அலுமினியம்

அலுமினியம்
13Al
B

Al

Ga
மக்னீசியம்அலுமினியம்சிலிக்கான்
தோற்றம்
வெள்ளி போன்ற சாம்பல் உலோகம்


அலுமினியத்தின் நிறமாலைக்கோடுகள்
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண் அலுமினியம், Al, 13
உச்சரிப்பு UK: /ˌælj[invalid input: 'ʉ']ˈmɪniəm/ (கேட்க)
AL-ew-MIN-ee-əm; or

US: /əˈlm[invalid input: 'ɨ']nəm/ (கேட்க)
ə-LOO-mi-nəm

தனிம வகை குறை மாழை
நெடுங்குழு, கிடை வரிசை, குழு 133, p
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
26.9815386(13)
இலத்திரன் அமைப்பு [Ne] 3s2 3p1
2, 8, 3
Electron shells of aluminium (2, 8, 3)
Electron shells of aluminium (2, 8, 3)
வரலாறு
கண்டுபிடிப்பு H. Ørsted[1] (1825)
முதற்தடவையாகத்
தனிமைப்படுத்தியவர்
F. Wöhler

[2] (1827)

பெயரிட்டவர் H. Davy (1808)
Invention of Hall–Héroult process C. Hall & P. Héroult (1886)
இயற்பியற் பண்புகள்
நிலை திண்மம்
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) 2.70 g·cm−3
திரவத்தின் அடர்த்தி உ.நி.யில் 2.375 g·cm−3
உருகுநிலை 933.47 K, 660.32 °C, 1220.58 °F
கொதிநிலை 2792 K, 2519 °C, 4566 °F
உருகலின் வெப்ப ஆற்றல் 10.71 கி.யூல்·மோல்−1
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் 294.0 கி.யூல்·மோல்−1
வெப்பக் கொண்மை 24.200 யூல்.மோல்−1·K−1
ஆவி அழுத்தம்
P (Pa) 1 10 100 1 k 10 k 100 k
at T (K) 1482 1632 1817 2054 2364 2790
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள் 3, 2[3], 1[4]
(ஈரியல்பு ஆக்சைட்டு)
மின்னெதிர்த்தன்மை 1.61 (பாலிங் அளவையில்)
மின்மமாக்கும் ஆற்றல்
(மேலும்)
1வது: 577.5 kJ·mol−1
2வது: 1816.7 kJ·mol−1
3வது: 2744.8 kJ·mol−1
அணு ஆரம் 143 பிமீ
பங்கீட்டு ஆரை 121±4 pm
வான்டர் வாலின் ஆரை 184 பிமீ
பிற பண்புகள்
படிக அமைப்பு face-centered cubic
அலுமினியம் has a face-centered cubic crystal structure
காந்த சீரமைவு paramagnetic[5]
மின்கடத்துதிறன் (20 °C) 28.2 nΩ·m
வெப்ப கடத்துத் திறன் 237 W·m−1·K−1
வெப்ப விரிவு (25 °C) 23.1 µm·m−1·K−1
ஒலியின் வேகம் (மெல்லிய கம்பி) (அ.வெ.) (rolled) 5,000 மீ.செ−1
யங் தகைமை 70 GPa
நழுவு தகைமை 26 GPa
பரும தகைமை 76 GPa
பாய்சான் விகிதம் 0.35
மோவின் கெட்டிமை
(Mohs hardness)
2.75
விக்கெர் கெட்டிமை 167 MPa
பிரிநெல் கெட்டிமை 245 MPa
CAS எண் 7429-90-5
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: அலுமினியம் இன் ஓரிடத்தான்
iso NA அரைவாழ்வு DM DE (MeV) DP
26Al trace 7.17×105 yr β+ 1.17 26Mg
ε - 26Mg
γ 1.8086 -
27Al 100% Al ஆனது 14 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
·சா

அலுமினியம் (ஆங்கிலம்: அலுமினியம்; வட அமெரிக்க ஆங்கிலம்: Aluminum) ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இதனுடைய அணு எண் 13 ஆகும். இது பூமியில் அதிகம் கிடைக்கும் உலோகங்களுள் ஒன்று. இது மின்சாரத்தையும் வெப்பத்தையும் கடத்த வல்லது. பாக்ஸைட் என்ற தாதுவில் இருந்து அலுமினியம் தயாரிக்கப்படுகிறது. இதன் வேதிக்குறியீடு Al ஆகும்.

