பேரியம்
பேரியம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
56Ba | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தோற்றம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வெள்ளி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பொதுப் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பெயர், குறியீடு, எண் | பேரியம், Ba, 56 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உச்சரிப்பு | /ˈbɛəriəm/ BAIR-ee-əm | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிம வகை | காரக்கனிம மாழைகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நெடுங்குழு, கிடை வரிசை, குழு | 2, 6, s | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நியம அணு நிறை (அணுத்திணிவு) | 137.327 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இலத்திரன் அமைப்பு | [Xe] 6s2 2, 8, 18, 18, 8, 2 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கண்டுபிடிப்பு | கார்ல் வில்ஹெல்ம் சீல் (1772) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முதற்தடவையாகத் தனிமைப்படுத்தியவர் | ஹம்பிரி டேவி (1808) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இயற்பியற் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நிலை | திண்மம் (இயற்பியல்) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) | 3.51 g·cm−3 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
திரவத்தின் அடர்த்தி உ.நி.யில் | 3.338 g·cm−3 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உருகுநிலை | 1000 K, 727 °C, 1341 °F | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கொதிநிலை | 2118 K, 1845 °C, 3353 °F | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உருகலின் வெப்ப ஆற்றல் | 7.12 கி.யூல்·மோல்−1 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் | 140.3 கி.யூல்·மோல்−1 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வெப்பக் கொண்மை | 28.07 யூல்.மோல்−1·K−1 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆவி அழுத்தம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அணுப் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒக்சியேற்ற நிலைகள் | +2 (கார ஆக்சைடு) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மின்னெதிர்த்தன்மை | 0.89 (பாலிங் அளவையில்) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல் | 1வது: 502.9 kJ·mol−1 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2வது: 965.2 kJ·mol−1 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
3வது: 3600 kJ·mol−1 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அணு ஆரம் | 222 பிமீ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கீட்டு ஆரை | 215±11 pm | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வான்டர் வாலின் ஆரை | 268 பிமீ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிற பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
படிக அமைப்பு | body-centered cubic | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
காந்த சீரமைவு | paramagnetic[1] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மின்கடத்துதிறன் | (20 °C) 332 nΩ·m | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வெப்ப கடத்துத் திறன் | 18.4 W·m−1·K−1 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வெப்ப விரிவு | (25 °C) 20.6 µm·m−1·K−1 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒலியின் வேகம் (மெல்லிய கம்பி) | (20 °C) 1620 மீ.செ−1 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
யங் தகைமை | 13 GPa | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நழுவு தகைமை | 4.9 GPa | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பரும தகைமை | 9.6 GPa | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மோவின் கெட்டிமை (Mohs hardness) | 1.25 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
CAS எண் | 7440-39-3 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முதன்மைக் கட்டுரை: பேரியம் இன் ஓரிடத்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பேரியம் (Barium) என்பது Ba என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் தனிமம் ஆகும். இதன் அணு எண் 56 மற்றும் இதன் அணுக்கருவில் 82 நொதுமிகள் உள்ளன. பேரியம் ஒரு மென்மையான உலோகம் ஆகும். வெள்ளி தனிமத்தைப் போல வெண்மை நிறம் கொண்டு பளபளப்பாக காணப்படுகிறது. உயர் வினைத்திறன் காரணமாக பேரியம் இயற்கையில் தனித்துக் கிடைப்பதில்லை. ஆதியில் இதனுடைய ஐதராக்சைடு பேரிடா என்ற பெயரில் அறியப்பட்டிருந்ததாகக் கருதப்படுகிறது. ஒரு கனிமமாக இது அப்போது காணப்படவில்லை என்றாலும் பேரியம் கார்பனேட்டை சூடுபடுத்தி தயாரிக்கப்பட்டது.
