக்கண்ணாடிகள் மஞ்சள் நிறமாக மாறி அகச்சிவப்பு கதிரியக்கத்தைத் தடுக்கின்றன. வண்ணக்கண்ணாடிகள், மஞ்சள் நிற பீங்கான்கள் தயாரிப்பில் இதைப் போன்றவையும் பயன்படுத்துகிறார்கள். [2]. பிரசியோடைமியம்((III) (IV)), ஆக்சைடு, Pr6O11 போன்றவையும் வண்ணப்பீங்கான் தொழிலில் பயன்படுத்தப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 478, 523, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
- ↑ Krebs, Robert E. (2006), The History and Use of our Earth's Chemical Elements, Greenwood Publishing Group, p. 283, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-33438-2, பார்க்கப்பட்ட நாள் 2009-03-18