அலுமினியத்தை ஏழைகளின் உலோகம் என்றும் களிமண் தந்த வெள்ளி என்றும் வர்ணிப்பார்கள். களிமண், செங்கல் போன்றவைகள் எல்லாம் அலுமினியம் சிலிகேட் என கிட்டத்தட்ட 270 அலுமினியச் சேர்மங்கள் உள்ளன.[6] அலுமினியக் கலவைப் பொருள் என்று தெரியாமலேயே இப்பொருட்களை எல்லாம் மக்கள் நெடுங் காலமாய் பயன்படுத்தி வந்துள்ளனர். அலுமினியத்தின் முக்கியமான கனிமம் பாக்சைட் ஆகும். இதில் இரும்பு ஆக்சைடும், டைட்டானியமும், சிலிகானும் வேற்றுப் பொருளாகக் கலந்துள்ளன. பாக்சைட்டைத் தூய்மைப் படுத்தி Al2O3 என்று குறிப்பிடப்படுகின்ற அலுமினாவைப் பெற்று மின்னாற் பகுப்பு மூலம் அலுமினியத்தைப் பெறலாம். பூமியில் தனிமங்களின் செழிப்பு எனும் வரிசையில் அலுமினியம் மூன்றாவது இடத்தில் 8.1 என்ற மதிப்புடன் உள்ளது. அலுமினியத்தின் பிற கனிமங்கள் கிப்சைட், டையாஸ்போர், ஃபெல்ட்ஸ்பார் (felspar) கிரையோசைட் போன்றவைகளாகும். நவரத்தினங்களில் மரகதம், கோமேதகம், நீலக்கல், பசுமை கலந்த நீலக் கல் (Turquoise) போன்றவற்றில் அலுமினியம் ஒரு சேர்மானப் பொருளாக சேர்ந்திருக்கிறது. தங்கம், வெள்ளி போல தனித் தனிமமாக இயற்கையில் காணப்படவில்லை. பொட்டாஷ் ஆலம் என்பது பொட்டாசியம் அலுமினியம் சல்பேட்டாகும்.

கண்டுபிடிப்பு

[தொகு]

அறிவியல் வளர்ச்சி அடைந்திராத பண்டைய காலத்திலேயே அக்கால மக்கள் அலுமினியத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால் அலுமினியம் ஓர் உலோகம் என்பதையும் அதன் பலன்கள், தன்மை பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை.[7] இதற்கு எடுத்துக்காட்டாக கி. மு 5300 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்து மத்திய கிழக்கில் வாழ்ந்த மனிதர்கள் பயன் படுத்திய உபகரணங்கள் மிகவும் உறுதி வாய்ந்தவையாக இருந்தன. இதற்குக் காரணம் அவர்கள் பயன்படுத்திய பொருட்களில் அலுமினியச் சேர்வை கலந்திருந்தமையாகும்.[7] அலுமினியத்தை பழங்காலத்தில் கிரேக்கர்களும்,ரோமானியர்களும் வயிற்றுப் போக்கை நிறுத்த உதவும் மருந்தாகவும், சாயப் பட்டறைகளில் அரிகாரமாகவும் பயன்படுத்தி வந்தனர்.[8] இதில் உள்ள உப்பு மூலத்தை அலுமினி என அழைத்தனர். 1787 ல் லவாய்சியர் இதை அதுநாள் வரை அறியப்படாத ஓர் உலோகத்தின் ஆக்சைடு என்று கூறினார். 1827 ஆம் ஆண்டில் ஜெர்மனி நாட்டு வேதியியலாரான பெடரிக் வோலர் (Friedrick Wohler) இதிலிருந்து தூய அலுமினியத்தைப் பிரித்தெடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றார்.[9] இதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பாக ஆர்ஸ்டடு (Oersted) என்பார் அலுமினியத்தைப் பிரித்தெடுத்திருந்தாலும்[2] அது மிகவும் தூய்மை யற்றதாக இருந்தது. அதன் பின் பியரி பெர்தியர் என்பவர் பாக்சைட் தாதுவிலிருந்து அலுமினியத்தைப் பிரித்தெடுத்தார்.[10] முதலில் ஹம்பிரி டேவி என்பார் இதற்கு அலுமினம் (Aluminuam ) என்றே பெயரிட்டார்.[11] இது பின்னர் அலுமினியம் என்று மாற்றம் செய்யப்பட்டது."[12][13]

பிரித்தெடுத்தல்

[தொகு]
பாக்சைட்டு, அலுமினியத்தின் முக்கியமான தாது. இரும்பின் கனிமங்கள் இத்தாதுவுடன் கலந்து இருப்பதால் செம்பழுப்பு நிறத்துடன் காணப்படுகிறது.