பேரைட்டு எனப்படும் பேரியம் சல்பேட்டு (BaSO4), விதரைட்டு எனப்படும் பேரியம் கார்பனேட்டு (BaCO3) இரண்டும் இயற்கையில் தோன்றுகின்ற பொதுவான கனிமங்களாகும். இவ்விரண்டு கனிமங்களும் நீரில் கரைகின்றன. கனம் என்ற பொருள் கொண்ட கிரேக்க மொழிச் சொல்லான பேரிட்டா என்ற சொல்லில் இருந்து பேரியம் என்ற சொல் வருவிக்கப்பட்டுள்ளது. பேரிக் என்ற சொல் பேரியத்தின் பெயரடையாகப் பயன்படுத்தப்படுகிறது. 1774 ஆம் ஆண்டு பேரியம் ஒரு புதிய தனிமமாக அடையாளம் காணப்பட்டது. ஆனால் 1808 ஆம் ஆண்டு மின்னாற்பகுப்பு வரை பேரியத்தை ஒரு தனிமமாக ஒடுக்க முடியவில்லை.
பேரியத்திற்கென சில தொழிற்சாலைப் பயன்கள் உண்டு. வரலாற்றில் வெற்றிட குழாய்களுக்கான வளிம நீக்கியாகவும், மறைமுகமாக சூடேற்றப்படும் எதிர்மின் வாய்களின் மேல் ஆக்சைடு வடிவத்தில் உமிழும் பூச்சாகவும் பேரியம் பயன்படுத்தப்பட்டது. உயர் வெப்ப நிலை மீக்கடத்திகள் மற்றும் மின் வேதியியல் பீங்கான்களில் இது பகுதிப்பொருளாக உள்ளது. நுண்கட்டமைப்பில் கார்பன் மணிகளின் அளவைக் குறைக்க எஃகு மற்றும் வார்ப்பிரும்புடன் பேரியம் சேர்க்கப்படுகிறது. பேரியம் சேர்மங்கள் பச்சை நிறத்தை வழங்குவதற்காக வானவேடிக்கைக்கு பயன்படுத்தப்படும் வான வெடிகளில் சேர்க்கப்படுகின்றன.
பேரியம் சல்பேட் எண்ணெய் நன்கு துளையிடும் திரவத்திற்கும், அதே போல் ஒரு தூய்மையான வடிவத்திற்கும் ஒரு உயிரற்ற சேர்மமாக பயன்படுத்தப்படுகிறது, இது மனித இரைப்பை நுண்ணுயிர் டிராக்டை உருமாற்றுவதற்காக எக்ஸ்-ரே ரேடியோ கான்ட்ராஸ்ட்ராட் முகவர்களாக உள்ளது. கரையக்கூடிய பேரியம் அயன் மற்றும் கரையக்கூடிய கலவைகள் நச்சுத்தன்மையுடனானவை. பேரியம் சல்பேட்டை ஒரு கரையாத கூட்டுப்பொருளாக எண்ணெய் கிணறுகள், துளையிடும் பாய்மங்களில் பயன்படுத்தப்படுகிறார்கள். மனித இரைப்பை பாதையை படம்பிடிக்கும் எக்சு கதிர் தொழில் நுட்பத்தில் தூய்மையான பேரியம் பயன்படுத்தப்படுகிறது. கரையக்கூடிய பேரியம் அயனிகள் மற்றும் கரையக்கூடிய பேரியம் சேர்மங்கள் கொறிக்கும் விலங்குகளைக் கொல்லும் மருந்துகளாகப் பயன்படுகின்றன.
இயற்பியல் பண்புகள்
[தொகு]பேரியம் ஒரு மென்மையான வெண்மையான வெள்ளியைப் போன்ற தோற்றம் கொண்ட ஒரு உலோகமாகும். மீத்தூய்மையுடன் காணப்படும் பேரியம் சற்று தங்கம் போன்ற நிறத்துடன் காணப்படுகிறது[2]:2 . பேரியத்தின் வெண்மை நிறம் காற்றில் அது ஆக்சிசனேற்றம் அடையும் போது மங்கலாகின்றது. அடர் சாம்பல் நிற ஆக்சைடு படலம் உருவாகிறது. நடுத்தரமான அலகு எடையும், நல்ல மின் கடத்துத்திறனும் கொண்டதாக பேரியம் உள்ளது. மீத்தூய பேரியத்தைத் தயாரிப்பது மிகவும் கடினமான செயலாகும். எனவே பேரியத்தின் துல்லியமான பண்புகளையும் இதுவரை கண்டறிய இயலாமல் உள்ளது.