அலுமினியம் களிமண்ணிலிருந்தாலும் பொருளாதாரச் சிக்கன வலிமுறையினால் அதைப் பிரித்தெடுக்க முடியாது. எனவே அலுமினியம் செறிவுற்றுள்ள அதன் கனிமங்களிலிருந்தே அலுமினியத்தைப் பெற வேண்டியிருக்கிறது. அதன் பின்பு அலுமினியத்தைப் பிரித்தெடுக்க ஹால்- ஹெரௌல்ட் முறை, ஹோலர் முறை, பேயர் முறை ஆகியவை கண்டறியப்பட்டன. தற்காலத்தில் அலுமினியத்தைப் பிரித்தெடுக்க பேயர் வழிமுறை பரவலாகப் பயன்படுகிறது. பாக்சைட்டிலிருந்து அலுமினியத்தின் மூலமான அலுமினாவைப் பெறலாம். பின்னர் மின்னாற் பகுப்பு மூலம் அலுமினியத்தைப் பிரித்தெடுக்கலாம்.[14][15]

பண்புகள்

[தொகு]

அலுமினியம் ஒரு வெண்மையான உலோகம். இதன் அடர்த்தி 2698 கிகி/கமீ. உருகு நிலை 933 K கொதி நிலை 2740 K, அணு எண் 13, அணு நிறை 26.98. வெள்ளியைப் போன்று உறுதியான அலுமினியத்தை அடித்து தகடாகவும், மெல்லிய கம்பியாக நீட்டவும் முடியும். அலுமினியம் நல்ல கடத்தியாக விளங்குவதால் வெப்பத்தையும், மின்சாரத்தையும் எளிதாகக் கடத்துகிறது. தங்கம், வெள்ளி செம்புக்கு அடுத்த படியாகச் சிறந்து விளங்குவது அலுமினியம். இதற்குக் காரணம் இதிலுள்ள கட்டற்ற எலக்ட்ரான்களே ஆகும். அலுமினியம், அதே அளவு எடை கொண்ட செம்பை விட இரண்டு மடங்கு கூடுதலாகக் கடத்தும் திறனைப் பெற்றிருக்கிறது. இவற்றுள் அலுமினியமே 904 ஜூல்/கிகி /கெ என்ற அளவில் மிக அதிகமான சுய வெப்பத்தைப் பெற்றுள்ளது. சுயவெப்பம் ஒரு பொருளின் வெப்ப ஏற்புத் திறனை மதிப்பிடுகின்றது. ஒரு கிகி நிறையுள்ள பொருளின் வெப்ப நிலையை 1 டிகிரி C உயர்த்தத் தேவையான வெப்ப ஆற்றலே அப்பொருளின் சுய வெப்பம் என்பதால் உயரளவு சுயவெப்பம் கொண்ட அலுமினியம் குறைந்த வெப்ப நிலை மாற்றத்தோடு உயரளவு வெப்பத்தைச் சேமித்து வைத்துக் கொள்கிறது.[16] அலுமினியத்தின் வெப்ப ஏற்புத் திறன் செம்பை விட 2.35 மடங்கும், வெள்ளியை விட 3.86 மடங்கும், தங்கத்தை விட 6.85 மடங்கும் அதிகமானது.

வறண்ட மற்றும் ஈரமான காற்று வெளியில் அலுமினியம் நிலையானது. எனினும் அதன் பொலிவு, ஒரு மெல்லிய ஆக்சைடு படலத்தைத் தன் புறப்பரப்பின் மீது ஏற்படுத்திக் கொள்வதால் மங்கிப் போகிறது. இது கவசமாகச் செயல்பட்டு காற்று வெளி மற்றும் நீர்மங்களில் உள்ள வீரிய ஆக்சிஜனிலிருந்து பாதுகாப்பளிக்கிறது. அலுமினியப் பொடியைச் சூடு படுத்தி போதிய அளவு வெப்ப நிலையை உயர்த்தினால், அது ஆக்சிஜனோடு இணைந்து பிரகாசமான வெண்ணிற ஒளியை உமிழ்ந்து எரிகின்றது. அப்போது அதிக அளவு வெப்பம் வெளிப்படுகிறது. அலுமினியம், நைட்ரஜன் மற்றும் கந்தகத்துடன் நேரடியாக இணைகிறது. அலுமினியம் ஆக்சிஜன் மீது நாட்டம் கொண்டிருப்பதால் இது ஒரு வலிமையான ஆக்சிஜநீக்கி ஊக்கியாகச் (reducing agent) செயல்பட வல்லது.

பயன்கள்

[தொகு]

மின்சாதனப் பொருட்கள்

[தொகு]

நற்கடத்தியாக விளங்குவதால் அலுமினியம் வெப்பம் உணர் கருவிகளுக்குத் தேவையான வெப்பக் கடத்தியாகவும், மின்சாரத்தை எடுத்துச் செல்ல மின்கம்பியாகவும் பயப்படுகிறது மின்சாரத்தை நெடுந்தொலைவு எடுத்துச் செல்லும் கம்பியாக அலுமினியத்தைப் பயன்படுத்தும் போது தடித்த கம்பிகளாக்கி மின்தடையைப் போதிய அளவு தாழ்த்திக் கொள்ள மின் இழப்பு பெருமளவு குறைக்கப் படுகிறது. பிற மின்கம்பிகளை விட எடையும் குறைவு.

சமையல் கலன்கள் மற்றும் பிற கருவிகள்

[தொகு]

அலுமினியத்தின் வெப்பங் கடத்தும் திறன் அதை சமையல் கலன்களாகப் பயன்படுத்த ஏற்றதாக இருக்கிறது. கிடைக்கும் வெப்பத்தை சுற்றுப்புறத்தில் இழந்துவிடாமல் உட்புறமாகக் கடத்தி சமைக்க வேண்டிய பொருளை விரைவில் சமைத்து விடுவதற்கு இது அனுகூலமாக இருக்கிறது. எனினும் சாதாரண உப்பால் அரிக்கப்படுகிறது.

வெப்பங் கடத்தும் திறனும், வெப்ப ஏற்புத் திறனும் அதிகமாக இருப்பதால் அலுமினியம் சூரிய ஆற்றல் சேகரிப்பான்களுக்கும், கருவிகளுக்கும் உகந்ததாக விளங்குகிறது. தூய அலுமினியம் புற ஊதாக் கதிர்களுக்கு ஒளி மின் எலெக்ட்ரான்களை உமிழ்கிறது. இதனால் அலுமினியம் புற ஊதாக் கதிர்களை ஆராயும் ஆய்கருவிகளில் பயன்தருகிறது.

காலநிலை மாற்றங்களைத் தாக்குப் பிடிப்பதால் கூரை வேயப் பயன்படும் குழவுத் தகடுகள் செய்ய முடிகிறது. அலுமினியப் பொடியை எண்ணெயோடு கலந்து, நீராவிக் குழாய், எண்ணெய் மற்றும் பெட்ரோல் கிடங்கு, இயந்திரங்களின் வெப்ப ஆற்றி (radiator) போன்றவைகளில் மேற்பூச்சிடுகிறார்கள் அலுமினியப் பூச்சு இரும்பு துருப் பிடிக்காமல் பாதுகாக்கிறது.

உலோகவியல்

[தொகு]

உலோகவியல் துறையில் அலுமினியம் ஆக்சிஜன் நீக்கியாகப் பயன்படுத்தப்பட்டு குரோமியம், மாங்கனீஸ் போன்ற உலோகங்கள் தனித்துப் பிரிக்கப்படுகின்றன. உருகிய எக்கில் அலுமினியம் வளிமங்களுடன் சேர்வதால் உட்புழை ஏதுமின்றி எஃகை வார்க்க முடிகிறது. அலுமினியம் மிகவும் இலேசான உலோகம். அதனால் அது வானவூர்திகளை வடிவமைக்க இணக்கமாய் இருக்கிறது.

தேவையான கட்டுறுதியை அலுமினியக் கலப்பு உலோகங்கள் மூலம் பெறுகின்றார்கள் .இவற்றுள் முக்கியமானது டூராலுமின்(Duralumin), நிக்கலாய் (Nickaloy) மற்றும் சிலுமின் (Silumin)ஆகும். இந்தோலியம் என்ற அலுமினியக் கலப்பு உலோகம் 'பிரஷர் குக்கர்‘ போன்ற சமையல் கலன்கள் செய்யப் பயன்படுகிறது. இக்கலப்பு உலோகங்கள் நீர் மூழ்கிக் கப்பல், செயற்கைக் கோள்களின் உடல் பாகங்கள், ஏவூர்தி மற்றும் ஏவுகணைகளின் பாகங்கள் உணர் கொம்பின் (antena) சட்டங்கள், அலைச் செலுத்திகள் (wave guides) மின் தேக்கிகள் போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுகின்றன.