அறை வெப்ப நிலை மற்றும் அழுத்தத்தில் பேரியம் பொருள் மைய கனசதுரக் கட்டமைப்பில் பேரியம்-பேரியம் பிணைப்பு இடைவெளி 503 பைக்கோமீட்டருடன் காணப்படுகிறது. சூடுபடுத்தும் போது தோராயமாக 1.8×10−5/°செ வீதத்தில் விரிவடைகிறது. மோவின் கடினத்தன்மை அளவு 1.25 இருப்பதால் பேரியம் மிகவும் மென்மையான உலோகமாகக் கருதப்படுகிறது. 730 பாகை செல்சியசு என்ற வெப்ப நிலையை உருகு நிலையாக பேரியம் கொண்டுள்ளது. இது இசுட்ரோன்சியம் தனிமத்தின் உருகு நிலையைக் காட்டிலும் குறைவாகவும், கன உலோகமான ரேடியத்தின் உருகு நிலையைக் காட்டிலும் அதிகமானதாகவும் உள்ளது. எனினும் இதனுடைய கொதி நிலை இசுட்ரோன்சியத்தின் கொதி நிலையைக் காட்டிலும் அதிகரித்து காணப்படுகிறது.(3.62 கி/செ,மீ3) என்ற பேரியத்தின் அடர்த்தி இசுட்ரோன்சியத்திற்கும் (2.36 கி/செ.மீ3) ரேடியத்திற்கும் (~5 கிராம்/செ.மீ3) இடைப்பட்டதாக உள்ளது.
வேதிப்பண்புகள்
[தொகு]வேதியியல் பண்புகளைப் பொறுத்தவரை பேரியத்தின் வேதிப்பண்புகள் மக்னீசியம், கால்சியம், இசுட் ரோன்சியம் ஆகிய தனிமங்களின் வேதிப்பண்புகளை ஒத்துள்ளது. பேரியம் எப்போதும் +2 என்ற ஆக்சிசனேற்ற நிலைகளை வெளிப்படுத்துகிறது. BaF போன்ற சில அரிய சேர்மங்கள் மற்றும் நிலைப்புத்தன்மை அற்ற மூலக்கூற்று இனங்கள் மட்டும் வாயு நிலையில் காணப்படுகின்றன. சால்கோசென்களுடன் பேரியம் ஈடுபடும் வினை வெப்ப உமிழ்வினையாகும். ஆக்சிசன் மற்றும் காற்றுடன் அறை வெப்ப நிலையில் இது வினைபுரிகிறது. எனவே பேரியத்தை எண்ணெய்க்கு அடியில் அல்லது மந்தமான சூழலில் சேமிக்க வேண்டும். கார்பன், நைட்ரசன், பாசுபரசு, சிலிக்கன், மற்றும் ஐதரசன் போன்ற அலோகங்களுடன் பேரியம் ஈடுபடும் வினையும் வெப்ப உமிழ்வினையாகும். சூடுபடுத்தும் போது இவ்வினைகள் நிகழ்கின்றன. தண்ணீர் மற்றும் ஆல்ககால்களுடன் இது ஈடுபடும் வினையும் வெப்ப உமிழ் வினையாகும். இவ்வினையின் போது ஐதரசன் வாயு வெளியிடப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Magnetic susceptibility of the elements and inorganic compounds, in Lide, D. R., ed. (2005). CRC Handbook of Chemistry and Physics (86th ed.). Boca Raton (FL): CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0486-5.
- ↑ Kresse, Robert; Baudis, Ulrich; Jäger, Paul; Riechers, H. Hermann; Wagner, Heinz; Winkler, Jocher; Wolf, Hans Uwe (2007). "Barium and Barium Compounds". In Ullman, Franz (ed.). Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Wiley-VCH. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a03_325.pub2.