கட்டடப் பொறியியல்

[தொகு]

கட்டடப் பொறியியலில் நிலைச் சட்டங்கள், சன்னல், படச்சட்டங்கள், இடைத் தட்டிகள், கைப்பிடிகள் போன்றவற்றில் அலுமினியம் இன்றைக்குப் பயன்படுகிறது. நேர் முனைப் பூச்சேமம்(anodising) மூலம் அலுமினியத்தின் மீது ஆக்சைடு மென்படலத்தை ஏற்படுத்தி புறப்பரப்பை மெருகூட்டுவதுடன் அரிமானத்திலிருந்தும் பாதுகாக்கின்றார்கள். இதனால் ஒரு திண்மப் பரப்பை 90 சதவீதம் எதிரொளிக்கக் கூடியதாக மாற்ற முடியும். இன்றைக்கு வானளாவிய கட்டடங்களின் முகப்பை இத்தகைய எதிரொளிப்புத் தட்டிகளினால் அலங்கரிக்கின்றார்கள்.

செடி வளர்ச்சி

[தொகு]

அலுமினியம் அமில பூமியில் செடிகளின் வளர்ச்சியினை குறைக்கிறது.[17][18][19][20]

பிற பயன்கள்

[தொகு]

பல்வேறு சிறப்புப் பயன்களுக்கென பல்வேறு அலுமினியக் கலப்பு உலோகங்களை உற்பத்தி செய்துள்ளனர். மக்னீலியம்(Magnelium)என்ற கலப்பு உலோகம் பற்றினைப்புக்குப் பயன்தருகிறது. அலுமினியப் பொடியையும் பெரிக் ஆக்சைடையும் கலந்த கலவையை தெர்மிட்(Thermit )என்பர். இது எரியும் போது வெப்ப நிலை 3000 டிகிரி C வரை உயர்வதால், இரும்பு மிக எளிதாக உருகிவிடுகிறது. இதனால் உடைந்த பாகங்களையும், இரயில் தண்டவாளங்களையும் பற்றிணைக்க முடிகிறது. கலகக்காரர்கள் இதை ஏறிகுண்டாகப் பயன்படுத்துவர். ஏனெனில் இதனால் தோன்றும் தீயை எளிதில் கட்டுப் படுத்தமுடியாது.

அலுமினிய மென்னிழையாலான 0.009 மில்லிமீட்டர் தடிப்புள்ள அஞ்சல் வில்லையை முதன் முதலாக ஹங்கேரி வெளியிட்டது. அதன் பிறகு பல நாடுகள் அலுமினிய அஞ்சல் வில்லைகளை வெளியிட்டன மெல்லிய அலுமினியப் பூச்சிட்ட இழைகளாலான அலுமினியத் துணியை நெய்துள்ளார்கள். இது கோடையில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்தும் குளிர் காலத்தில் குளிர்ச்சியிலிருந்தும் பாதுகாப்பளிக்கிறது.

பலானியம்

[தொகு]

அலுமினியத்தின் மற்றொரு பயன்பாடு பலானியம் (Planium) என்ற வர்த்தகப் பொருளாகும். இது அலுமினியத்தால் மேற் பூச்சிடப்பட்ட நெகிழியாகும். நெகிழியை விட 10 மடங்கு அழுத்தத்தைத் தாக்குப் பிடிக்கிறது. ஆனால் அதைப் போல நெருப்பினால் பாதிக்கப்படுவதில்லை. தானியங்கு ஊர்திகள், குளிர் சாதனப் பெட்டி இவற்றில் உட்புறம் மற்றும் மேற்புறத் தளங்கள், சாலைகள் மற்றும் விளையாட்டு மைதானங்களுக்குத் தேவையான தற்காலியத் தடுப்புச் சுவர்கள், கை அலம்பும் தொட்டிகள் தயாரிப்பதற்கு பலானியம் பயன்படுகிறது

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bentor, Y. (12 February 2009). "Periodic Table: Aluminum". ChemicalElements.com. பார்க்கப்பட்ட நாள் 2012-03-06.
  2. 2.0 2.1 Wöhler, F. (1827). "Ueber das Aluminium". Annalen der Physik und Chemie. 2nd series 11: 146–161. http://babel.hathitrust.org/cgi/pt?id=uc1.b4433551;view=1up;seq=162. 
  3. அலுமினியம்(II) ஆக்சைடு
  4. Aluminium iodide
  5. Lide, D. R. (2000). "Magnetic susceptibility of the elements and inorganic compounds". [[CRC Handbook of Chemistry and Physics]] (PDF) (81st ed.). CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0849304814. {{cite book}}: URL–wikilink conflict (help)
  6. Shakhashiri, B. Z. (17 மார்ச்சு 2008). "Chemical of the Week: Aluminum" (PDF). SciFun.org. விஸ்கொன்சின் பல்கலைக்கழகம். Archived from the original (PDF) on 2012-05-09. பார்க்கப்பட்ட நாள் 2012-03-04. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  7. 7.0 7.1 விஜய நியூஸ் பெபேர்ஸ்(மாசி 2010). "மானிட வாழ்வில் மிக நெருக்கமுள்ள அலுமினியம்.". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 27 திசம்பர் 2013.
  8. "அலுமினியம் in history". International அலுமினியம் Institute. பார்க்கப்பட்ட நாள் 2012-03-06.
  9. Bentor, Y. (12 பிப்ரவரி 2009). "தனிம அட்டவணை: Aluminum". ChemicalElements.com. பார்க்கப்பட்ட நாள் 2012-03-06. {{cite web}}: Check date values in: |date= (help)
  10. "Scientists born on ஜூலை 3rd: Pierre Berthier". Today in Science History. பார்க்கப்பட்ட நாள் 2012-03-06.
  11. Davy, Humphry (1812). Elements of Chemical Philosophy. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-217-88947-6. பார்க்கப்பட்ட நாள் 2009-12-10.
  12. "Elements of Chemical Philosophy By Sir Humphry Davy". Quarterly Review (சான் முர்ரே) VIII: 72. 1812. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-217-88947-6. http://books.google.com/?id=uGykjvn032IC&pg=PA72. பார்த்த நாள்: 2009-12-10. 
  13. Quinion, Michael (திசம்பர் 16, 2000). "ALUMINIUM VERSUS ALUMINUM: Why two spellings?". World Wide Words., "In the USA, the position was more complicated. Noah Webster's Dictionary of 1828 has only aluminum, though the standard spelling among US chemists throughout most of the 19th century was aluminium; it was the preferred version in The Century Dictionary of 1889 and is the only spelling given in the Webster Unabridged Dictionary of 1913."
  14. Frank, W. B. (2009). "Aluminum". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Wiley-VCH. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a01_459.pub2.
  15. டாட்டன், ஜி. இ.; மக்கென்சிMackenzie, டி. எஸ். (2003). Handbook of Aluminum. மார்சல் டெக்கர்]]. p. 40. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8247-4843-2.
  16. Cochran, J. F.; Mapother, D. E. (1958). "Superconducting Transition in Aluminum". Physical Review 111 (1): 132–142. doi:10.1103/PhysRev.111.132. Bibcode: 1958PhRv..111..132C. 
  17. Belmonte Pereira, Luciane; Aimed Tabaldi, Luciane; Fabbrin Gonçalves, Jamile; Jucoski, Gladis Oliveira; Pauletto, Mareni Maria; Nardin Weis, Simone; Texeira Nicoloso, Fernando; Brother, Denise et al. (2006). "Effect of aluminum on δ-aminolevulinic acid dehydratase (ALA-D) and the development of cucumber (Cucumis sativus)". Environmental and experimental botany 57 (1–2): 106–115. doi:10.1016/j.envexpbot.2005.05.004. 
  18. Andersson, Maud (1988). "Toxicity and tolerance of aluminium in vascular plants". Water, Air, & Soil Pollution 39 (3–4): 439–462. doi:10.1007/BF00279487. 
  19. Horst, Walter J. (1995). "The role of the apoplast in aluminium toxicity and resistance of higher plants: A review". Zeitschrift für Pflanzenernährung und Bodenkunde 158 (5): 419–428. doi:10.1002/jpln.19951580503. 
  20. Ma, Jian Feng; Ryan, PR; Delhaize, E (2001). "Aluminium tolerance in plants and the complexing role of organic acids". Trends in Plant Science 6 (6): 273–278. doi:10.1016/S1360-1385(01)01961-6. பப்மெட்:11378470. 

புற இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அலுமினியம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலுமினியம்&oldid=4044286" இலிருந்து மீள்விக்கப்பட்டது